"வெற்றி என்பது மைல்கற்களை அடைவது மட்டுமல்ல; அது உங்களைச் சுற்றியுள்ள உலகில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதாகும்."

தம்மிக்க பெரேரா

என்னைப் பற்றி

தனிப்பட்ட பண்புகள்

தம்மிக பெரேரா எனும் பெயர் இலங்கையில் மிகவும் பிரபலமான பெயராக பரவி இருப்பது வணிகத் துறையில் அவர் கட்டியெழுப்பி இருக்கும் பிரமாண்டமான பிம்பம் , அவர் மிகவும் பொறுப்பான பாத்திரத்தை வகித்து நாட்டிற்கு பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நபராக மாறி இருப்பதாலும் ஆகும் .

சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் துணிச்சலான தொழிலதி பராகவும் தான் பலராலும் அவர் அறியபடுகிறார். உண்மையிலேயே தம்மிக பெரேரா , இந்த நாட்டிற்காக மிகபெரிய மாற்றம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய ஆளுமை கொண்ட சிறந்த மனிதர்.

60களின் பிற்பகுதியில், பயகலாவில் சிறிய கிராமத்தில் பிறந்த திரு . தம்மிக்க பெரேரா அவர்கள் , தனது அர்ப்பணிப்பால் கோடீஸ்வர வர்த்தகராக மாறிய கதை மிகவும் ஆச்சரியமானதும் மிகவும் முன்மாதிரியானதும் ஆகும். தம்மிக்க பெரேரா தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்தே வியாபாரத்தில் சிறப்புத் திறனை வெளிப்படுத்திய ஒரு மேதை. அந்தத் திறமைகளைக் கொண்டு இறுதியாக முழு இலங்கையும் அறிந்த ஒரு மாபெரும் கதாபாத்திரமாக மாறுகிறார். தனக்குத் தெரிந்த உத்திகளைப் பயன்படுத்தி மற்றும் புதிய மூலோபாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், அவர் உற்பத்தித் துறையிலிருந்து நிதித் துறை வரை ஒரு பெரிய நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.

அந்த வகையில், நாட்டின் பொருளாதாரத்திலும் அழியாத பங்களிப்பைச் செய்து, திறமையான தொழிலதிபர் என்று வகையில் தனது பெயரை அழியாத முத்திரையாக பதித்தார்.

திரு.தம்மிக்க பெரேரா அவர்கள் கடந்த வருடங்கள் முழுவது உற்பத்தி, வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் துறைகளின் வளர்ச்சிக்காக பாரிய அளவில் தனது செல்வத்தை முதலீடு செய்துள்ளார். அவரது அளப்பரிய அர்ப்பணிப்பு காரணமாக, இலங்கையின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் சிலவற்றின் பங்குகளையும் அவரால் வைத்திருக்க முடிகிறது. அவரது பெரும் முயற்சியின் பலனாக 2013ஆம் ஆண்டு இலங்கையின் மிகப் பெரிய பணக்காரர் ஆனார். மேலும், அவரது புத்திசாலித்தனமான வணிக புத்திசாலித்தனத்தால், அவர் ஒரு திறமையான தொழிலதிபராக பிரபலமானார்.

திரு. தம்மிக்க பெரேராவின் செல்வாக்கு அவரது தொழில்களுக்கு அப்பாற்பட்டது. ஜூன் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அவரது வழிகாட்டுதல், தலைமைத்துவம் மற்றும் அவர் வழங்கிய நிபுணர் கருத்துக்கள் மிகவும் முக்கியமானதாக இருந்தது . திரு.தம்மிக்க பெரேரா அவர்களின் மனைவி திருமதி . பிரிசில்லாவுடன் இணைந்து ஸ்தாபிக்கப்பட்ட தம்மிக்க மற்றும் பிரிசில்லா பெரேரா அறக்கட்டளை, நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை மேம்படுத்த பெரும் பணியை செய்துள்ளது.

DP Education போன்ற கல்விக் கருவிகளை உருவாக்கி, இலட்ச கணக்கான குழந்தைகள் இலவச ஆன்லைன் கல்வியைப் பெறும் முறையை உருவாக்கி, நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்த திரு.தம்மிக்க பெரேரா அயராது உழைத்துள்ளார்.

திரு.தம்மிக்க பெரேராவின் மகத்தான இலக்குகள் மற்றும் இலட்சியங்களுக்கு எல்லையே இல்லை என்பது தெளிவாகிறது. அவர் இலங்கையின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன், புதிய விஷயங்களை உருவாக்குகிறா அவர் மிகவும் விடாமுயற்சியும் செயல்படும் சிறந்த தொழிலதிபரும் ஆவார் .

திரு.தம்மிக்க பெரேரா அவர்களுக்கு தொழில் மட்டத்தில் மிகவும் வெற்றிகரமான மற்றும் முன்மாதிரியான பயணத்தை உள்ளது . அதேபோல அந்தப் பயணத்தை தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்லும் வகையில், அவருக்கு மிகச் சிறந்த பார்வையை போலவே காணப்படும் அமைப்பை உடைத்து புதிய அமைப்பை உருவாக்கும் தைரியமும் மற்றும் இலக்குகளைத் தொடரும் இடைவிடாத குணமும் உள்ளது.