இலக்குகள்

 • 10 மில்லியன் பார்வையாளர்கள்.
 • சுற்றுலாத் துறையிலிருந்து 18 பில்லியன் வருமானம்.

செயற் திட்டம்

 1. பின்வருவனவற்றை கவனத்திற் கொண்டு இலங்கையை மையமாகக் கொண்ட ஒரு தேசிய மூலோபாயத்தை அறிமுகப்படுத்துதல்.

  • சுற்றுலாத்துறை
  • ஏற்றுமதிகள்
  • ஆட்சி
  • கலாச்சாரம்
  • மக்கள்
  • விமான நிலையம், குடியேற்றம் மற்றும் முதலீடு

 2. விமானநிலைய அபிவிருத்து மற்றும் விமானத் தொடர்பு.

  • அதிகரித்த அப்ரொன் இடவசதி மற்றும் 16 கூடுதல் விமானப் பாலங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவாக்குதல்.
  • அதிகரித்த பயணிகள் இயக்கத்தை சமாளிப்பதற்கு பண்டாரநாயக்கவில் முனைவு இடத்தை மேம்படுத்தல்.
   (சரி பார்க்கும் தளம், குடிவரவு தளம், லோஞ்ச் வசதிகள், மேம்படுத்தப்பட்ட சாப்பாட்டிடம் மற்றும் அனுபவங்கள், ஓய்வுகால செயற்பாடுகள் மற்றும் விமானறிலையத்தில் இருந்து விடுதிக்கான போக்குவரத்து போன்றன)
  • VVIP lounge மற்றும் அதன் நுழைவு வாயில்களை (BIA) இன் பட்ஜெட் விமான சேவை செயற்பாடுகளுக்கு மாற்றுதல்.
  • ரத்மலான, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்களை சர்வதேச பஜ்ஜெட் விமான சேவைக்காக விருத்தி செய்தல்.
  • ரத்மலானை விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையை 1773 மீட்டரில் இருந்து 2400 மீட்டராக கிழக்கு பக்கமாக நீடித்தல். இது D வகை விமானங்களை தரையிறக்க உதவும். அதாவது, 120 இருக்கை திறன் கொண்ட விமானங்கள் ஆகும். ரத்மலானை விமான நிலையத்தை ஒத்த ஓடுபாதை நீளம் கொண்ட சர்வதேச விமான நிலையற்கள் பின்வருமாறு.
   • லண்டன் நகர சர்வதேச விமான நிலையம் - ஐக்கிய இராச்சியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
   • அன்டவேர்ப் சர்வதேச விமான நிலையம் - பெல்ஜியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
   • பொகோஸ் டெல் டொரொ கொலொன் சர்வதேச விமான நிலையம் - பணாமா – ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
  • தற்போதைய ரத்மலானை விமான நிலைய முனையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டப்பட்ட ஒரு பெரிய இரும்பு கட்டிடமாக மாற்றுதல், இது பயணிகள் கையாளுதலுக்கு மேம்பட்ட தளவமைப்பை வழங்கும்.
  • ரத்மலானையில் ஒரு தனியார் ஜெட் செயற்பாட்டு வசதிகளை நிறுவுதல். சர்வதேச தனியார் விமானங்கள் முழு வரவேற்பு சேவைகளுடன் ரத்மலானையில் தரையிறங்கும்.
  • மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை மீளாரம்பித்தல்.
  • உள்நாட்டு விமான நடவடிக்கைகளுக்காக கொக்கல, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் விமான நிலையங்களை உருவாக்குதல் மற்றும் கண்டியின் திகனவில் உள்நாட்டு விமானங்களுக்கு புதிய விமான நிலையத்தை அமைத்தல்.
  • தாமரை கோபுரத்தின் ஒரு பகுதியை பொதியிற்கும் சேவைகளுடன் கூடிய ஒரு உப அதிவேக சர்வதேச சோதனை மையமாக மாற்றுதல்.
  • எரிபொருள் தரையிறக்கம், தரிப்பிடம்,விமான நிலைய வரி, விமான பாலம் மற்றும் பொருட்களை கையாளும் கட்டணங்களை மலேசியாவுடன் பொருத்துதல்.
  • பட்ஜெட் பாவிகளுக்கு தற்போதைய விமானம் சுற்றி திரும்பும் நேரத்தை 60 நிமிடங்கள் வரைக் குறைக்கவும், ஓடுபாதை இயக்கத்தை தற்பேதைய 11 முதல் 17 மணித்தியாளமாக அதிகரித்தல்.
