இலக்குகள்
- வறுமை இன்மை
- பூச்சிய அளவில் பசி
- பாலின சமத்துவம்.
- கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி
- சமமின்மையை குறைத்தல்.
சமூக இடமாற்றங்கள்
வறுமையில் வாழ்வோர் அல்லது வறுமைக்கு உள்ளாகும் அபாயம் உடையோரது சமூக இடமாற்றங்கள்.
சமூக இடமாற்றங்கள் பங்களிப்பு செய்யாதவையாகும், அதாவது பெறுநர்கள் காப்பீடு அல்லது குறித்த வரிகளை செலுத்துவதற்கு வேண்டப்படுவது இல்லை. வறுமையில் வாழ்வோர் அல்லது வறுமைக்கு உள்ளாகும் அபாயம் உடையோருக்கு பொது மற்றும் சிவில் அமைப்புக்களால் சமூக உதவி வழங்கப்படும். உ.ம். பங்களிப்பில்லாத ஓய்வூதியம், சிறுவர் பயன்கள், பாடசாலை உணவுகள், இயலாமைக்கான கொடுப்பனவுகள் மற்றும் விவசாய காணிக்கைகள்.
இலக்கம்.
|
விளக்கம்.
|
2014 ரூ.மில்லியன்
|
2015 ரூ.மில்லியன்
|
2016 ரூ.மில்லியன்
|
2017 ரூ.மில்லியன்
|
2018 ரூ.மில்லியன்
|
1.
|
சுகாதாரம்
|
34,805
|
31,703
|
38,028
|
38,596
|
43,440
|
1.1
|
மருந்துகள்
|
34,805
|
31,703
|
38,028
|
38,596
|
43,440
|
2.
|
பாதிக்கப்படக் கூடியவர்கள் மற்றும் தேவையுடையவர்களை மேம்படுத்துதல்.
|
18,314
|
49,189
|
51,612
|
50,862
|
51,319
|
2.1
|
சமுர்;த்தி
|
15,042
|
39,994
|
40,704
|
39,707
|
39,239
|
2.2
|
பயனாளிகளின் எண்ணிக்கை (குடும்பங்கள் மில்லியனில்)
|
1.5
|
1.4
|
1.4
|
1.4
|
1.4
|
2.3
|
முதியவர்களுக்கு உதவி (70 வயதுக்கு மேற்பட்டோர்)
|
2,655
|
8,039
|
9,060
|
9,008
|
9,590
|
2.4
|
மாற்றுத் திறனாளிகளுக்கான நாளாந்த கொடுப்பனவு.
|
138
|
220
|
247
|
195
|
31
|
2.5
|
ஊனமுற்றவர்களுக்கான நாளாந்த கொடுப்பனவு
|
479
|
936
|
1,114
|
1,083
|
1,141
|
2.6
|
சிறுநீரக நோயாளிகளுக்கான நிதி உதவி
|
–
|
–
|
487
|
869
|
1,318
|
3.
|
அரசாங்க பாதுகாப்பு படையினை மேம்படுத்துதல்.
|
18,290
|
23,433
|
26,772
|
27,808
|
45,901
|
3.1
|
படையினரின் மூன்றாம் பிள்ளைக்கான கொடுப்பனவு
|
46
|
–
|
–
|
–
|
–
|
3.2
|
இறந்த மற்றும் ஊனமுற்ற படையினருக்கான இழப்பீடு
|
18,244
|
23,433
|
26,772
|
27,808
|
45,901
|
4.
|
விவசாய அபிவிருத்தி
|
32,086
|
57,051
|
28,013
|
30,361
|
26,879
|
4.1
|
உர மானியம்
|
31,858
|
49,571
|
27,771
|
30,361
|
26,879
|
4.2
|
நெல் கொள்வனவு (நெல் விலையை இஸ்தீரப்படுத்தல்)
|
228
|
7,480
|
242
|
–
|
–
|
5.
