01

டிபி எடியுகேஷன் ஐ.டீ கெம்பஸ் ஆனது அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இணைந்து , பல்வேறு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கற்கைநெறிகளை வழங்குகிறது.

டிபி எடியுகேஷன் ஐ.டீ கெம்பஸ், ஊடாக மொரட்டுவ பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம் மற்றும் ரூஹுணு பல்கலைக்கழகம் உட்பட மதிப்பிற்குரிய பல்கலைக்கழகங்களின் உதவியுடன் பல்வேறு தகவல் தொழில்நுட்ப கற்கைநெறிகளை வழங்குகிறது. இந்த கற்கைநெறிகள் புல்- ஸ்டாக் டெவலப்மென்ட் , கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, ஐ. ஒ. டீ , UI/UX டிசைன், மொபைல் அப்ளிகேஷன் டேவலோப்மென்ட் மற்றும் ப்ரொஜெக்ட் மெனேஜ்மன்ட் போன்று தகவல் தொழில்நுட்பத்தில் அத்தியாவசிய பாடங்கள் உள்ளடக்குகிறது.

SAP Enterprise Resource Planning (ERP) பாடத்திட்டம் போன்ற சிறப்பு வேலைத்திட்டங்கள் ஊடக பாடத்திட்டத்தை மேலும் வளப்படுத்தி பட்டதாரிகளுக்கு தொழில் சார்ந்த திறன்களை பெற்றுக்கொடுப்பது இதன் மூலம் நடைபெறுகிறது. டேட்டா சயின்ஸ், மெசின் லேர்னிங் மற்றும் AI தொழிநுட்பம் பற்றி கற்பித்தல் ஊடாக தொழில்நுட்ப கல்வியில், மாணவர்களை முன்னேக்கி கொண்டு வர டிபி எடியுகேஷன் அர்ப்பணித்து செயல்படுகிறது.

நாட்டில் அனைத்து மாவட்டத்திலும் உள்ள பிள்ளைகளுக்கு தரமான கல்வியை பெறக்கூடிய சந்தர்ப்பத்தை வழங்க , நாடு முழுவதும் 83 இடங்களில் இந்த பல்கலைகழகத்தின் வலையமைப்பை இதுவரையில் பெற்றுக்கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு திட்டத்தின் ஊடாக அனைவருக்கும் கல்வியை இலவசமாக பெற்றுக்கொடுப்பதுடன் டிஜிட்டல் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமையான பணியாளர்களை உருவாக்க பல்வேறு துறைகளில் திறமையானவர்களை உருவாக்குவதும் இதன் ஊடாக நடைபெறுகிறது.

டிபி எடியுகேஷனின் நெறிமுறையின் மையமாவது நிலைபேறான தன்மை மற்றும் உள்ளடங்களும் ஆகும். அனைவருக்கும் சமமாக அணுக கூடிய உலக தரம் வாய்ந்த கல்வியை பெற்றுக்கொடுத்து, டிஜிட்டல் பிளவைக் குறைத்து , டிஜிட்டல் சகாப்தத்தின் மூலம் பொருளாதாரத்தின் ஊடாக உயர்நிலைக்கு கொண்டுவர தனிநபர்களுக்கு அதிகரமளிக்கவும் இந்த பல்கலைகழகத்தின் ஊடாக எதிர்பார்க்கபடுகிறது .

திரு. தம்மிக்க பெரேராவின் தொலைநோக்கு மிக்க தலைமைத்துத்தின் ஊடாக சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த ஒரு உந்துசக்தியாக டிபி எடியுகேஷன் ஐ.டீ கெம்பஸ் வலையமைப்பு இந்த மாற்றங்களை செய்கிறது.

டிபி எடியுகேஷன் ஐ.டீ கெம்பஸ் வலையமைப்பு ஒவ்வொரு நாளும் வளர்ந்து , அதில் உள்ள நன்மைகளை தொடர்ந்து வழங்கி மேலும் விரிவடைந்து , டிஜிட்டல் உலகின் உள்ளே தனது சிறப்பை விளங்குவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அறிவைக் கொண்ட இலங்கையின் இளைய தலைமுறை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. வெற்றிகரமான கூட்டாண்மைகளை உருவாக்கிக்கொண்டு , புதுமையான பாடத்திட்டங்களை உருவாக்கி , மற்றும் கல்வி அணுகுமுறையை விரிவடைய செய்து , டிபி எடியுகேஷன் ஐ.டீ கெம்பஸ் இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கு தயாராக உள்ளது.

அடுத்த தலைமுறை தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் முன்னோடிகளை உருவாக்குவதற்கு தொடங்கி இருக்கும் இந்த மாற்றத்திற்கான பயணத்தில் நீங்களும் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.