இலக்குகள்

 • ஒவ்வொரு ஆண்டும் ஒலிம்பிக்கில் 20 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்தல்.
 • ஒரு செயற்பாட்டு சூழலை உருவாக்கி,பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வினையூக்கியாகவும் உதவியாளராகவும் செயற்படுதல்.
 • இளைஞர்களி;ன் அபிலாசைகளுக்கும் தேவைகளுக்கும் பதிலளிக்க வேண்டும், சிறந்த எதிர்காலத்திற்காக அவர்களை ஊக்குவித்தல் மற்றும் குடிமக்கள் மத்தியில் விளையாட்டு கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்தல்.

செயற் திட்டம்

இளைஞர்

 1. இளைஞர் மையங்களில் பயிற்சி திட்டங்கள் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவித்தல்.
  1. நிரற்படுத்தக் கூடிய தரக் கட்டுப்பாடு
  2. கணினி உதவி வடிவமைப்பு (CAD).
  3. கணினி உதவியுடனான உற்பத்தி (CAM).
  4. கணினி உதவியுடனான பொறியியல் (CAE).
 2. தனிப்பட்ட நிதி முகாமைத்தும் குறித்து இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்க ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல்.
 3. கலை, இசை, ஊடகம், நடனம் மற்றும் விளையாட்டுக்கான வளங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் தொழில் தொடர்புகள் ஆகியவற்றின் மூலம் திறமைகளை அடையாளம் காணுதல் மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.
 4. வெற்றிகரமான வர்த்தகர்களிடமிருந்து தொழில்முறை உதவி மற்றும் இளைஞர்களுக்கு குறைந்த ஆரம்ப அபாயங்களுடன் கூடிய வியாபாரங்கள் மற்றும் யோசனைகளுக்கு இணங்க வேலை செய்யும் இடத்தை அறிமுகப்படுத்துதல்.
 5. தேர்ந்தொடுக்கப்பட்ட 21 அணிகளுக்கு 6 மாற்று கூட்டுறவு திட்டத்தை அறிமுகப்படுத்தவும், 22 மாற்று அமர்வுகள் மற்றும் அர்ப்பணிப்பு வழிகாட்டல் (1 முதல் 1 அமர்வுகள் ) வரை அவர்களின் தொடக்க யோசனைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுதல்.
 6. .
 7. தொழில் முயற்சியாண்மையாளர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களுடன் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கப்படும் தொடர் பேச்சுக்களை ஒழுங்கு செய்தல்.
 8. வேலைவாய்ப்புச் சந்தை கோரிக்கைகளுக்கு பொருந்தக் கூடிய புதிய கற்கைகளை தேசிய இளைஞர் பேரவை மூலம் அறிமுகப்படுத்துதல், பரிந்துரைக்கப்பட்ட கற்கைகள் பின்வருமாறு,
  பரிந்துரைக்கப்பட்ட கற்கைகள் பின்வருமாறுஇ
  • உடற்பயிற்சி பயிற்றுனர்கள்
  • சில்லறை விற்பனை
  • தோட்டச் செய்கை
  • வரவேற்பாளர்
  • சிற்றூண்டிச் சாலை தொழிலாளர்கள்
  • வைட்டர்கள்
  • குழந்தை பராமரிப்பு
  • வைத்தியசாலை உதவியாளர்கள்
  • துப்பரவு தொழிலாளர்கள்.
 9. தேசிய இளைஞர் பேரவையில் வேலை தேடல் உதவி மற்றும் தொழில் ஆலோசனைகளை அறிமுகப்படுத்துதல்.
 10. எண்முறை வளங்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் மென்மையான திறன் மேம்பாட்டுக்கு உதவுதல்.

கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை ஆரம்பித்தல்.