|
வர்த்தக பயிர் அபிவிருத்தி
|
1,873
|
11,029
|
2,391
|
2,136
|
2,317
|
5.1
|
பயிர் மானியம்
|
|
|
|
|
|
5.2
|
தேயிலை
|
331
|
7,292
|
549
|
445
|
615
|
5.3
|
இறப்பர்
|
763
|
2,871
|
713
|
703
|
542
|
5.4
|
தேங்காய்
|
485
|
471
|
709
|
598
|
653
|
5.5
|
முந்திரிகை
|
40
|
35
|
40
|
54
|
67
|
5.6
|
சிறுபயிர்கள் (இலவங்கப்பட்டை,கொகோ, கோப்பி, மிளகு)
|
254
|
360
|
380
|
336
|
440
|
6.
|
பாடசாலை பிள்ளைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள்
|
14,903
|
17,984
|
22,817
|
24,923
|
20,255
|
6.1
|
பாடசாலை சீருடைகள்
|
3,574
|
2,261
|
2,157
|
2,479
|
1,073
|
6.2
|
சீசன் டிக்கெட்
|
1,695
|
1,800
|
1,998
|
4,923
|
5,000
|
6.3
|
பாடசாலை மற்றும் தர்ம பாடசாலை புத்தகங்கள்.
|
2,773
|
3,979
|
5,599
|
4,476
|
4,318
|
6.4
|
தரம் 5 புலமைப் பரிசில், மகாபொல மற்றும் பர்சரி உதவித் தொகை.
|
852
|
1,390
|
1,914
|
1,344
|
2,136
|
6.5
|
ஊட்டச் சத்து நிகழ்ச்சிகள்.
|
3,725
|
3,938
|
3,916
|
4,434
|
–
|
6.6
|
பிள்ளைகள் மற்றும் பிள்ளை பேற்றை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கான திரிபோஷா
|
1,787
|
1,956
|
1,351
|
1,692
|
1,982
|
6.7
|
பிள்ளைப் பேற்றை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கான போஷன மல்லா.
|
279
|
2,422
|
5,746
|
5,408
|
5,490
|
6.8
|
முன் பள்ளி மற்றும், பாடசாலை மாணவர்களுக்கான காலை பால்.
|
197
|
189
|
106
|
167
|
256
|
6.9
|
போஷன மன்பெத மற்றும் லமா சவிய
|
21
|
49
|
30
|
–
|
–
|
7.
|
அனர்த்த உதவி
|
549
|
389
|
243
|
5,854
|
5,279
|
|
உணவு மற்றும் வறட்சி நிவாரணம்.
|
521
|
271
|
132
|
5,854
|
5,279
|
|
சமைக்கப்பட்ட உணவு மற்றும் உலர் உணவுகள்
|
28
|
118
|
111
|
–
|
–
|
8.
|
மதத் தளங்களுக்கு
உதவி
|
50
|
50
|
–
|
–
|
–
|
8.1
|
மதத்தளங்களுக்கான நீர்.
|
50
|
50
|
–
|
–
|
–
|
9.
|
பொது நிறுவனங்களுக்கான இழப்புக்கள்
|
33,122
|
32,663
|
97,486
|
(35,777)
|
(131,436)
|
9.1
|
பெற்றோலியம் (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்)
|
–
|
19,468
|
69,620
|
3,504
|
(104,037)
|
9.2
|
மண்ணெய்.
|
–
|
–
|
–
|
–
|
|
9.3
|
மின்சாரம் (இலங்கை மின்சார சபை)
|
15,737
|
–
|
14,499
|
(49,231)
|
(29,000)
|
9.4
|
நீர்
|
–
|
252
|
2,977
|
738
|
(568)
|
9.5
|
புகையிர போக்குவரத்து.
|
11,034
|
7,714
|
6,773
|
7,595
|
–
|
9.6
|
இலங்கை போக்குவரத்துச் சபை.
