இலக்குகள்
To increase GDP per capita from
USD 4,000 to USD 12,000
|
தற்போது இலங்கையில்
(மாணவர்களுக்கான சதவிகிதம்
19 – 23 வருட)
|
2020 – 2025 இற்கான இலக்கு
(மாணவர்ச் சேர்க்கை)
|
தடவைகளின் அதிகரிப்பு
அல்லது குறைப்பு
இலக்கை அடைவதற்கு
|
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017)
|
7%
|
25,200
|
16.67%
|
60,000
|
அதிகரிப்பு
2.38 தடவைகளால்
|
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017)
|
4.1%
|
15,000
|
29.23%
|
105,228
|
அதிகரிப்பு
7.1 தடவைகளால்
|
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை.
|
4.1%
|
15,000
|
4.1%
|
15,000
|
|
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017)
|
22%
|
79,200
|
40%
|
144,000
|
அதிகரிப்பு
1.8 தடவைகளால்
|
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன)
|
62.8%
|
225,600
|
10%
|
36,000
|
குறைப்பு
6.28 தடவைகளால்
|
வருடாந்த மாணவர்கள்.
|
|
360,000
|
|
360,000
|
|
- அரசாங்க பல்கலைக்கழக பட்டதாரிகளின் எண்ணிக்கையை 25,200 இலிருந்து 60,000 ஆக அதிகரித்தல் மற்றும் உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களின் பட்டதாரிகள் எண்ணிக்கையை 15,000 இலிருந்து 105,228 ஆக அதிகரித்தல்.
- வருடாந்த மொத்த பல்கலைகழக பட்டதாரிகளின் எண்ணிக்கையை 180,000 இலிருந்து 360,000 ஆக அதிகரித்தல்.
செயற் திட்டம்
- அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர் உள்ளெடுக்கும் திறனை 30,000 இலிருந்து 60,000 ஆக அதிகரித்தல்.
- குறைந்த தர மதிப்பெண் கொண்ட பகுதிகளை மேம்படுத்துவதன் மூலம் தற்போதுள்ள பல்கலைக்கழக தர வரிசைகளை மேம்படுத்துதல்
உலக உயர் கல்வி பல்கலைக்கழக தரவரிசைகளின் தரப்படுத்தல் தடவைகள
- கற்பித்தல் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல்
- தொழில்த்துறை வருமானத்தை அதிகரித்தல்
- சர்வதேச மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
- வெளியீடுகள் மற்றும் மேற்கோள்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
- அனைத்து பட்டப்படிப்புக்களுக்கும் வேலைவாய்ப்பிற்கான உத்தரவாதத்தினை வழங்குதல். வேலை வாய்ப்பு சந்தையில் கேள்வியில்லாத அனைத்து பட்டப்படிப்புக்களையும் நிறுத்துதல்.
- பல்கலைக்கழக பட்டப்படிப்புக்களை தொழிற் சந்தையிலும் எதிர்கால தொழில் வாய்ப்புக்களையும் பெற்றுத் தரக் கூடியவாறான கல்வி அமைப்பைக் கொண்டு மறுசீரமைத்தல்.
- அரச மருத்துவக் கல்லூரியின் கொள்திறனை 1,300 இலிருந்து 2,000 ஆக அதிகரித்தல் மற்றும் பல் வைத்திய துறைக்கான உள்ளீர்ப்பை அதிகப்படுத்தல். தனியார் மருத்துவப் பல்கலைக்கழங்களை தடை செய்தல்.
- அரச மற்றும் பகுதியளவு அரசாங்க பல்கலைக்கழகங்களில் ஒன்லைன் தளத்தின் ஊடாக விரிவுரைகள் கிடைக்கக் கூடியதாக இருத்தலை உறுதிப்படுத்தல்.
- இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கு மாணவர் கடன் வசதிகளையும் சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு உதவித் தொகையையும் வழங்குதல்.
- வெளிநாடுகளில் மேலதிக கல்வியை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அரசாங்க பல்கலைக்கழகங்களில் IELTS போன்ற மொழிப் பரீட்சை வசதிகளை வழங்குதல்.
- அரச பல்கலைக்கழக நூலகங்களில் இருக்கும் புத்தகங்களை மின் நூலக தளத்திற்கு மேம்படுத்துதல்.
சர்வதேச மென்புத்தகங்களை வாங்கி, E-நூலகம் வழியாக அனைத்து மாணவர்களுக்கும் அவற்றை இலவசமாக வழங்குதல்.