  • BIA இல் KIOSKS சரிபார்ப்பு நேரத்தை 8 முதல் 20 ஆக அதிகரித்தல்.
  • முதல் தர மற்றும் வியாபார வகுப்பு பயணிகளுக்கு VIP க்களுக்கு விஷேடமான அதிவேக குடிவரவு சேவையினை வழங்குதல்,
  • அனைத்து விமானச் சேவைக் கட்டணங்களையும் அதி உச்ச நேரம் அதி உச்ச நேரமின்மை என பிரித்து அதி உச்ச நேரம் இல்லாத போது குறைந்த கட்டணத்தை வசூலித்தல்.
  • இலங்கையினுள் பயணிப்பதற்காக 50 இருக்கைகளைக் கொண்ட விமான சேவையை நடைமுறைப்படுத்தல்.
  • அனுமதிக்கும் வேகத்தை அதிகரிக்கவும் மற்றும் செயற்த்திறனை மேம்படுத்தவும் தானியங்கி குடிவரவு வாயில்களை அறிமுகப்படுத்துதல்.
  • இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் முதல் 20 ஐரோப்பிய பிரதேசங்களுக்கு நேரடி விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
   • ஐக்கிய இராச்சியம்
   • ஜேர்மனி
   • பிரான்ஸ்
   • நெதர்லாந்து
   • இத்தாலி
   • சுவிஸர்லாந்து
   • இஸ்கண்டினேவியன்.
  • விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களையும் அவற்றின் அட்டவணைகளையும் அந்தந்த சர்வதேச இணைப்பு விமானங்களுடன் ஒத்திசைய செய்தல்.
  • முன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விசாவை அங்கீகரித்தல்.
  • புpன்வருவனவற்றை வழங்குவதன் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட வாகன சேவையை நிறுவுதல்.
   • இரு வகை வாகன சேவைகளை பேணுதல்..
   • சுpறப்பு வாகன பதிவுத் தகடுகளுடன் 900 வாகன உரிமையாளர்களுக்கு வரி இல்லாத வாகன அனுமதி வழங்குதல்.
   • இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வாகன சேவைகளை ஒழுங்குப்படுத்துதல்.
 3. உட்கட்டமைப்பு செயற்பாடுகள்

  • தேசிய மற்றும் சர்வதேச நிகழ்ச்சிகளுக்காக 80,000 தொடக்கம் 100,000 கொள்ளளவு கொண்ட பல் நோக்க அரங்கத்தை கட்டுதல்.
  • பிரதான நகரம் அல்லது மாவட்டத்தில் சுற்றுலா தகவல் மையத்தை நிறுவுதல்.
  • கவனத்தை ஈர்க்கும் வகையில் அனைத்து பிரதான வீதிகளிலும் சுத்தமான கழிவறை வசதிகளுடன் கூடியஉணவு விடுதிகள் மற்றும் ஓய்வு மையங்களை நிறுவுதல்.
  • அனைத்து புகையிரத நிலையங்களிலும் சரியான இருக்கைகள், கழிவறைகள் மற்றும் சிற்றூண்டிச் சாலைகள் காணப்படுவதை உறுதிச் செய்தல்.
  • பெரியளவிலான ஈர்ப்பிற்காக சரியான கழிவறை வசதிகள், கழிவகற்றல், கார் மற்றும் பேரூந்து தரிப்பிடம் மற்றும் றுi-குi வலயங்கள் இருப்பதை உறுதிப்படுத்தல்
  • சூடான நிலைகளில் குளிர்மையைத் தருவதற்காக பாதையோரங்களில் மரங்களை வளர்த்தல்.
  • வெலிகம மற்றும் மிரிஸ்ஸ துறைமுகங்களில் மீன்பிடி படகு உரிமையாளர்களை ஊக்குவிக்கவும், திமிங்கலத்தைப் பார்க்கும் சுற்றுப் பயணங்களுக்காக பிரத்தியேகமாக குறைந்த சத்தத்துடன் வேகப் படகுகளை இயக்குதல் - அவர்களின் தற்போதைய மீன் பிடி நடவடிக்கைகளுக்கு கூடுதல் வணிக வாய்ப்பை வழங்குதல்.
  • உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களை ஈர்க்கவும் தெரிவிக்கவும் கூகிள் மெப் வழியாக இருப்பிடம் மற்றும் திசைகள் உள்ளிட்ட தெரு உணவு விற்பனையாளர்கள் பற்றிய தகவலுடன் கையடக்க தொலைப்பேசிப் பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல்.
  • வாடகை இடங்கள் மற்றும் குடியிருப்புகளை பராமரிப்பதற்கும், யுசைடிnடி போன்ற ஒன்லைன் வாடகை தளங்கள் வழியாக சொத்துக்களை பட்டியலிட மக்களை ஊக்குவிப்பதற்கும் ஒரு நிலையான வழிகாட்டுதலை உருவாக்குதல்
  • சிகிரியா, அநுராதபுரம், பொலன்னறுவை சிறிபாத மற்றும் கண்டி போன்ற பாரம்பரிய தளங்களை பாதுகாத்து, பார்வையாளர் அனுபவத்தை மேம்படுத்தல்.
   • நிலப்பரப்பை மீட்டெடுத்து பராமரித்தல், பொது கழிப்பறைகளை மேம்படுத்தல் மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை வழங்குதல்.
   • சில்லறை வியாபாரத் தளங்கள் மற்றும் சிற்றூண்டிச் சாலைகளுடன் ஒன்றிணைந்த பார்வையாளர் தளங்களை விருத்தி செய்தல்.
  • பாரம்பரிய மற்றும் மத தளங்களை மீடடெடுத்து அபிவிருத்தி செய்தல்:
   • புனித நகரமாக கண்டி
   • சிகிரியா பண்டைய நகரம்
   • புனித நகரம் அநுராதபுரம்
   • காலியின் பழைய நகரம் மற்றும் அதன் கோட்டைகள்
   • யாழ்ப்பாணம் நல்லூர் கோவில்
   • எம்பக்க தேவாலயம்
    மற்றும் தேவையானவைகள்.
  • சுற்றுலாத் துறையின் சீரான தன்மையை உறுதி செய்வதற்காக வெள்ளத் தடுப்பு மற்றும் தணிக்கைகளைத் தொடங்குதல். இலங்கை கடற்படையின் பொறியியலாளர்கள், பருவகால அகழ்வாராய்ச்சி மற்றும் நிரப்புதல், நதி வாய் முகாமைத்துத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
  • சாத்தியமான பாரம்பரிய சுழற்சிப் பாதைகளை வரைபடமாக்கி, சுழற்சி தடங்களை அறிமுகப்படுத்துதல்.
  • கொழுப்பிற்கு அருகாமையில் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளுக்கு பூங்காக்களை அமைத்தல்.
  • தனியார்த் துறையின் பங்களிப்புடன் மிருகக்காட்சி சாலைகளை விருத்தி செய்தல்.
   • 15 ஆண்டுகளாக நிதியுதவி செய்யும் தனியார் நிறுவனத்தின் கீழ் முத்திரை குத்தக் கூடிய புதிய விலங்கு கூடுகளை வழங்குதல்.
   • மொத்த வடிவமைப்பு மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்படுத்தலை மேற்கொள்ளுதல்.
   • இலங்கை உயிரியல் பூங்காவாக மறு பெயரிடுதல்.
   • மிருகக்காட்சி சாலை வருகைக்காக கட்டப்பட்ட பிரபல விடுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக பேரூந்து சேவைகளை செயற்படுத்தல்.
   • பாடசாலைக் சிறுவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கான கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.
   • பலவகையான சாப்பாட்டு மற்றும் நினைவுச்சின்ன கடைகளை அறிமுகப்படுத்துதல்.
  • வருவாயை அதிகரிப்பதற்கு 573,376 ஹெக்டேயர் வரை வனவிலங்கு பூங்காக்களை உருவாக்குதல்.
  • பதுள்ளையில் உள்ள டிக்காப்பிடிய மற்றும் வவுனியா மற்றும பிலியந்தலை பிரNhசங்களில் 3 புதிய உயிரியல் பூங்காக்களை உருவாக்குதல்.
  • அம்பாறையின் லகுகலையில் ஒன்றும் மின்னேரியாவில் ஒன்றும் என 2 யானைகள் சரணாலயத்தை கட்டுதல்.
  • நாடு முழுவதும் தாவரவியல், மூலிகை மற்றும் வாசனைத் திரவியங்கள் தோட்டங்களை உருவாக்குதுல்.