|
6,351
|
5,229
|
3,617
|
1,617
|
2,169
|
10.
|
போக்குவரத்து வசதிகள்.
|
5,046
|
5,275
|
5,288
|
5,321
|
5,223
|
10.1
|
SLTB போக்குவரத்து வசதிகள் - பொருளாதார வகையறா அல்லாத வழிகள்.
|
4,770
|
4,975
|
4,999
|
5,000
|
5,004
|
10.2
|
இலங்கை இராணுவத்திற்கான போக்குவரத்து வசதிகள்
|
276
|
300
|
289
|
321
|
219
|
11.
|
பொதுவான வசதிகள்.
|
–
|
–
|
–
|
–
|
–
|
11.1
|
வீதி விளக்குகள்.
|
–
|
–
|
–
|
–
|
–
|
|
மொத்தம் (பொது நிறுவனங்களின் இழப்புக்கள் இல்லாமல்)
|
125,916
|
196,103
|
175,164
|
185,861
|
200,613
|
|
மொத்த சமூக இடமாற்றங்கள்.
|
|
|
|
|
106,049
|
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரைவிலக்கணத்தின் படி தற்போது இலங்கையின் மொத்த சமூக இடமாற்றங்கள் ரூ.106 பில்லினாகும். எனவே, இங்கு துல்லியமான வறுமைக் குறைப்பு செய்யப்படாது வறுமை அதிகரித்து வரும் குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான உதவி மட்டுமே வழங்கப்படுகின்றது.
செயற்திட்டம்
- வரவு செலவு திட்டத்தில் சமூக இடமாற்றங்கள் மற்றும் சமூக அபிவிருத்திக்காக 10% அதிகரிப்புடன் கூடிய ரூ.100 பில்லியனை மேலதிகமான ஒதுக்குதல்.
1.5 மில்லியன் குடும்பங்கள் தற்போது சமுர்த்தி திட்டத்தின் கீழ் காணப்படுகின்றன. தற்போது காணப்படும் சமுர்த்தி தி;ட்டத்தின் கீழ் தங்களுடைய வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத குடும்பங்களுக்காக, துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் கல்வியை நோக்காக கொண்ட ‘சமுர்த்தி 2’ திட்டத்தினை அறிமுகம் செய்தல்.
- சமுர்த்தி திணைக்களத்திற்கு கீழான இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தின் படியான துல்லியமான வறுமை ஒழிப்பு நிகழ்ச்சியின் கீழ் முழுமையாக வறுமையினை ஒழித்தல்.
- நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு, சரியான வடிகட்டல் வசதியுடன் ஆழமான கிணறுகளை உருவாக்கும் பொருட்டு சிறுநீரக நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை புவியியல் ரீதியாக இணங்காணுதல். ஏற்கனவே குறிப்பிடத்தக்க கிராமங்களில் அவ்வாறான வடிகட்டல் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.
உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.
உரத்தின் அதிகப்பட்ச பாவணையை 20% குறைப்பதற்கு விவசாய நோக்கங்களுக்காக மண் சுகாதார அட்டைகளை அறிமுகம் செய்தல்.
- இலங்கையில் வருடாந்தம் 23,000 புற்றுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதால், புற்றுநோயால் பீடிக்கப்பட்டவர்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு ஓய்வு பெற்ற வைத்தியர்களைக் கொண்டு தேவையான உணர்வு ரீதியான மற்றும் மன நல அறிவுரைகளை வழங்குதல்.
- மாற்றுத் திறனாளிகளை வகைப்படுத்தும் ஒரு தரவுத் தளத்தை பராமரித்தல் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அறிவுறுத்துவதற்கும், ஆதரிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் நிபுணர்களை நியமித்தல்.
- சிறுவர்ப் பாதுகாப்பு
- “baby hatches” இனை அறிமுகப்படுத்துவதன் மூலம், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வேண்டுமென்றே புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் அநேமதேயமாக விடக் கூடிய சம்பவங்களை குறைத்தல்.
