டிபி ட்ரீ புக், இலங்கையில் அழிவடையும் அச்சுறுத்தலில் உள்ள தாவர வகைகளை விசேட செயற்பாடுகளின் ஊடாக பாதுகாத்தல் மற்றும் மீள்நடுகை செய்வதற்கும், அதனூடாக எதிர்கால சந்ததியினருக்கு உயிரியல் பல்வகை தன்மையுடன் கூடிய, இயற்கை சுற்றுச்சூழலை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. அழிவடையும் நிலையிலுள்ள தாவர இனங்களை மிகவும் சூட்சுமமான முறையில் பட்டியல் படுத்துதல், குறித்த தாவரங்களை முறையாக நடுகை செய்வதன் ஊடாக, டிபி அறக்கட்டளையின் நோக்கமானது, நாடு முழுவதும் உயிரியல் பல்வகைத் தன்மையை பாதுகாத்தல், நிலையான இயலுமையைக் கொண்ட பாரம்பரியத்துடன் சுற்றுச்சூழல் கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும்.
வளமான உயிரியல் பல்வகைத்தன்மைக்கு உரிமை கோறும் இலங்கையின் எமது உயிரியல் கோலத்திற்கு மிகத்தேவையான அபூர்வ மற்றும் அழிவடையும் நிலையிலுள்ள விசேட மர வகைகள் சூழல் கட்டமைப்புக்காக உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவையாகும் . எனினும் குறித்த மரங்கள் காடழிப்பு மற்றும் காலநிலை சீர்கேட்டினால் குறிப்பிடத்தக்களவு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. ட்ரீ டெக்கிங் முறையின் ஊடாக டிபி அறக்கட்டளையின் மூலம் தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பு பொறிமுறைகளில் ஆர்வத்துடன் பங்கேற்பதற்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. மரங்களை டெக் செய்தல் மற்றும் கண்காணிப்பதற்கு பங்கேற்பதன் மூலம் முக்கிய வாழ்விடங்களை பாதுகாக்கவும் , காற்றை தூய்மைப்படுத்தவும் மற்றும் ஒட்டுமொத்த உலகின் நலனுக்கு நேரடி பங்களிப்பை வழங்குவதற்கு சகலருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
டிபி ட்ரீ புக் ஊடாக பசுமையான எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கான இணையுமாறும் மரத்தின் இருப்புக்கு தமது பங்களிப்பை வழங்குமாறும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. குறித்த வேலைத்திட்டத்தினூடாக தொடர்புபடும் ஆதரவாளர்களுக்கு சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்குவது மாத்திரமன்றி, அறிவை பெற்றுக்கொள்வதற்கும் இலங்கையின் இயற்கை பாரம்பரியம் தொடர்பில் ஆழமாக ஆராய்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. நடுகை அமர்வு கல்வி செயலமர்வுகள் ஆலோசனை அமர்வுகள் ஊடாக உரிய வகையில் தெளிவடைவதன் ஊடாக இந்த பெறுமதியானவற்றின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
டிபி அறக்கட்டளையின் ட்ரீ டெக்கிங் வேலைத்திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்கு எமது பங்களிப்பு உதாரணமாகும். சுற்றுச்சூழல் சவால்கள் தொடர்பில் ஆழமான புரிந்துணர்வை வழங்குவதன் ஊடாக, செயற்பாட்டு ரீதியிலான பாதுகாப்பு செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக டிபி அறக்கட்டளை, மனிதர்களுக்கு ஏற்புடைய இயற்கை வளங்களை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறது. இலங்கையில் சுற்றுச்சூழல் பாரம்பரியத்திற்காகவும் , எதிர்கால சந்ததியினருக்கு நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவும் எம்முடன் இணையுங்கள்.