 1. ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலையற்ற இளைஞர்களை புவியியல் ரீதியாக இணங்கண்டு அவர்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களுக்கு பொருத்தமான வேலைகளை ஒதுக்குதல்.
 2. வேலைக்கான விண்ணப்ப நடைமுறைகளை மற்றும் வேலை தேடலில் கிராமப்புற இளைஞர்களுக்கான ஆலோசனைகளை அறிமுகப்படுத்துதல்.
 3. 12 ஆம் வகுப்பினை நிறைவு செய்யாமல் பாடசாலையை விட்டு வெளியேறிய அல்லது தற்போது வேலையில்லாமல் இருக்கும் 13 முதல் 19 வயதுடைய இளைஞர்களை ஆதரிக்க இளைஞர் அணைப்பு மையத்தை ஏற்பாடு செய்தல்.
  1. திட்டத்தின் மூலம் தனிப்பட்ட கல்வி மற்றும் பயிற்சி தேவைகளுக்கு ஏற்ப வழிகாட்டுதல்களை வழங்குதல்.
  2. மோசமான கல்வி செயற்திறன் கொண்ட வேலையற்ற இளைஞர்களுக்கு ஒரு முன் தொழில் பயிற்சி தளத்தை வழங்குதல்.
   • கூடுதலாக, இளைஞர் இணைப்புத் திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை வழறங்கும், தனித்துவமான திறமைகள், மற்றும் திறன்களை அடையாளம் காணுதல்.
   • சுதந்திரம், வாழ்க்கைத் திறன் மற்றும் கூட்டிணைக்கப்பட்ட இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்படும்.

யுளளளைவயnஉந வழ ளவயசவரிள – ஆரம்பிப்புக்களுக்கு உதவி

 1. சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உலகெங்கும் உள்ள சிறந்த ஆரம்ப சஞ்சிகைகள் அடங்கிய ஒரு வலைத் தளத்தை அறிமுகப்படுத்துதல், அங்கு வாரந்தோறும் சஞ்சிகைகள் பதிவேற்றப்படும்.
 2. சிறந்த வியாபார முன்மொழிவுகளுடன் கூடிய வாரத்திற்கு 5 வித்தியாசமான 5 தொழிற்துறைகள் பற்றிய நிகழ்கால நிகழ்ச்சியை தரக் கூடிய தொலைக்காட்சி செனல்களுக்காக (3 சிங்கள செனல்கள், 1 தமிழ் செனல் மற்றும் 1 ஆங்கில செனல்) ரூ 5பில்லியன் (ரூ 1 பில்லியன் ஒ 5 தொலைக்காட்சிகள்) இனை ஒதுக்குதல்
 3. வர்த்தக வழிகாட்டல்கள், ஒன்லைன் கற்கைகள், சந்தை ஆராய்ச்சி மற்றும் பங்காளர் சேவைகள் போன்ற இலவச ஆதாரங்களை உள்ளடக்கிய தொடக்க தளத்தை உருவாக்குதல்.
 4. நாட்டில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கவும், தகுதியான முதலீட்டார்களை ஈர்க்கவும் சரிச் சலுகைத் திட்டத்தை நிறுவுதல்.

  அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டாளர், குறைந்தபட்சம் 1 மில்லியன் ரூபா முதலீட்டினை இரண்டு ஆண்டு காலத்திற்கு வைத்திருக்கும் போது அவரது முதலீட்டுத் தொகையில் 50% வரி விலக்கு கோர தகுதியுடையவராவார்.

 5. வழிகாட்டுதல்கள், ஆய்வக வசதிகள், நிதி ஆலோசனை, மாணவர்க் காப்புரிமை திட்டங்கள், IP வணிகமயமாக்கல் போன்ற சேவைகளை மாணவர்களுக்கு வழங்கும் பல்கலைக்கழகங்களில் தொடக்க வகுப்புகளை ஆரம்பித்தல்
 6. வேலையற்ற இளைஞர் தொழில்முனைவோருக்கு (18-37 வயது முதல் ) 750,000 ரூபா வட்டியில்லாத கடனை ஒரு முறை வழங்குதல்.


விளையாட்டு பற்றிய செயற் திட்டம்

இஸ்மார்ட் விளையாட்டுக்கள்.