- சிறுவர் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்காக வேகமான விஷேடமான நீதிமன்றங்களை அறிமுகம் செய்தல்.
- பெண்களின் பாதுகாப்பு
- பெண்களுக்கான உதவி தொலைப்பேசி இலக்கத்தை அறிமுகம் செய்தல்
பயிற்றுவிக்கப்பட்ட உதவியாளருடன் பேசி தொலைப்பேசி மூலமாகவே ஆதரவினைப் பெறுதல். தொலைப்பேசி இலக்கம் பெண்களால் பெண்களுக்காக இயக்கப்படும், மேலும் பல்வேறு கவலைகளுக்கு உதவவும், பச்சாதாபப்படவும், ஆதரவு வழங்கவும், தகவல் மற்றும் ஊக்கத்தை அளிக்கவும் முடியும். ஒரு சட்டத்தரணியுடனோ அல்லது உளவள ஆலோசகருடனோ பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடு;த்தல்..
- பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு அவர்களின் அதிர்ச்சியைச் சமாளிக்கவும், அவர்களின் அடுத்த படிகள் குறித்து முடிவுகளை எடுக்கவும் முக்கியமான சேவைகளை வழங்கும் பொருட்டு பாலியல் தாக்கத்திற்கான பராமரிப்பு நிலையத்தை (SACC)நிறுவுதல்
- Drop-in centre – தப்பிப் பிழைத்தவர்களுக்கு உடனடியாக ஒரு இடத்திலுள்ள சமூக சேவையாளரை அணுகி, முன் அனுமதி இல்லாமல் ஆலோசனைகளைப் பெற ஒரு பாதுகாப்பான இடத்தை வழங்குதல்.
- உதவி எண்ணின் ஆதரவு – பயிற்றுவிக்கப்பட்ட தன்னார்வளருடன் பேசி தொலைப்பேசி மூலமாக உதவியை பெற்றுக் கொள்ளுதல். மேலதிகமாக, மேலதிக உதவியை பெற்றுக் கொள்ளும் பொருட்டு சமூக சேவையாளர் அல்லது உளவள ஆலோசகரை சந்திப்பதற்கான நியமனத்தைப் பெறல்..
- நண்பனாக இருப்பவரின் சேவைகள் - பயிற்சியளிக்கப்பட்ட நண்பர்கள் இந்த தப்பிப்பிழைத்தவர்களுடன் காவல் நிலையம், மருத்துவமனை அல்லது நீதிமன்றத்திற்கு தங்கள் பாலியல் வன்கொடுமை வழக்கை புகாரளித்து பின்பற்றுவதற்கும், பல்வேறு சட்ட மற்றும் மருத்துவ செயல்முறைகள் மூலம் தகவல் மற்றும் உணர்வுபூர்வமான ஆதரவை வழங்குவார்கள். ஒரு நண்பராக இருப்பவரது சேவையினை உதவி எண் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்வதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.
- உளவள ஆலோசனை மற்றும் வழக்கு முகாமைத்துவம் - பாலியல் தொல்லையிலிருந்து தப்பிப்பிழைத்தப் பலர், உளவள ஆலோசகர்களிடம் பேசுவதற்கு உதவியை நாடுகின்றனர். அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்களுக்கு பின்பற்றக் கூடிய உளவள ஆலோசனையை வழங்குவார்கள். அனைத்து ஆதரவும் கட்டாயமாக இரகசியமாக வழங்கப்பட வேண்டும். முதல் மூன்று உளவள ஆலோசனை வகுப்புக்கள் இலவசமாகும். நான்காவது வகுப்புக்கான கட்டணமானது பாதிக்கப்பட்டவர்களின் மாத சம்பளத்தில் 1% ஆகும், பாதிக்கப்பட்டவர்களில் வருமானம் ஈட்டாதவர்களுக்கு ஒரு வகுப்பிற்கு 50 ரூபாயாகும்.
