இலக்குகள்

  • சிறந்த மற்றும் மலிவான சுகாதாரத்திற்கான அணுகல்.
  • சிறப்பான மருத்துவத்தை தொடருதல்.
  • மக்களை அவர்களது ஆரோக்கியத்தில் முழு தினையும் அடைவதற்கு அவர்களுக்கு உதவுதல்.

  • 50 மில்லியன் நோயாளிகள் வருடாந்தம் வெளிநோயாளர் பிரிவிற்கு வருகைத் தருகின்றனர்.
  • 15,000 தினசரி அனுமதிகள்
  • 5 மில்லியன் நோயாளிகள் வருடாந்தம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
  • 1,085 வைத்தியசாலைகள் நாட்டில் காணப்படுகின்றன.
  • வைத்தியசாலைகளின் மொத்த கட்டில்களின் எண்ணிக்கை 83,275

செயற் திட்டம்

  1. சுகாதார வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சராசரி ஆயுட் காலத்தை 3 ஆண்டுகளாக அதிகரித்தல்.
  2. இலங்கையில் இறப்பிற்கான முதல் 10 காரணிகளை கண்டறிந்து அவற்றைத் தடுப்பதற்கான நட்வடிக்கைகளை எடுத்தல்.

    மரணத்திற்கான 10 காரணிகள்;

    • இதயநோய்
    • பக்கவாதம்
    • நீரிழிவு நோய்
    • மூச்சுத் திணறல் அல்லது ஆஸ்துமா
    • ஆல்சீமரின் நோய்நிலைகள்.
    • நுரையீரல் நோய்கள்
    • நாள்ப்பட்ட நுரையீரல் நோய்கள்.
    • தற்கொலைகள்
    • நாளப்பட்ட சிறுநீரக நோய்கள்.
    • சிரோசிஸ்.
  3. கொழும்பை அண்டிய முக்கிய 7 பிரதேசங்களில் (மொரட்டுவ, பிலியந்தல, கொட்டாவ, பத்தரமுல்ல, கடவத்த, ராகம மற்றும் நீர்க்கொழும்பு) முழு அளவிலான வைத்தியசாலைகளை அமைத்தல்.
    • கொழும்பின் புற நகர் பகுதிகளிலும் உயர்தர சுகாதார சேவையை அணுகக் கூடியதாக இருக்கும்.
    • இது சுகாதார தேவைகளுக்காக கொழும்பு நகரிற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்.
  4. மகரகம புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலையிலும் புற்று நோயியல் பிரிவு ஒன்றை நிறுவுதல்.
  5. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவீன மற்றும் உபகரணங்களுடன் கூடிய நோயாளிகளை பரிசோதிக்கும் ஆய்வுக் கூடங்களை நிறுவுதல்.
  6. இதயம், நுரையீரல், நரம்பியல், கண், மற்றும் குழந்தகளுக்கான நோயயியல் போன்ற பொருத்தமான சிறப்பு வைத்தியசாலைகளுடன் இணைந்து சுகாதார மையங்களை கட்டுதல்.
  7. சத்திர சிகிச்சைக்காக நோயாளிகளின் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் பொருட்டு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியரகளுக்காக புதிய அதிக நேர கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தல்.
    • தற்போது நோயாளிகள் 1 வாரம் முதல் 10 மாதங்கள் வரை காத்திருப்பு பட்டியலில் இடப்படுகின்றனர்.
    • புதிய கட்டண திட்டத்தின் மூலம் 8 மணி நேர வேலைக்குப் பயன்படுத்தப்படும் சத்திர சிகிச்சை அரங்குகளை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் உட்பட 12 மணி நேரம் வரை நீடிக்கலாம்.
  8. நோயாளிகள் காத்திருக்கும் காலத்தைக் குறைப்பதற்கு பயன்படுத்தாது காணப்படும் சத்திர சிகிச்சை அரங்குகள், சோதனை மற்றும் இஸ்கேள் அறைகள் என்பவற்றை பயன்படுத்தும் மருத்துவ துறை ஊழியர்களுக்கு குறித்த புதிய கட்டணத் திட்டத்தை ஏற்புடையாக்குதல்.
  9. நாட்டின் தகுதி வாய்ந்த வைத்தியர்களின் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு அரசுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர்களின் கொள்த்திறன் அளவை 1,300 இலிருந்து 2,000 ஆக அதிகரித்தல்.

