இலக்குகள்

 • Ease of Doing Business Index இல் இலங்கையின் தரத்தை 2022 இற்குள் 100 இலிருந்து 50 ஆக உயர்த்துதல்.
 • உலகலாவிய போட்டித் திறன் குறியீட்டில் இலங்கையின் தரத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் 85 முதல் 45 வரை மேம்படுத்துதல்.
 • அமைதியான பிராந்திய சூழலை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் இறையாண்மையை மேம்படுத்துதல்.
 • இலங்கையர்களுடன் வெளிநாட்டு தேசத்தில் வலுவான தொடர்பை ஏற்படுத்துதல்.

 • குடியரசு அல்லாத நாடுகளில் 38 தூதரகங்கள்.
 • குடியரசு நாடுகளில் 13 உயர்ஸ்தானிகர் ஆணைக்குழுக்கள்.
 • 13 துணைத் தூதரகங்கள்.
 • ஐக்கிய நாடுகள் சபைக்கு 2 நிரந்தர பணிகள்

செயற் திட்டம்

 1. இலங்கையின் தூதரகங்கள் மற்றும் உயர் இஸ்தானிகர் ஆணைக்குழுக்கள் அனைத்தையும் மதிப்பீடு செய்தல்:;
  • இராஜதந்திர முக்கியத்துவம், தாக்கம் மற்றும் புவிசார் அரசியல் ஆதரவு.
  • இருதரப்பு வர்த்தகம், பொருளாதார மற்றும் சமூக நன்மைகள்.
  • வெளிநாட்டினருக்கான தூதரக சேவைகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, பயணங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் ஒவ்வொரு தூதுக் குழுவின் பராமரிப்பு செலவு.
  • தற்போது காணப்படும் தூதுக் குழுவின் சேவைகளை அதிகரித்து மேம்படுத்துதல்.
  • புதிய தூதுக் குழுக்களை நிறுவுதல் மற்றும்; பயனற்ற தூதுக் குழுக்களை இல்லாது செய்தல்.
 2. ஆர்வமுள்ள தூதுவர்களுக்கு கட்டாய தூதர் நிர்வாக பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துதல் (AETP)
  • AETP இனை பின்பற்ற அரசியல் நியமனம் சார்ந்த அதிகாரிகளை நியமித்தல்.
  • நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்ட கற்கைகள்:
   • இராஜதந்திர நெறிமுறைகள் மற்றும் உத்திள்.
   • ஐக்கிய நாடுகள் முறைமை.
   • உணர்வுசார் நுண்ணறிவு.
   • எதிர்கால தொலைநோக்கு.
   • பொதுப் பேச்சு மற்றும் ஊடகம் கையாளும் விவகாரங்கள்.
   • தூதரக மற்றும் மனிதாபிமான இராஜதந்திரம்
   • தலைமைத்துவம்.
  • சர்வதேச உறவுகள் பற்றிய டிப்ளோமா கற்கையை BCIS இல் ஒரு வருட கற்கை நெறியாக்கவும் அதனை அனைத்து இராஜதந்திரிகளுக்கும் கட்டாயமானதாக்குவதையும் உறுதி செய்தல்.
  • தூதர்களுக்கான முக்கிய செயற்திறன் குறிகாட்டிகளை (KPIs)அறிமுகப்படுத்துதல். முக்கிய முPஐள உள்ளடக்குபவை
   • இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மதிப்பு
   • இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை.
   • இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை.
   • இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை.
   • இலங்கையின் தேசிய பெயரின் விழிப்புணர்வை அதிகரிக்க நாட்டில் உருவாக்கப்பட்ட ஊடக மதிப்பு.li>
  • கட்டாய மொழி கற்கைகளை இராஜதந்திரிகள் பின்பற்றுவதை உறுதி செய்தல். பின்வரும் மொழிகளில் பரீட்சயமாகுதல் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
   • சீன மொழி
   • ஹிந்தி
   • இஸ்பானிய மொழி.
   • அரபு மொழி
   • பிரஞ்சு மொழி
   • ரஷ்ய மொழி
 3. “Get to Know Sri Lanka Programme” இற்கு ஏற்பாடு செய்தல்.
  • இலங்கை வம்சாவழியை சேர்ந்த (18 முதல் 30 வயதிற்குட்பட்ட) டயஸ்போரிக் இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்டதின் மூலம் அவர்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதோடு அலங்கை வரலாறு மற்றும் மரபுகளின் பலவேறு அம்சங்களைப் பற்றிய விழிப்ணர்வை அளித்தல்.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஒழுங்குப்படுத்துவதற்காக, ஒரு ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள், முதலாளிகள் மற்றும் திட்ட ஏற்றுமதியாளர்களைக் கண்டு கொள்ளலாம். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் வழிகாட்டுதல்களையும் இந்த தளம் வழங்கும்.
 4. வெளிநாட்டில் படிக்கும் இலங்கை மாணவர்களுக்கான ““Youth Ambassador Programme” இணைத் தொடங்குதல்.
  • இலங்கையின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக.
  • குறிப்பாக பதட்டமான சூழலில் துல்லியமான செய்திகளை வழங்குவதற்கு.
  • வெவ்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞசர்களிடையே உறவை வளர்ப்பதற்கு.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஒளிநாடா மற்றும் பயிற்சிப் பட்டறைகளை பயன்படுத்தி பயிற்சி தொடர்புடைய தூதரகங்கள் ஊடாக பயிற்சியளித்தல்.