- நவீன சாதனங்களைக் கொண்டு அரசாங்க பல்கலைக்கழகங்களின் ஆய்வு கூடங்களை புதுப்பித்தல்.
- ஒன்லைன் ஒதுக்கீடு முறைமையின் மூலம் அரசாங்க பல்கலைக்கழகத்தின் ஆய்வு வசதிகளை திறந்து கொடுத்தல்.
- தற்போதுள்ள அனைத்து அரசு பல்கலைக்கழக விடுதிகளையும் முறையான சுகாதார வசதிகளுடன் மேம்படுத்தல்.
- அனைத்து அரச பல்கலைக்கழச சிற்றூண்டிச் சாலைகளிலும் தரமான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல்.
- அனைத்து வகையான பகிடி வதைகளையும் அரச பல்கலைக்கழகங்களில் தடை செய்தல
2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை 1980 மாணவர்கள் பகிடி வதைக் காரணமாக அரச பல்பலைக்கழகங்களை விட்டு விலகியுள்ளனர்.
- உயர் கல்விக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT இனை அமுல்படுத்துதல்.
கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் VAT விகிதங்கள் என்பன அடுத்த 25 வருடங்களுக்கு மருத்துவ கல்லூரிகள் தவிர்ந்த தனியார், தனியார் சர்வதேச பல்பலைக்கழங்களை கட்டுவதற்கு உத்தரவாதமளிக்கும்.
- பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவினுள் சர்வதேச தரம் வாய்ந்த 5 பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு அரசாங்க மென் கடன் வழங்குதல்.
வருடாந்தம் 50,000 சர்வதேச மாணவர்களுக்கு கல்வி சுற்றுலாவை பற்றி ஊக்கமளித்தல்.
- மாவட்ட ரீதியான வர்த்தக முயற்சியின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனியார் அல்லது பகுதியளவு அரசாங்க பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க ஊக்கமளித்தல்.
- வருடாந்தம் 105,228 மாணவர்கள் என்ற அடிப்படையில் உயர் தரம் சித்தி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1.2 மில்லின் வட்டியில்லாத கடன் தொகையினை அவர்கள் தங்கள் உயர் கல்வியை தனியார் பல்கலைக்கழகங்களில் தொடரும் பொருட்டு அறிமுகப்படுத்தி வழங்குதல்.
- வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்த வகையில் STEM தொடர்பான பிரிவு மற்றும் பிரிவிற்கு பிரிவு உருவாக்குதல்.
- வெளியீடு வீதத்தை அதிகரிக்கும் முகமாக, விரிவுரையாளர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக அவர்களின் ஆராய்ச்சியின் தரம் மற்றும் அவர்கள் வெளியிட்ட வெளியீடுகள் மற்றும் ஆவணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஊக்கத் திட்டங்களை உருவாக்குதல்.
- வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் பங்காளராக செயற்பட்டு மாணவர்களை, விரிவுரையாளர்களை, ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை மற்றும் நிபுணர்களை பரஸ்பரம் பரிமாற்றிக் கொள்வதற்கு ஊக்கமளித்தல்.
- தனியார் மற்றும் பொது பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்களை இளமானி மற்றும் முதுமானி பட்டப்படிப்புக்களுக்காக இணைத்துக் கொள்வதை அதிகரித்தல்.
- அனைத்து எழுத்துரு புத்தகங்களையும் பிரைலி முறைமைக்கு மாற்றுவதுடன் இலவசமாக கேள் மற்றும் பார்வை தகவு உதவிகளை செய்தல்.
- இலங்கையின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களது தாய் மொழிக்கு மேலதிகமாக சிங்களம்,ஆங்கிலம், தமிழ் மொழியினை கற்பதற்கு ஒன்லைன் மூலமான மொழி கற்கை வசதிகளை செய்து கொடுத்தல்.
- ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் தொழில் வழிகாட்டலை வழங்குதல்.
- தொழில்நுட்பஃவிஞ்ஞான மாணவர்களை தொழில் முயற்சியாண்மையாளர் ஆக்குவதங்கு தேவையான அறிவுறைகள் மற்றும் முயற்சிகைளை வழங்கி ஊக்கப்படுத்துதல்.
- மாணவர்களை அவர்களது கல்வித் தகைமைக்கு ஏற்றாற் போல் பயிற்சி பட்டறைகளில் இணைவதற்கு தேவையான உதவிகளை செய்தல்.
- ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மனநல ஆலோசனையை வழங்குதல்.
- பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தனிப்பட்ட சீர்ப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு ஒளிநாடாக்களுடன் ஒரு தளத்தை தொடங்குதல்.