  • பயணிகளுக்கு வன இருப்புக்களை திறப்பதன் மூலம் வெப்பமண்டல மழைக்காடு அனுபவங்களை உருவாக்குதல்.
  • பின்வருவனவற்றின் மூலம் திருகோணமலை, மிரிஸ்ஸ மற்றும் கல்பிட்டியில் திமிங்கிலம் பார்வையிடுதலை விருத்தி செய்தல்.
   • நடைப்பாதைகள், தெரு விளக்குகள், குடிநீர், பொதுக் கழிப்பிடங்கள், காத்திருக்கும் இடங்கள் மற்றும் வாகன தரிப்பிடஙகள் ஆகியவற்றை முறையாக பராமரித்தல் உள்ளிட்ட மீன்வளத் துறை மேம்பாடு.
   • 200 பயணிகள் அமரக் கூடிய சிற்றூண்டிச் சாலை மற்றும் ஓய்வறைகளுடன் கூடிய படகுகளை மேம்படுத்துதல்.
   • பார்வையிடும் இடங்களுக்கு பயண நேரத்தை குறைக்க, 20 முடிச்சுகளில் இடத்தை அடையக் கூடிய வேகப் படகுகளை இயக்குதல், தற்போது அடைய எடுக்கும் நேரம் 5-7 மணித்தியாலமாகும், பரிந்துரைக்கப்பட்ட படகுகளை பயன்படுத்தி 1-2 மணித்தியாலங்களில் பயண இடத்தை அடையலாம்.
  • பவளப் பரப்புதல் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பவளப் பாறைகளை புதுப்பத்தல்.
  • மோட்டார் ஓட்டுதல், வான் நீச்சல், காற்று நீச்சல், காற்றாடி உலாவுகை மற்றும் நீருக்கடியிலான இஸ்கூட்டர் சுற்றுப் பயணங்கள் போன்ற கடற்கரை செயற்பாடுகளை மேம்படுத்தல்.
  • நாடு முழுவதும் கடல் ஆமை விடுதிகளை விருத்தி செய்தல்.
  • பயிற்சியளிக்கப்பட்ட மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்ட உலாவல் பயிற்றுவிப்பாளர்களை அதிகரித்தல்.
  • அனுதியளிக்கப்பட்ட உயிர் காப்பாளர்களுக்கான பயிற்சி மற்றும் எண்ணிக்கையை அதிகரித்தல்.
  • பொருத்தமான மென்மையான திறன்கள் மற்றும் மொழிப் பயிற்சி அளிப்பதன் மூலம் கடற்கரை சிறுவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல்.
  • இலங்கையின் முக்கிய வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சுற்றுலா சான்றிதழ் பெற ஊக்கமளித்தல்.
  • கொழும்பிற்குள் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களுக்கான ஈர்ப்புக்களுடன் புதிய நகர பூங்காக்களை உருவாக்குதல்.
  • “டிஸ்னி லேன்ட்” போன்ற பொழுதுப்போக்கு பூங்காக்களில் முதலீடு செய்தல்.
  • கடலோரப் பகுதிகளில் கூடுதல் ஓய்வு நேர செயற்பாடுகளாக 100 கிளப்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் “ஹோம்ஸ்டே” சுற்றுலா கருத்தை பிரபலப்படுத்துதல்.
  • மலைப்பிரதேசம் மற்றும் தெற்குப் பகுதிகளுக்கான ஆடம்பர புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களை மேம்படுத்துதல்.
  • கண்ணியா, மடுநாகல மற்றும் மகா ஓயா போன்ற சூடான நீரூற்றுக்களை உரவாக்குதல்.
  • விடுதி அறைகள் மற்றும் உணவகங்களை மேம்படுத்த அரசாங்க ஆதரவு மற்றும் பயிற்சி பட்டறைகளை வழங்குதல்.
  • பாரம்பரிய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் கிராமங்களை அடையாளம் கண்டு அபிவிருத்தி செய்தல், தயாரிப்புக்களின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் கைவினைஞர்களுக்கு வருமானத்தை பெற்றுக் கொடுத்தல்.
  • சுற்றுலா பற்றிய புகார்கள் மற்றுமு; சிக்கல்களை நிர்வகிப்பதில் சுற்றுலா பொலிஸ் அதிகாரிகளுக்கு ஒன்லைன் பயிற்சி ஒளிநாடாக்களை வழங்குதல்.
