“ஒரு தேசத்தின் நல்வாழ்வு இயற்கை சூழலின் நிலை மற்றும் அது வழங்கும் வாய்ப்புக்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.”
தும்மிக்க பெரேரா
வறண்ட வலயத்தில் தான் பெரும்பாலான மனித-யானை முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்கப்படுகின்றன. சராரரியாக, வருடாந்தம் 70 மனித மற்றும் 250 யானைகளின் உயிர்கள் மனித-யானை முரண்பாட்டினால் இழக்கப்படுகின்றன. கடந்த 70 வருடங்களாக வன விலங்குப் பாதுகாப்பு திணைக்களத்தால் இடப்படும் காணிகளுக்கான வேலிகளின் ஊடாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட்டு இருக்கிறார்கள். எவ்வாறாயினும், மனித-யானை முரண்பாட்டின் அதிகரிப்பானது குறித்த தடுப்பு முறையின் வீரியமற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. ஏனென்றால், யானைகளின் மொத்த தொகையில் 30% மாத்திரமே வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படுகின்றன. மீதி 70% வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் நிலத்தில் வாழுகின்றன.
முனித-யானை முரண்பாட்டிற்கு உள்ளாகும் கிராமங்களை சுற்றி வேலிகளை அமைத்தல் (இது 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வினைத்திறனற்ற முறை என நிரூபிக்கப்பட்டுள்ளது). உயிரியல் வேலிகளை அமைத்தல், சென்சார் மூலம் இயங்கும் மெய்நிகர் வேலிகளை அறிமுகப்படுத்துதல் என்பன மனித-யானை மோதலைத் தடுக்கும் பொருட்டு ஊடுருவலை ஏற்படுத்தி யானைகளை எச்சரிக்கின்றன. ஏனெனில், மின்சார வேலியிடல் காரணமாக யானைகளில் மின்சாரம் பாய்ந்த பல சம்பவங்கள் காணப்படுகின்றன.
மின்சார வேலியின் இரு புறமும் யானைகளைக் கொண்ட பகுதிகளை அடையாளம் காண இலங்கை விமானப் படை கூகில் அடைவிடம் மூலமாக காணப்படுகின்ற மின்சார வேலிகளை புவியியல் ரீதியாக அடையாளம் காணுதல்.