- சட்ட ஆலோசனை – தப்பிப்பிழைத்தவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தொலைப்பேசியினூடாக சட்டத்தரணி ஒருவரை சந்திப்பதற்கான நியமனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
- குருதிச் சோகையை பரிசோதிக்க ஹீமோக் குளோபின் மீட்டரை பயன்படுத்துவதன் மூலம் இலங்கை முழுவதும் உள்ள குருதிச் சோகை உடைய பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு உதவுதல், அவர்களுக்கு சிகிச்சையளிக்க IFA (இரும்பு மற்றும் போலிக் அஸிட் ) மாத்திரைகளை கொடுத்தல் மற்றும் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்க தேவையான வாழ்க்கை முறை நடவடிக்கைகள் குறித்து பயனாளிகளுக்கு ஆலோசனை வழங்குதல், மற்றும் இரும்பு, புரதம் மற்றும் விற்றமின் சி நிறைந்த உணவுகள் குறித்து அறிவுறுத்துதல். குருதிச் சோகை என்பது குருதியில் ஏற்படும் இரும்பு பற்றாக்குறையாகும். இது கர்ப்ப காலத்தில், மற்றும் பிள்ளை பேற்றின் போது தாய் மற்றும் பிள்ளையின் இறப்பிற்கு காரணமாக அமையும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரும்புச் சத்துக் குறைபாடு காரணமாக ஏற்படும் இழப்பின் காரணமான ஏற்படும் அனுமானித்த பொருளாதார இழப்பு 6% ஆகும்.
(மூலம் : Horton and Ross, 2003)
- மூத்த குடிமக்கள்
நாட்டின் அனைத்து மூத்த குடி மக்களும் அணுகும் முறையிலான ஒன்லைன் தளத்தை உருவாக்குதல். தளம் பின்வரும் சேவைகளை வழங்கும்;
- வயதானவர்களுக்கு பராமரிப்பினை வழங்குபவருக்கு ஒன்லைன் பயிற்சி ஒளிநாடாக்கள் மற்றும் கற்கைகளை.
- அரசாங்க அனுமதிப் பெற்ற முதியோர் இல்லங்கள் தொடர்பான விபரம்.
- உள்நாட்டு தன்னார்வளர்களுக்கான வாய்ப்புக்கள் பற்றிய விபரம்;
- மூத்த குடிமக்களுக்கான வருமானத்துடன் கூடிய வேலைவாய்ப்பு.
- சிறைக் கைதிகளுக்கான புனர்வாழ்வு மற்றும் குற்றக் குறைப்பு - "(‘நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சி’ இனைப் பார்க்கவும்)".
- போதைப் பொருள் தடுப்பு
- வஸ்து துஷ்பிரயோகம் மற்றும் மனநல சேவைகள் பற்றிய விழிப்புணர்வூட்டும் அதிகாரப்பூர்வ யூடியூப் ஒளியலையை நிறுவுதல்.
- மருத்துவ உதவி வழங்கும் போது ஓபியாய்டு பயன்பாட்டுக் கோளாறுகளுக்கு பயனுள்ள, சான்றுகள் அடிப்படையிலான பராமரிப்பை வழங்க சுகாதாரப் பயிற்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு இலவச அப்லிகேஷனை உருவாக்குதல்
- போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மதுசார மற்றும் புனர்வாழ்வு என்பவை கட்டிளமைப் பருவத்தினர் மத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பைப பற்றி பெற்றோரினை குறி வைத்து ஒன்லைன் சஞ்சிகைகளை பிரசுரித்தல்;
- அடிமைப்படுதல் மற்றும் இந்த நாட்பட்ட நோயிலிருந்து வெளிவரும் வழிவகை.
- போதைப்பொருள் அடிமைப்படுதலின் மறைமுக அறிகுறிகள்.
