நாட்டம் ஆகியவற்றை பின்தொடர்வதன் ஊடாக
வெற்றிக்கான பாதை திறக்கப்படுகிறது ."
தம்மிக்க பெரேரா
என் திட்டம்
புதிய படைப்புகள் பிறக்கும் புதிய யுகத்தை நோக்கி இலங்கை மக்களை அழைத்துச் செல்வது திரு.தம்மிக்க பெரேராவின் மற்றுமொரு திட்டமாகும். கல்வித் துறை முதல் தொழில் உற்பத்தித் துறை வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் பின்னணியை கற்பனை செய்து பாருங்கள்.
இவ்வாறானதொரு பின்னணியை இலங்கையில் உருவாக்கி, இலங்கையை உலகளாவிய ரீதியில் முன்னேற்றகரமான நிலைக்குக் கொண்டுவரும் முயற்சியே இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீடுகளை இந்த நாட்டிற்கு கொண்டு வருவது இந்த அறக்கட்டளையின் மற்றொரு குறிக்கோளாகும். அவ்வாறு செய்ய, முதலீட்டாளர்கள் முக்கிய பொருளாதாரத் துறைகளில் செய்யப்படும் முதலீடுகளில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் வரி செலுத்தாமல் இருப்பதற்கான அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
திரு.தம்மிக பெரேரா இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை உயர்த்துவதற்கு பல்வேறு உத்திகளை நடைமுறைப்படுத்தி வருகின்றார். வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் திறமையான, வலிமையான மற்றும் அறிவுள்ள பணியாளர்களை உருவாக்குவது, உலகத்துடன் இணைந்து பணியாற்றக்கூடிய மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வது அவரது மற்ற நோக்கங்களில் ஒன்றாகும். நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது போன்று பல்வேறு வாய்ப்புகளுடன் கூடிய ஆக்கப்பூர்வமான சமூகத்தை கட்டியெழுப்ப அவர் எண்ணுகிறார். இது இலங்கையை அதன் உண்மையான ஆற்றலுக்கு அழைத்துச் சென்று உலக அரங்கில் ஒரு மாபெரும் நாடாக உயர்த்துவதற்கான ஒரு திட்டமாகும்.
இலங்கையை வெகுதூரம் அழைத்துச் செல்வதற்கான திரு.தம்மிக்க பெரேராவின் திட்டம் மற்றும் தொலைநோக்கு பற்றிய மேலதிக உண்மைகளுடன் நாம் பரிசீலிப்போம்.