    தொடர்புடைய பிற சுகாதார ஊழியர்களையும் அதிகரித்தல்.

  10. தாதியர் கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர் எண்ணிக்கையையும் அதிகரித்தல்.

    சிரேஷ்ட மட்ட தாதியர்களுக்கு அவர்களது திறன்களை விருத்தி செய்வதற்கு வெளிநாட்டு புலமைப் பரிசில்களை வழங்குதல்.

  11. 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT அறிமுகத்தின் கீழ் தனியார் வைத்தியசாலைகள் நிறுவப்படுதலை ஊக்குவித்தல்.
    • பொது சேவை உத்தியோகத்தர்களுக்கு மேலதிக காப்புறுதி திட்டத்தின் படி மருத்துவ பராமரிப்பினை வழங்குதல்.
    • சத்திர சிகிச்சைக்காக மாதக்கணக்கில் வரிசையில் இருக்கும் நோயாளிகள் இந்த புதிய தனியார் வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுவர்.
  12. ஒன்லைன் மூலமாகவும் தொலைபேசி அப் மூலமாகவும் கிடைக்கக் கூடிய “Digital Health Hub” (DHH) இனை அறிமுகப்படுத்துதல்

    எண்முறை அடையாள அட்டையின் உதவியுடன் DHH இணை அணுகலாம்,
    DHH இ ன் சேவைகள் பின்வருமாறு,;

    • கடந்த 10 ஆண்டுகளுக்கான நோயாளரின் சுகாதார வரலாற்றை அணுகலாம்.
    • அனைத்து வைத்தியசாலைகள், சிறிய வைத்திய நிலையங்கள், இஸ்கேள், வைத்தியர்களின் சந்திப்பிற்கான நேர மற்றும் இடங்களை காணுதல்.
    • திட்டமிடப்பட்ட சந்திப்புக்கள் குறித்த விழிப்பூட்டல்கள்.
  13. ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் கிடைக்கக் கூடிய மருந்துகளை கண்காணிக்கக் கூடிய ஒன்லைன் தளத்தை விருத்தி செய்தல்.
    • இது ஏனைய வைத்தியசாலைகளில் கிடைக்கக் கூடிய மருந்துகளின் அளவை ஒரு வெளி சூழலில் இருந்து பார்க்கக் கூடிய சந்தர்ப்பத்தை வழங்கும்.
    • .தற்போது காணப்படும் மருந்துகளின் அளவை கண்காணிப்பதன் மூலம் மருந்துகள் வெளியே கொடுக்கப்படுவதை தவிர்த்து வைத்தியசாலைகள் முன்கூட்டியே மருந்துகளை வாங்கலாம்.
  14. வைத்தியசாலைகளின் கட்டில்களின் வினைத்திறனான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக வார்டுகளில் காணப்படும் படுக்கைகளின் விநியோகத்தை எண்முறையாக்குதல்.
  15. இரத்த வங்கியுடன் இணைந்து நோயாளிகளின் அனைத்து பரிசோதனை ஆய்வுக் கூடத்தையும் எண்முறை மயமாக்கி, நோயாளிகளின் வைத்திய நிலைகளின் முறைகளை முன்னறிவிக்க இந்த அறிக்கையை பயன்படுத்துதல்.

    எந்தவொரு வைத்திய நிலையையும் கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை நோயாளிகள் எடுக்கலாம்.

  16. பின்வரும் தரத்திற்கு அமைவாக கழிவறைகளை விருத்தி செய்து பேணுதல்.:
    • அனுமதிக்கப்பட்டிருக்கும் 20 நோயாளிகளுக்கு 1 கழிவறை.
    • வெளிநோயாளர்களுக்கு குறைந்தது 4 கழிவறைகள்.
    • வைத்திய மற்றும் பொது ஊழியர்களுக்கு தனியான கழிவறைகள்.
  17. அத்தியவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கான மலிவு விலைக் கொள்கையை அறிமுகப்படுத்தி பேணுதல்.
  18. சந்தைகளுக்கு வெளியாக்கப்படும் மருந்துகள் குறித்து ஒப்புக் கொள்ளப்பட்ட தரத்தை பேணுதல்.

    மருந்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி விளக்கும் விபரங்கள் அடங்கிய லேபில்களை அறிமுகப்படுத்துதல்.