- மறுவாழ்வுக்கு செல்லுதல் மற்றும் அது ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழிவகுக்கிறது.
- ஏன் Fentanyl அனது இலங்கையை அச்சுறுத்துகிறது.
- அடிமைப்படுதல் மற்றும் மனநல சுகாதாரத்தை புறக்கணித்தல் என்பது ஏன் பெரிய தவறாக கொள்ளப்படுகின்றன?
- கட்டிளமையும் கஞ்சாவும்
- சிறுவர்ப் பாதுகாப்பு
- வீதியோர சிறார்களை பாதுகாத்தல்.
அர்ப்பணிப்பான சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைத்து இந்த நிலையங்களின் ஊடாக கல்வியினை வழங்குதல்.
- வாரத்தின் ஐந்து நாட்களுக்கும் ஐந்து புதிய வகை பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்துதல், அவற்றை காலை உணவை வாங்க முடியாத குழந்தைகளுக்கு துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூப்பனை வழங்குவதன் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய வகை பிஸ்கட்டுக்களானது சந்தைகளிலும் கிடைக்கக் கூடிய வசதிகளை செய்தல்
- துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு செல்லாத 5,000 சிறுவர்களை புவியில் ரீதியாக அடையாளம் கண்டு (புநழ-வயப) அவர்களின் குடும்பங்களின் வருமானத்தை ஆலோசனை உதவி மூலம் அதிகரித்தல், இதனால் இந்த சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும். இதனால் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கையை 5,000 இலிருந்து 0 ஆக குறைக்க முடியும்.
- சமூக அபிவிருத்து முயற்சிகளின் அமுலாக்கம் மற்றும் துல்லியமான வறுமை குறைப்பு என்பவற்றின் ஊடாக பாடசாலையிலிருந்து இடையில் விலகுபர்களின் எண்ணிக்கையை 30,000 இலிருந்து 0 ஆக குறைத்தல்.
- மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்காக, முன் பள்ளி மற்றும் பிரதான பாடசாலைகளில் உடற்பயிற்சிகளுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல். பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளுக்கு தினமும் பகல் நேரத்தில் குறைந்தது 2 – 3 மணிநேரம் வெளியில் செலவிட உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
- முழு நாள் முன் பள்ளி நிகழ்ச்சிகளுக்கான உடற்பயிற்சி செயற்பாடுகளுக்கான நேரத்தை குறைந்தது ஒரு மணி நேரமாக உயர்த்துதல், அதில் அரை மணி நேரம் வெளியில் செய்யப்படல் வேண்டும்.
- முன் பள்ளி ஆசிரியர்களுக்கு கள செயற்பாடுகளை செய்வதற்கான கல்வியியல் மூலங்களை வழங்குதல்.
- முறையான பாடத்திட்டத்திற்கு அப்பால் பிரதான பாடசாலைகளில் கட்டமைக்கப்படாத விளையாட்டிற்கான வாய்ப்புக்களை அதிகரித்தல்.
- பாடசாலை வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பன பாடசாலை நேரத்தில் மற்றும் / அல்லது பாடசாலை நேரத்திற்கு அப்பால் கிடைக்கக் கூடிய வசதிகளை செய்தல்.
- பாடசாலை மற்றும் சமூகத்தின் ஊடாக செயற்திறன் மிக்கதும் சுகாதாரமானதுமான வார இறுதி நாட்களை பெற்றுக் கொள்வதற்கு குடும்பங்களை ஊக்குவித்தல்.
உடல் ரீதியிலான செயற்பாடுகள் மூலம் பெற்றோர்-குழந்தை பினைப்பை ஊக்குவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பூங்காக்கள், பொழுதுப்போக்கு மையங்கள் மற்றும் திறந்த வெளிகளில் பொழுதுபோக்கு செயற்பாடுகளை ஒழுங்கு செய்தல்.