 1. அனைத்து விளையாட்டுப் பதிவுகளையும் எண்முறையாக்கி ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களை பாடசாலை மட்டத்திலிருந்தே கவனித்தல்.
 2. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாட்டைக் குறிக்கவும், வீரர்களின் வெற்றிகரமான சேர்க்கைகளை தெரிவு செய்யவும் AI இனை பயன்படுத்துதல்.
 3. அதிக செயற் திறன் கொண்ட வீரர்களிடையே இஸ்மார்ட் அணிகலங்களை பாவித்தல் மற்றும் பயிற்சி வகுப்புகளின் போது அவர்களின் முக்கிய புள்ளி விபரங்களை கணித்து எதிர்கால செயற்திறன் தொடர்பில் அனுமானித்தல்.
 4. போட்டிகளுக்கான வருகை விகிதத்தை அனுமானிக்க AI இனை பயன்படுத்தல் மற்றும் விளையாட்டில் பண வருமானத்தினை ஈட்டிக் கொள்வதற்கு அனுமதி சீட்டு விலையை மேம்படுத்தல்.
 5. பயிற்றுவிப்பாளர்களுக்கு வீடியோ அடிப்படையிலான பயிற்சி மற்றும் கற்கைகளை வழங்குதல்.

தடகளங்கள்

 1. பாடசாலை தடகளத்திற்காக “தேசிய விளையாட்டு திறமை தளத்தை” அறிமுகப்படுத்துதல்.
  • ஓடுகள நிகழ்ச்சி – 100 மீட்டர் மரதன்.
  • கள நிகழ்வுகள் - உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற அனைத்து கள நிகழ்வுகளும்.

  ஒலிம்பிக் மட்டத்தை எட்டும் திறனைக் கொண்ட சிறந்த செயற்திறன் மிக்க 1,000 விளையாட்டு வீரர்களின் ஒரு குழுவை தேர்ந்தெடுத்து உருவாக்குதல், அவர்களுக்கு கல்வி, தங்குமிடம் மற்றும் செலவுகளுடன் கொழும்பில் பயிற்சி அளித்தல்.

  அனைத்து முக்கிய விளையாட்டுகளுக்கும் விளையாட்டு நுட்பங்களை கற்பிக்க ஒளிநாடாக்களை பயன்படுத்தும் ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல்.