  19. மருத்துவ காரணங்களுக்காக குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியாத குடும்பங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை எளிதாக அணுகக் கூடிய வசதிகளை வழங்குதல்.
  20. நாடப்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு, சரியான வடிகட்டல் வசதியுடன் ஆழமான கிணறுகளை உருவாக்கும் பொருட்டு சிறுநீரக நோயாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை புவியியல் ரீதியாக இணங்காணுதல். ஏற்கனவே குறிப்பிடத்தக்க கிராமங்களில் அவ்வாறான வடிகட்டல் உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது.

    உ.ம். Hayleys PLC ஆல் செய்யப்பட்ட சாட்டியாவர திட்டம்.

  21. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகித்தல்.

    தற்போது 35,000 கொள்கலன் உரமானது இறக்குமதி செய்யப்படுகின்றன. மண் சுகாதார அட்டைகள் மற்றும் மண் சோதனை அடிப்படையிலான உர பரிந்துரைகளை விநியோகிப்பின் அறிமுகத்துடன் 20%(7,000 கொள்கலன்) இறக்குமதி குறைக்கப்பட முடியும்.

  22. சுகாதார நிபுணர்களால், குறிப்பாக கிராமப்புறங்களுக்கு ஒன்லைன் அழைப்பு அல்லது முன்பே பதிவேற்றப்பட்ட தரவு மூலம் தகவல் மற்றும் நோயறிதலை வழங்க தொலைவைத்திய சேவைகளை அறிமுகப்படுத்துதல்.
  23. தொற்றா நோய்களின் ஆபத்தைக் குறைக்க பெரியவர்கள் மற்றும் சிறுவர்களிடையே உடல் செயற்பாடுகளை மேம்படுத்தும் ஒளிநாடாக்களை உருவாக்குதல்.
  24. அனைத்து வைத்தியசாலைகளிலும் முறையான கழிவகற்றும் முறையை அமுல்;படுத்துதல்.
  25. கிராமப்புறங்களுக்கான நியமனங்களுக்காக வைத்திய ஊழியர்களை ஈர்க்கும் பொருட்டு:;
    • குழந்தைகளுக்கு சர்வதேச பாடசாலைகளை உருவாக்குதல்.
    • தேவையான சுகாதார வசதிகளுடன் கிராமப்புற வைத்தியசாலைகளை புதுப்பித்தல்.
    • தனியார் பயிற்சிக்காக தனியார் வைத்தியசாலைகளை கட்டுதல்.
    • அனைத்து அத்தியவசிய பொருட்களையும் வழங்கி வைத்தியரின் காலாண்டு சேவைக்கு வசதி செய்து கொடுத்தல்.
  26. தாதியர்கள், மருந்தாளர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் கிடைப்பதை அதிகரிக்கும் பொருட்டு துணை மருத்துவ துறையில் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வருதல்.
  27. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு விபத்து இல்லாத வீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
  28. ஆயர்வேத சிகிச்சைப் பிரிவை உருவாக்குதல்;
    • ஆயர்வேத சிகிச்சையளிப்பவர்களுக்கு ஆயர்வேதத்தில் பயன்படுத்தப்படும் புதிய முறைகளுக்கான பயிற்சி மற்றும் அணுகலை வழங்குதல்.
    • ஆயர்வேத மருந்து உற்பத்தியை வலுப்படுத்த அதிக மூலிகைப் பண்ணைகளை நாட்டுதல்.
    • மேற்கத்தேய மருத்துவர்களை போலவே ஆயர்வேத மருத்துவர்களுக்கும்; வருமானம் மற்றும் ஓய்வூதிய திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
    • சுற்றுலா மையங்களில் சிகிச்சை மையங்களை நிறுவ நாட்டின் உயர் மட்ட ஆயர்வேத சிகிச்சையளிப்பவர்களுக்கு உதவுதல்.
  29. குடிப் பழக்கத்துடன் தொடர்புடைய உடல்நல அபாயங்களைக் குறைக்க “குறைந்த ஆபத்துடைய குடி வழிகாட்டலை” அறிமுகப்படுத்துதல்.
  30. குடிமக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த அனைத்து மட்டங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட நித்திரை பழக்கம் பற்றிய வழிகாட்டுதலை அறிமுகப்படுத்துதல்.
