இலக்குகள்.

  • தேசிய இறையாண்மையையும் மற்றும் மூலோபாய முக்கியத்துவத்தையும் பாதுகாத்தல்.
  • நிலம், கடல் மற்றும் வான் எல்லை முகாமைத்துவம்.
  • பாதுகாப்பு களம் தொடர்பான விடயப்பரப்பில் சர்வதேச கூட்டுதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்களை கட்டியெழுப்புதல்.

Snow

செயற் திட்டம்

  1. தேசிய பாதுகாப்பை அதிகப்படுத்துதல்
  2. பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக ‘சகிப்புத் தன்மை இன்மை’ (“ணுநசழ வுழடநசயnஉந”) கொள்கையினை செயற்படுத்தல்.
  3. அனைத்து அங்கங்களுக்குமிடையில் திறம்பட தொடர்பாடலைப் பேணுவதற்காக, முப்படை மற்றும் காவல் துறையின் உளவுத்துறை செயற்பாடுகளுக்கு பொறுப்பாக ஒரு அங்கீகாரமளிக்கப்பட்ட தலைவரை நியமித்தல்.
  4. உளவுத் துறையினை தொழில் முறை சேவையாக கருதி, சிறந்த திறமைசாளிகளை கவர்ச்சிகரமான சம்பளத்திற்காக சேவையில் இணைத்துக் கொள்ளுதல்.
  5. உளவுத்துறை அதிகாரிகளை அரசி;யல் தலையீடுகளில் இருந்து பாதுகாப்பதற்கு தேவையான சட்டக் கட்டமைப்பை அறிமுகம் செய்தல்.
  6. உளவுத் துறை அதிகாரிகளை வெளிநாட்டு உளவுத் துறை அதிகாரிகளுடன் இணைப்பதுடன் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சியினை வழங்குதல்.
  7. கடலோர பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.
  8. படை வீரர்களின் நலன் மற்றும் மீள்குடியேற்றத்திற்கான பயனுள்ள கட்டமைப்பை அமுல்;படுத்துதல்.
  9. பயோமெட்ரிக் தொழில்நுட்பங்களுடன் இணைந்தவாறு காவல் துறையினை எண்மயமாக்குதல்.
  10. கண்காணிப்புக் கெமராக்கள் மூலம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை அமுல்;படுத்துவதன் மூலம் குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளை எந்த இடத்திலும் அடையாளம் காணுதல்.