 2. விளையாட்டுக் கல்வி கற்கைகளை அறிமுகப்படுத்துதல், பயிற்சியாளர்களுககும் விளையாட்டுக் குழு, முகாமையாளர்களுக்கும்,பயிற்சி திறன், விளையாட்டு வைத்தியம் மற்றும் பிசியோதெரப்பி, மீட்பு முகாமைத்துவம் போன்ற தொடர்புடைய திறன்-தொகுப்புகளை மேம்படுத்துவதற்காக அவற்றை கிடைக்கச் செய்தல்.
 3. பயிற்சியாளர்களுக்கான ஒன்லைன் கற்கைகள் மற்றும் பயிற்சி ஒளிநாடாக்களை உருவாக்குதல்
  1. சர்வதேச அனுபவமுள்ள விளையாட்டு நபர்களை உதவி பயிற்சியாளர்களாக நியமித்தல். ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டிப்ளோமா கற்கைகளில் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் சிறந்த செயற்திறன் மிக்கவர்களை ஈடுத்துதல்.
  2. பயிற்சியாளர்களுக்கான ஒன்லைன் கற்கைகள் மற்றும் பயிற்சி ஒளிநாடாக்களை உருவாக்குதல்.
 4. சர்வதேச அனுபவமுள்ள விளையாட்டு நபர்களை உதவி பயிற்சியாளர்களாக நியமித்தல்.
  ஒப்பந்த அடிப்படையில் பயிற்சி டிப்ளோமா கற்கைகளில் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் சிறந்த செயற்திறன் மிக்கவர்களை ஈடுத்துதல்.
 5. விளையாட்டு அணிகளுக்கு நிதியளிக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்குதல்.
 6. ஓவ்வொரு மாகாணத்திலும் ஒரு செயற்கை இறப்பர் தடகள அமைப்புடன் ஒரு அரங்கத்தை உருவாக்குதல்.
 7. பெயரளவு கட்டணம் வசூலிப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டுத் துறை (உடற்பயிறசி மையம், குளங்கள் ) வசதிகளுக்கு பொதுவான அணுகலை வழங்குதல். பயிற்சிப் பொற்ற பயிற்சியாளரின் மேற்பார்வையின் கீழ் அவை பயன்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
 8. மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டு நடவடிக்கைகளில் பயிற்சியளிக்கவும் பங்கேற்கவும் உதவுவதற்காக ஒரு விளையாட்டு மையத்தை நிறுவுதல்.
 9. இருக்கின்ற விளையாட்டு வளாகங்களை விருத்தி செய்தல்.
  1. வளாகங்களை “விளையாட்டுக் கழகங்கள்” என மறுப் பெயரிடுதல் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டுக் கழகத்தை, ஒரு நீச்சல் குளம், உடற்பயிற்சி நிலையம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அனைத்து முக்கிய வசதிகளுடன் ஒரு முழுமையான ஆயுதம் கொண்ட விளையாட்டுக் கழகம் போன்றவற்றுடன் விருத்தி செய்தல்
  2. இந்த விளையாட்டுக் கழகங்களில் உணவு விடுதிகள் மற்றும் விளையாட்டு முகாம்கள் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல்.
  3. கொழும்பில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்திற்குள் கல்வி நிலையம், பொழுதுபோக்கு பகுதி மற்றும் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட விளையாட்டு நகரத்தை உருவாக்குதல்.
 10. தனியார்ததுறையுடன் இணைந்து விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு மூலோபாயத்தை உருவாக்குதல்,
  தற்போதுள்ள பயனற்ற உட்கட்டமைப்பு வசதியை வசதிகளை புதுபிக்கவும், வளாகத்தை பராமரிக்கவும் 50 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குத்தகைக்கு விடல்.
 11. நீச்சல் குளங்கள், சைக்கிள் ஓட்டுதல், கிரிக்கட் அல்லது காற்பந்து மைதானம் போன்ற அருகில் உள்ள விளையாட்டு வசதியைக் கண்டுபிடிக்க அப் பயன்பாட்டைத் தொடங்குதல்.
 12. கிரிக்கட், மென்பந்து, கூடைப்பந்து, வலைப்பந்து மற்றும் காற்பந்து ஆகியவற்றிற்கான விளையாட்டு தொடர் நிகழ்வுகளை வெள்நாட்டு வீரர்களின் பங்கேட்புடன் நடாத்துதல்..
 13. அமைப்பாளர்களுக்கும் பங்கேட்பாளர்களுக்கும் தேவையான வசதிகளை மற்றும் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச ட்ரையத்லான் நிகழ்வுகளை இலங்கைக்கு ஈர்த்தல்.
  ட்ரையத்லான் நிகழ்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளாக, ஹம்பந்தோட்ட, கொழும்பு, நுவரெலியா மற்றும் திருகோணமலை ஆகும்.
 14. சர்வதேச கோல்ப் போட்டிகளை இலங்கைக்கு ஈர்ப்பதற்காக தற்போதுள்ள கோல்ப் மைதானங்கள் மற்றும் வசதிகளை உருவாக்குதல்.
 15. விளையாட்டுகளுக்கான நிகழ்வு நாட்கட்டியை பராமரித்தல்.
 16. அங்கம்போரா, கபடி மற்றும் எல்லே போன்ற பாரம்பரிய விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நவடிக்கைகளை உருவாக்கி பலப்படுத்துதல்.

கிரிக்கெட்

 1. “தேசிய திறமைத் தளத்தில்” கிரிக்கெட்டைச் சேர்த்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட செயற்திறன் நிலைகளையும் அடையாளம் காணுதல்.
 2. தனிப்பட்ட விளையாட்டு வீரர்களில் திறன்-பகுதிகளை, குறிப்பாக கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு முன்கூட்டியே அடையாளம் காண யுஐ இனை பயன்படுத்துதல், வீரர்கள் மற்றும் பாடசாலை அளவிலன கிரிக்கெட் வீரர்களிடமிருந்து தரவை சேகரிக்கும் இஸ்மார்ட் மட்டைகள் மற்றும் இஸ்மார்ட் பந்துகளை உள்ளடக்குதல், இது முடிவெடுப்பவர்களுக்கு மிகவும் திறமையான வீரர்களை பகுப்பாய்வு செய்து தேர்ந்தெடுக்க உதவுகிறது.
 3. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்நாட்டு அளவிலான தரத்துடன் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்குதல்.
 4. ரடெல்லா கிரிக்கெட் மைதானத்தை சர்வதேச மைதானமாக விருத்தி செய்தல்.