 5. முடிவெடுப்பவர்கள், சிந்திக்கக் கூடியவர்கள், ஊடகம் மற்றும் சிவில் அமைப்பு நிறுவனங்களுடன் நிகழ்ச்சித் திட்டங்களை தொடங்குதல்.
  • இராஜதந்திர தலைமை அடைகாப்புகளை ஒழுங்கமைத்தல்.
  • கொள்கை சோதனை ஆய்வகங்களை ஒழுங்கமைத்தல்.
  • உருவகப்படுத்தல் வகுப்புகளை நடாத்துதல்
 6. பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக அருகிலுள்ள எல்லை நாடுகளுடன் பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை துரிதப்படுத்த நாட்டு எல்லை கொள்கையை அறிமுகப்படுத்துதல்.
 7. ASEAN உச்சி மாநாடு போன்ற வெளிநாட்டு பொருளாதார மன்றங்கள் மூலம் வெளிநாடுகளுடன் தொடர்புகனை வலுப்படுத்துதல் மற்றும் பல.
 8. வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் பொருட்டு
  • பொருளாதாரம், பல்வேறு துறைகளில் உள்ள வாய்ப்புக்கள் மற்றும் எளிதான வணிகக் குறியீட்டு தரவரிசையை 100 முதல் 50 ஆக மேம்படுத்துவதற்கான முயற்கிகள் மற்றும் குறியீPட்டில் 2022 ஆம் ஆண்டாகும் போது 85 இலிருந்து 45 ஆக அதிகரித்தல் உலக போட்டி குறித்த தகவல் உள்ளடக்கிய காலாண்டு சஞ்சிகையை அறிமுகம் செய்தல்.
  • பொருளாதாரம், வரி, ஊக்கத் தொகை, மற்றும் ஒழுங்குமுறைகள், தகவல்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சக்தி, எரிசக்தி பற்றிய விபரங்களுடன் கூடிய ஆண்டுக் கையேட்டை வடிவமைத்தல்.
 9. வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி, புவிசார் அரசியல் பிரச்சினைகள் மற்றும் தேசிய திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவாற்காக வெளிநாட்டு முதலீட்டுத் தொழில் தொடர்பாக கொள்கைகளi உருவாக்குவதில் நிபுணர்களைக் கொண்ட ஒரு அலகினை அமைத்தல்.
 10. சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக, ASEAN,Commonwealth போன்ற நாடுகளில் உள்ள முன்னணி சட்ட அமுலாக்க மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே ஒரு தொடர்பை பேணுதல்.
 11. 120,000 அமெரிக்க டொலர் முதலீடுகளும், 2,400 அமெரிக்க டொலர் மாத வருமானமும் கொண்ட வெளிநாட்டவர்கள் பின்வரும் நன்மைகளை “இலங்கை எனது இரண்டாவது நாடு” என்ற ஊக்கமளித்தல் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தல்.
  • வாகனங்களுக்கு வரியில்லாத கொடுப்பனவு.
  • குடியிருப்பதற்கான சலுகைகளுடன் கூடிய வாய்ப்புக்கள்.
  • 21 வயதிற்கு குறைவான பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கான அணுகள் விருத்தி செய்யப்படல்.
  • சமூக ரீதியான வருகைக்கான அனுமதி.
 12. இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும்; மூலோபாய நலன்களை பின்வருவனவற்றின் மூலம் ஊக்குவித்தல்.
  • இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல்
  • கூட்டங்கள் அல்லது கலந்துரையடல்களில் எழுப்பப்படும் பலவேறு பிரச்சினைகள் குறித்த நிலை அறிக்கைகளைத் தயாரித்தல்.
  • சர்வதேச கூட்டங்களின் போது கூடுதலாக இரு தரப்பு வருகைகள் மற்றும் கூட்டங்களின் போது விவாதித்தல்.
  • துணை செயலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட வருகைகளின் போது பிரச்சினைகளை எழுப்புதல்.
  • ஏல்லையை விஞ்சிய திட்டங்கிள்ன மூலம் மற்ற நாடுகளுடன் உறவை மேம்படுத்துதல்.
 13. ஐக்கிய நாடுகள் சபை முகவர் மற்றும் பிற பிராந்திய மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கையின் சர்வதேச சுயவிபரத்தை பலதரப்பு அமைப்பில் வளர்த்த்ல.