  • மொழி, தகவல் தொடர்பு திறன் மற்றும் சரியான அவசர நிலைமை முகாமைத்தும் குறித்த பயிற்சி ஒளிநாடாக்களை அறிமுகப்படுத்துதல்.
 4. அனுபவங்கள்

  • நாட்காட்டி நிகழ்வுகளை அறிமுகம் செய்தல்.
  • கலை மற்றும் கைவினைப் பொருட்கள், வரலாறு மற்றும் பாரம்பரியம், கட்டிடக் கலை, கலாசாரம், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு, இயற்கை மற்றும் வனவிலங்குகள், சாகச சமையல் அனுபவங்கள் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றின் அடிப்படையில் 10 மாவட்டங்களை முக்கிய சுற்றுலாத் தளங்களாக உருவாக்குதல்.
  • பாரம்பரிய பண்டிகைகளின் போது சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தல்.
   • சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசகாக், எசல மற்றும் தீபாவளி போன்ற பாரம்பரிய விழாக்களை அடிப்படையாக கொண்ட பயணத்திட்டங்கள்.
   • யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாதை யாத்திரை பயணத்தை பிரபல்யப்படுத்தல் (ஜூன் 8 முதல் ஜூலை 24 வரை 52 நாட்கள்.
   • கதிர்காம யாத்திரையை பிரபலப்படுத்தல்
   • அனுராதபுர நகர யாத்த்pரையை பிரபலப்படுத்தல்.
  • MICE சுற்றுலாத் துறை (கூட்டங்கள், சலுகைகள்;, மாநாடுகள், மற்றும் கண்காட்சிகள்)
   • 30,000 சதுர மீட்டர் பரப்பளவுக் கொண்ட ஜா-எல மற்றும் சிறி ஜயவர்தனபுற கோட்டையில் இரண்டு கண்காட்சி மையங்களையும், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடாத்த அனைத்து நவீன வசதிகளையும் செய்தல்.
   • 85,000 சதுர அடி இடத்தில் தாமரைக் கோபுரத்தில் உள்ள ஒரு மாநாட்டு மையமாக மாற்றுதல்.
   • கொழும்பில் உள்ள போர்ட் சிட்டியில் 10,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு மாநாடு மையத்தை உருவாக்குதல். டிடந
   • நாட்டினுள் வர்த்தகப் பயணிகளை ஈர்ப்பதற்காக விளம்பர ஒளிநாடாக்களை உருவாக்குதல், இதில் “இலங்கைக்கு வருகைத் தர 10 காரணங்கள்” உட்பட கிடைக்கும் அனைத்து வசதிகளையும் காண்பிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
   • ஹம்பாந்தோட்டை மாநாடு மையம் மாநாடு மற்றும் கண்காட்சிகளுக்கான சந்தையாகும்
   • MICE பயணிகளுக்கான வர்த்தக விசாவை எளிதாக்குதல்.
    • விமான நிலையங்களில் குடிவரவு தளங்களில் MICE பற்கேற்பாளர்களுக்கு பிரத்தியேக பாதைகளை வைத்திருப்பதன் மூலம் விரைவான விசா செயலாக்க சேவைகளை வழங்குதல்.
    • அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து வரும் அனைத்து MICE பங்கேட்பாளர்களுக்கு விசா கட்டணங்ளைத் தள்ளுபடி செய்தல். இது Mice பயணிகளை தங்கள் நிகழ்விற்கான இடமாக இலங்கையை தெரிவு செய்ய ஊக்குவிக்கும்.
    • MICE பங்பேற்பாளர்களுக்கான விரைவான பாதை உரிம முறையை செயற்படுத்தவதன் மூலம் MICE நிகழ்வுகளுக்கான வர்த்தக உரிமங்களை எளிதாக்குதல்.
   • நிகழ்வினை திட்டமி;டுபவர்கள், ஒலி-ஒளி உபகரணங்கள் விநியோகிப்பவர்கள், சரக்கு அனுப்புபவர்கள், பரிசுகள் மற்றும் நினைவுப் பொருட்கள், அச்சுப் பொறிகள், மொழிப்பெயர்ப்பாளர்கள் போன்ற அனுபவமிக்க வல்லுநர்கள் மூலம் MICEஅமைப்பாளர் உதவியை வழங்குதல்.