“படைப்புத் தொழில் நாட்டின் சக்தி வாங்ந்த வளங்களில் ஒன்றாகும், இது நமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நமது ஆன்மா ஆகிய இரண்டிற்கும் மதிப்புச் சேர்க்கிறது” தம்மிக்க பெரேரா
இலக்குகள்
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு சுற்றுலாத் துறை மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல்.
உள்நாட்டு சுற்றுலாத்துறை மற்றும் கலாச்சாத்தின் வளர்ச்சிக்கான முக்கிய ஊக்கியாக கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இலங்கையின் தனித்துவத்தை ஊக்குவித்தல்.
உள்நாட்டு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்தில் அறிவு மிக்க, திறமையான, ஆக்கபூர்வமான மற்றும் புதுமையான மனித மூலதனத்தை உருவாக்குதல்.
செயற் திட்டம்
கலைகளை வளர்ப்பதற்காக மூலோபாயத் திட்டம்.
இலங்கையின் அனைத்து சுற்றுலா பயணிகள் தளங்களி;லும் கலை சந்தைகளை விருத்தி செய்தல்.
வெளிநாட்டவர்களுக்கு கன்வாஸ்களை எடுத்துச் செல்வதற்காக பயன்படும் சித்திர சேமிப்பக குழாய்களை உள்நாட்டு கலைஞர்களுக்கு மலிவான விலையில் கிடைக்கச் செய்தல்.
இலாப நோக்கற்ற நிறுவனங்களின் உதவியுடன் பாரம்பரிய கலைகளை மேம்படுத்த ஒரு வலைத்தளத்தை தொடங்குதல். மேலும், உலகெங்கிலும் அதிகம் விற்பனையாகும் கலைப்படைப்புகளின் வண்ணங்களைப் பயன்படுத்த உள்நாட்டு கலைஞர்களுக்கு அறிவுறுத்துதல்.
உள்நாட்டு கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புக்களைவ விற்க அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட ஒன்லைன் தளத்தை உருவாக்குதல்..
ஒன்லைன் கலை சஞ்சிகைகளை பிரசுரித்தல்.
சர்வதேச அளவில் புகழ்ப்பெற்ற கலைக் கூடங்கள் மற்றும் கூட்டுப் பணியிலிருந்து ஓவியங்கள், சிற்பங்கள், நிறுவல்கள் மற்றும் புகைப்படங்களை உள்ளடக்கிய ஒரு கலை கண்காட்சியை ஏற்பாடு செய்தல்.
கலை மற்றும் கலாசாரம் தொடர்பான உலக உச்சி மாநாட்டை இணைந்து நடாத்துதல்.
கலை மற்றும் கலாச்சார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க வரி சலுகைகளை வழங்குதல்.
ளுவசயவநபiஉ pடயn கழச ஊரடவரசந – கலாச்சாரத்திற்கான மூலோபாய திட்டம்.
இலங்கையின் மாறுபட்ட கலாச்சார, மத மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் யூடியூப் செனலை ஆரம்பித்தல்.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, பல்வேறு கலாச்சாரங்களின் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
வெளிநாடுகளில் உள்நாட்டு கலாச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் சுற்றுலாவை ஊக்குவிக்கத்தல்.
உள்நாட்டு மற்றும் சர்வதேச திறமைகளைக் கொண்ட ஐந்து நாள் இலவச கலை விழாவை ஏற்பாடு செய்தல்.
படைப்பாளிகள், தனியார் முதலீட்டாளர்கள் அல்லது வணிகர்கள், நுகர்வோர், ஒழுங்குப்படுத்தும் அமைப்புகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே ஒரு இணைப்பாளராக செயற்பட ஒரு கலாச்சார பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவுதல்.
பின்வரும் வகைகளில் பிராந்திய தகவல்களை உள்ளடக்கிய கலாச்சார வரைபடத்தை கொண்டிருத்தல்:
கலை நிகழ்ச்சி
பாரம்பரிய உணவு வகைகள்
பாரம்பரிய விளையாட்டுக்கள்
பாரம்பரிய மரபுகள்
பாரம்பரிய ஆடை
உள்நாட்டு கலை மற்றும் கலாச்சாரத்தில் முக்கிய நபர்கள்.
கலை உட்கட்டமைப்பு
கலாச்சார செயற்பாட்டு நாட்காட்டியினை உருவாக்குதல்.
அனைத்து மாவட்டங்களிலும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.
கல்வித் திட்டங்கள் மூலம் கலாச்சார மரபுகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவித்தல்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான பயிற்சி, சமூக மேம்பாடு மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடாத்துதல்.
கடினப் பிரதிகளை இலத்திரனியல் புத்தகம் அல்லது ஓடியோ கோப்புகளாக வெளிடுபவர்களை ஊக்குவித்தல்.
உள்நாட்டு எழுத்தாளர்களின் உலகளாவிய முறையீட்டை வளர்க்க அவர்களுக்கு உதவுதல்.
அருங்காட்சியகங்களில் மெய்நிகர் சுற்றுப் பயணங்களை வழங்குதல்.
உள்நாட்டு அருங்காட்சியகங்களின் தரங்களையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல்.