- ஊனமுற்ற குழந்தைகளுக்கு பின்வருவனவற்றின் மூலம் பாடசாலைகளில் நாளாந்த சேவைகளை வழங்குதல்.;
- ஊனமுற்ற பிள்ளைகளின் மதிப்பீடு மற்றும் திரையிடல்
- அனைத்து அரச மற்றும் மாவட்ட வள மையங்களை செயற்படுத்துதல்.
- குறித்த விடயம் உள்ளடக்கிய கல்விக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்.
- தேவைக்கேற்ப பாடசாலைகளில் அறைகளை இணைத்தல்.
- தேவைக்கேற்ப உதவிகள் மற்றும் உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
- சுகாதார அமைச்சினால் நிறுவப்பட்ட ஒழுங்கு முறையான பயிற்சிப் பெற்ற நிபுணர்களுடன் பிள்ளை மேம்பாட்டு மையங்களை ஒருங்கிணைத்தல்.
- கட்டுப்பாடற்ற துறைகளை ஒருங்கிணைத்தல்.
- முச்சக்கர வண்டி ஓட்டும் சமூகத்தை மேம்படுத்தி உயர்த்துதல். இந்த நோக்கத்திற்காக பயிற்சி ஒளிநாடாக்கள் மற்றும் ஏனையவற்றை பயன்படுத்துதல்..
- இலவச ஒன்லைன் தளத்தை உருவாக்கி முச்சக்கர வண்டி முன் பதிவு மற்றும் வரிசை முகாமைத்துவத்தை நிறுவுதல்.
- தெருவோர உணவு விற்பனையாளர்கள்.
- அவர்களது வியாபாரத்திற்கு ஆதரவளிக்கும் விதத்தில் மென் கடன் திட்டங்களை அறிமுகம் செய்தல்.
- பயிற்சி ஒளிநாடாக்களின் ஊடாக தெருவோர விற்பனையாளர்களுக்கு தொழில்பயிற்சிகளை வழங்குவதன் ஊடாக அவர்களது வருமானத்தை அதிகரித்தல்.
- Introduce a mobile application with information of street food vendors
including location and directions via Google Maps, to attract and inform
local and foreign visitors.
- பொதுப் போக்குவரத்து வழியாக பயணிக்க விரும்பும் பயணர்களின் வசதிக்காக கடைகள் மற்றும் தளங்களின் முகவரிகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கச் செய்தல்.
- ஓவ்வாரு மாவட்டத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அவர்களுக்கு தேவையான உபகரணங்களுடன் கூடிய வள மையத்தை உருவாக்குதல்.
- பெற்றோருக்குரிய குழந்தை பராமரிப்பு கற்கைகளை ஆதரிப்பதற்கான இலவச ஒன்லைன் கற்கைகளை செயற்படுத்துதல்.
- குடும்ப அலகினை ஆதரவளிக்கவும் வளப்படுத்தவும் தேவையான தகவலுடன் கூடிய அரசாங்க ஒன்லைன் தளத்தை பின்வருவனவற்றை உள்ளடக்கி நிறுவுதல்;
- திருமணத்திற்கு முன்பான உளவள ஆலோசனை.
- ஆரோகியமான திருமணத்தை பேணுதல்.
- நிதி முகாமைத்துவம்
- விவாகரத்தை முகாமை செய்தல்.
- குடும்பக் கட்டுப்பாடு.
- விவாகரத்து வழக்குகளை குறைத்தல்.
திருமணத்திற்கான அடித்தளத்தை நிறுவுவதற்கு ஒன்லைன் ஒளிநாடாக்களுடன் கூடிய திருமண ஆயத்த நிகழ்வுகளை அறிமுகம் செய்தல், மற்றும் மோதல் தீர்வு, தகவல் தொடர்புகளை வலுப்படுத்துவதில் நடைமுறை திறன்களைக் கொண்ட தம்பதிகளை சித்திரித்தல்.