  31. மனநல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆலோசனை மற்றும் சிகிச்சைகளுக்கு தேiவாயன தொழில்முறை ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுடன் கூடிய மையங்களை நிறுவுதல்.
  32. மனச்சோர்வு மற்றும் பதட்டம் உள்ள நபர்களை அடையாளம் காண நடத்தை பகுப்பாய்வு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல்.
  33. அவசர கால சூழ்நிலைகளில் பொது மக்களுக்கு அடிப்படை முதலுதவி நுட்பங்களை கற்பிக்க ஒன்லைன் ஒளிநாடாக்களை அடிப்படையாக கொண்ட பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல்.
  34. பாடசாலைகள், வேலைத்தளங்கள், வைத்தியசாலைகள் மற்றும் மத நிறுவனங்களில் சிறந்த சுகாதாரப் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தல்.
  35. மாதவிடாய் காரணமாக பெண்கள் வருகை தராமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:;
    • பாடசாலைகள், சமூகங்கள் மற்றும் குடும்பங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு திட்டங்களை நடாத்துதல்:
      • மாதவிடாய் செயல்முறை
      • மாதவிடாய் துணியை கழுவுவதன் முக்கியத்துவம்
      • மாதவிடாயின் போது பயன்படுத்தக் கூடிய உறிஞ்சிகளின் வகைகள்.
      • இளம் பெண்களின் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு கற்பித்தல்.
      • மாதவிடாய் காலத்தில் எதை எதிர்ப்பார்க்கலாம், அந்த காலத்தில் அவர்களது சுகாதாரத்தை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பன குறித்து இளம் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தயார்ப்படுத்துதல்.
    • மாதவிடாய் சுகாதரம் குறித்த ஒன்லைன் விழிப்புணர்வு ஒளிநாடாக்களை உருவாக்குதல்.
    • அகற்றும் வழிமுறைகளை நிறுவுதல்.
    • மாதவிடாய் சுகாதார நிர்வாகத்தை ஆதரிக்கும் நீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான வசதிகளை உருவாக்குதல் (ஒவ்வொரு 40 சிறுமியர்களுக்கும் ஒரு கழிப்பறை, தண்ணீர் மற்றும் சவர்க்காரம்.)
    • கிராம புறங்களில் சுகாதார நப்கின்களின் உற்பத்தியை ஊக்குவித்தல்.
    • இளம் பருவப் பெண்கள் தங்கள் உணவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை மற்றும் ஆதரவு.
    • சமூக மேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்களை நடாத்துதல்.
    இந்த பயிற்சித் திட்டத்தின் குறிக்கோள்கள்:;
    • மாதவிடாய் சுகாதார நிர்வாகத்தின் முக்கயத்துவத்தை புரிந்துக் கொள்தல்.
    • Tபாடசாலைகளிலும், சமூக மட்டங்களிலும் மாதவிடாய் சுகாதார முகாமைத்துவததிற்கான திறன்களை வளர்ப்பது.
  36. உடல் நலம் மற்றும் ஆரோக்கியத்திற்காக குறிப்பாக விளையாட்டு வீரர்களின் ஆரோக்கிய அளவுருக்களை இலவசமாக வாசிக்க வழங்கப்படுவதன் மூலம் நாடு முழுவதும் செயலில் உள்ள சுகாதார ஆய்வகங்களை நிறுவுதல்.
  37. புதிய மற்றும் பிள்ளைப் பேற்றை எதிர்ப்பார்க்கும் தாய்மார்களுக்கு அத்தியவசியமான தகவல்களுடன் தடுப்பூசிகளை செலுத்துவது, வைத்தியரை எப்போது பார்ப்பது மற்றும் வைத்தியர்களுடன் சந்திப்புக்களை பதிவு செய்வது என்பவை தொடர்பில் பதிவு செய்வதற்குமான ஒரு வலைத்தளத்தையும் பயன்பாட்டையும் தொடங்குதல்.
  38. சுகாதார மேம்பாட்டிற்கான இலவச காற்று மற்றும் சுகாதார ஊக்குவிப்பிற்கான இடம் என பவற்றை ஒதுக்குதல், குறிப்பாக சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நோய் ஆபத்துக் காரணிகள் தொடர்பில் வெளிப்படுத்துதல்.