இலக்குகள்

  • 2025 ஆம் ஆண்டுக்குள் 200,000 புதிய வேலைகளை உருவாக்குதல்.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை உள்நாட்டு முதலீடுகளை உறுதி செய்தல்.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை உறுதி செய்தல்.
  • Ease of Doing Business Index இல் இலங்கையின் தரத்தை 2022 இற்குள் 100 இலிருந்து 50 ஆக உயர்த்துதல்.
  • உலகலாவிய போட்டித் திறன் குறியீட்டில் இலங்கையின் தரத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் 85 முதல் 45 வரை மேம்படுத்துதல்.

  • செயற் திட்டம்

    1. முதலீட்டு விண்ணப்பத்தில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கையை 14 முதல் 3 ஆக குறைப்பதன் மூலம் முதலீட்டு ஒப்புதல் செயல்முறையை நெறிப்படுத்தவும், 24 மணிநேரத்திற்குள் பூர்வாங்க ஒப்புதலை வழங்கவும் ஏற்பாடு செய்தல்.

      சிவப்பு நாடாவைக் கடக்க முதலீட்டு ஒப்புதல் செயல் முறையின் விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை எளிதாக்குங்கள்.

    2. BOI உடனான ஒப்பந்தத்தில் 25 ஆண்டு உத்தரவாத வரிச் சலுகைகளுடன் இலங்கையில் முதலீடு செய்வதன் போட்டி நன்மையை வெளிப்படுத்துதல்.

      புpன்வரும் துறைகளுக்கு 25 வருடங்களுக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT;

      • கல்வி
      • தகவல் சேவை செயற்காடுகள்.

        (ஏதேனும் வகையான BPO, KPO தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)

      • மனித சுகாதார செயற்பாடுகள்.
      • வான் போக்குவரத்து
      • மோட்டார் வாகனங்கள், டிரைலர்ஸ் மற்றும் செமி டிரைலர்ஸ் உற்பத்தி.
      • கழிவுகளை சேமித்தல், முறைமைப்படுத்தல் மற்றும் அகற்றல் செயற்பாடுகள்; பொருட்கள் மீட்பு.
      • தண்ணீர் சேமிப்பு, முறைமைப்படுத்தல் மற்றும் விநியோகித்தல்.
      • கழிவு நீர்.
      • ஏனைய போக்குவரத்து சாதனங்களின் உற்பத்தி
      • மீன் பிடி மற்றும் மீன் வளர்ப்பு.
      • மாற்று செயற்பாடுகள் மற்றும் கழிவு முகாமைத்துவ சேவைகள்.

      மாதாந்த வருமானம் ரூ.500,000 இலிருந்து ஆரம்பிப்பவர்களுக்கு Pயுலுநு வரி 12% அறவிடப்படும்.

    3. உள்நாட்டு மற்றும் செளிநாட்டு முதலீட்டாளர்களை முதலீட்டு செயன் முறையில் வேகத்தை அதிகரிப்பதற்காக தொழில்நுட்ப பூங்கா மற்றும் தொழில்துறை பூங்கா என்பவற்றை 25 மாவட்டங்களிலும் விருத்தி செய்தல்.
    4. இலங்கைக்கு ஒரு தேசிய பெயரிடல் உத்தியை அறிமுகப்படுத்துதல்.
    5. முழுமையான தயாரிப்பு மற்றும் முதலீட்டு சலுகைகள் மூலம் வணிக நட்பு சூழலை உருவாக்கி காட்சிப்படுத்துதல்.
    6. மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பை மாதந்தோறும் கண்காணித்தல். வேலைகள் இல்லாத இடத்தில் அமைச்சரவை எடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
    7. ஆம் குறிப்புக்களில் சொல்லப்படாத புதிய முயற்சியாளர்களுக்கான தற்போதைய கூட்டிணைக்கப்பட்ட வரி விகிதத்தினை 12% ஆக குறைத்தல் மற்றும் அனைத்து துறைகளுக்கும் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குறைக்கப்பட்ட விகிதத்தை உத்தரவாதப்படுததுதல் (மேல் மாகாணத்தில் ) , எட்டு மாகாணங்களுக்கும் 80% சலுகை வழங்கப்படுதல், இதன் மூலம் 2.4% ஆன பயனுள்ள விகிதத்தை வசூலிக்க முடியும் (இது மாவட்ட ரீதியாக கிராமப் புறங்களில் மேலதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்க உதவும்)
    8. ஒரு நெகிழ்வான மற்றும் உலகளவில் வேலை செய்யக் கூடிய பணியாளர்களை வளர்ப்பது:
      • ஓராண்டிற்கு உலகளவில் கோரப்பட்ட முதல் 50 வேலைகளை அடையாளம் காணுதல்.
      • தொழில்பயிற்சி நிறுவனங்களின் உற்பத்தி திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துதல், சிங்கப்பூர், தாய்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் மலேசியாவில் உள்ள தொழில் பயிற்சி நிறுவனங்களில் சிறந்த நடைமுறைகளை மதிப்பீடு செய்தல்.
      • உலகலாவிய தொழிலாளர் தேவைகளுக்கு ஏற்ப தொழில் வளரும் நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களை நிறுவுதல்.