தகவல் தொழில்நுட்பக் கல்வியின் எதிர்காலத்தை மேம்படுத்தல்
டிபி சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸை இலங்கையின் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கல்வி வலுவூட்டலின் முன்னோடியாக கூற முடியும். டிபி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மற்றும் தலைவர் திரு . தம்மிக்க பெரேராவின் எண்ணக்கருவில் உருவான இந்த வேலைத்திட்டமானது வகுப்பறை கற்றல் மற்றும் உலகில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கிடையில் காணப்படும் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டதாகும் .
மூலோபாய இலக்கு மற்றும் நோக்கம்
உலகின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கென , நவீன தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கும் மற்றும் உலக சந்தையிலுள்ள தொழில் வாய்ப்புகளுக்கேற்க அவர்களை தயார்படுத்தும் வகையிலும் டிபி சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.
தொழிற்துறையில் காணப்படும் நடைமுறைப் பயன்பாடு மற்றும் உயர் தரத்திலான பயிற்சி முறைகளை உபயோகித்து சர்வதேச ரீதியில் போட்டியிடக்கூடிய புதிய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதே இதன் நோக்காகும்.
விரிவான கல்விக் கட்டமைப்பு
சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸானது, விரிவான தகவல் தொழில்நுட்ப கல்வியின் பிரதான கேந்திர நிலையமாகவும், வெப் டெவலப்மன்ட் தொடர்பான சிறப்பு கற்கைகள் , சைபர் பாதுகாப்பு, மென்பொருள் பொறியியல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் சிறப்பு கற்கைகளையும் வழங்குகிறது. முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்களுடன் இணைந்து செயற்பட்டு, சர்வதேச தரத்திற்கமைவாக உயர்மட்டத்தில் மாணவர்கள் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது.
தொழில்சார் நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்ளல்
டிபி எடியுகேஷன் சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸின் பிரதான நோக்கமானது, தொழிற்துறையில் நிபுணத்துவத்தை வழங்குவதாகும். சிறந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து, டிபி அறக்கட்டளை மாணவர்களுக்கு சிறந்த அனுபவம் மற்றும் வழிகாட்டல் வாய்ப்புக்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது, இந்த நடைமுறை பயிற்சி செயற்பாடுகளினூடாக மாணவர்களுக்கு தொழிற்துறை போக்குகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் தொடர்பான தெளிவை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
தேசிய அபிவிருத்தி இலக்குகளுக்கு ஒத்துழைப்பு வழங்கல்
டிபி எடியுகேஷன் சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸின் மற்றுமொரு நோக்கமானது, தனிப்பட்ட தொழில் முன்னேற்றத்திற்கு அப்பால் சென்று, தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை இயக்கும் திறன் கொண்ட திறமையாளர்களை உருவாக்கி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதாகும். வேலை வாய்ப்புகள் மற்றும் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம், டிபி அறக்கட்டளை நாடு முழுவதும் நிலையான அபிவிருத்தி மற்றும் செழிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
சமூக ஈடுபாடு மற்றும் விரிவாக்கம்
பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதற்கு மேலதிகமாக டிபி எடியுகேஷன் சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸ் சமூக ஈடுபாடு மற்றும் செயற்பாட்டு மேம்பாட்டுக்கென அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. பின்தங்கிய சமூகங்களைச் சென்றடைவது மற்றும் இளைஞர்களிடையே டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கென சிறப்பு திட்டங்களை ஒழுங்கு செய்யும் நடைமுறை இதனூடாக மேற்கொள்ளப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப கல்விக்கான அனுமதியை தடையின்றி மேம்படுத்துவதும் பல்வேறு பின்னணிகளைக் கொண்டவர்களுக்கு உத்வேகம் அளிப்பதும் இதன் நோக்கமாகும்.
முடிவுரை
டிபி எடியுகேஷன் சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸ்; இலங்கையின் தகவல் தொழில்நுட்பத்துறையில் விசேட நிலையை அடைவதற்கான பயணத்தின் முக்கிய மைல் கல்லாகும். பாடக் கல்வியுடன் நடைமுறை தொழிற்துறைக்காக பிள்ளைகளை ஈடுபடுத்துவதனூடாக, சகல தகவல் தொழில்நுட்ப தொழிற்துறையினரும் முன்னேறக்கூடிய வளமான எதிர்காலத்திற்காக வழியை ஏற்படுத்திக்கொடுக்க டிபி அறக்கட்டளை நடவடிக்கை எடுக்கின்றது. தகவல் தொழில்நுட்ப துறையானது, நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வரும் நிலையில், டிபி அறக்கட்டளை திறமைகளை ஊக்குவித்தல், புத்தாக்கத்தை வளப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் அறிவுடன் கூடிய சமூகத்தை உருவாக்குவதற்கு அர்ப்பணித்துள்ளது. மாற்றமடையும் தொழில்நுட்ப உலகில் வெற்றியடைவதற்கு தேவையான கருவிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு டிபி எடியுகேஷன் சிலிகன் வெலி ஐ.டீ ஒபிஸ்; இந்த அர்ப்பணிப்புக்கு சாட்சி பகிர்கிறது.