இலக்குகள்

  • ஒவ்வொரு வீட்டிற்கும் 100% மின்சாரத்தை உறுதி செய்தல்..
  • தேசிய வலுசக்தி திறனை மேம்படுத்தல்.
  • எரி சக்தி நுகர்வோருக்கு சிறந்த கட்டணங்களை உறுதிப்படுத்த எரிசக்தி சந்தையின் செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல்.

இலங்கை மின்சார சபை

தனியார் மின் நிலையங்களுடன் கூடிய மின் நிலையங்களின் (PPP) எண்ணிக்கை: 258.

நிறுவப்பட்ட கொள்த்திறன்.

PPP: 4,046 MW

உற்பத்தியின் உடன் நிகர்

PPP: 15,374 GWh

மின் சக்தி நிலையங்களின்
எண்ணிக்கை..
நிறுவப்பட்ட கொள்திறன
(MW)
உற்பத்தி
(GWh)
இலங்கை மின்சார சபை – மொத்தம். 25 2,903 11,803
நீர் 17 1,399 5,149
தெர்மல் (எண்ணை) 7 604 1,886
தெர்மல் (நிலக்கரி) 1 900 4,764
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) 0 0 1.3
சிறிய தீவு 2.4
PPP: மொத்தம் 233 1,143 3,571
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சிறிய நீர்) 195 394 1,232
தெர்மல் (எண்ணை) 3 533 1,740
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (காற்று) 15 128 325
ஏனைய மீளப் பெறக் கூடிய சக்தி (சூரிய ஒளி, டென்ரோ, உயிரியல் 20 88 185
கூரை சூரிய 88
மொத்தம் 258 4,046 15,374

மூலம் : இலங்கை மின்சார சபை வருடாந்த அறிக்கை 2018

CEB இன் செலவுகளாவன தற்போதுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் மின் கொள்முதல் மற்றும் இயக்க செலவுகளாகும்.

CEB இன் உற்பத்தி செலவு மாறுபாடுகளில் இருந்து விலகி, பசுமை வலுசக்தியின் பெறும் போது குறைந்தபட்ச விலைய பயன்படுத்த வேண்டும்.

செயற் திட்டம்

இலங்கை மின்சார சபை

  1. தற்போதுள்ள அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களின் மின் செலவைக் கணக்கிட ஊதிய கணக்கியல் முறையைப் பயன்படுத்தல்.
  2. புதிய மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்யும் போது மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தேர்ந்தெடுக்க மதிப்பி;டப்பட்ட அளவிலான வலுசக்தி செலவைப் பயன்படுத்தல்.
  3. புதிய மின் உற்பத்தி நிலையங்களில் முதலீடு செய்யும் போது மலிவு விலையில் சுத்தமான வலுசக்தியை பயன்படுத்தல்.

    உ.ம். CEB நஷ்டம் ரூ.30 பில்லியன் ஆகும்.
    (ரூ 2 ஓ 15 பில்லியன் ) மின்சாரம் ஒரு அலகு ரூ.2 ஆல் அதிகரிக்கப்படுமானால்.
  4. ஒவ்வொரு மாவட்டத்திலும் வலுசக்தியை உருவாக்க நகராட்சி திண்மக் கழிவுகளை பயன்படுத்தி மின் நிலையங்களை அமைத்தல்.

    பொது மற்றும் தனியார் அமைப்புகளுடன் கூட்டாக இணைந்து மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குதல். மேற்கண்ட ஆலைகளுக்கு இயக்க கட்டணமானது அரசால் செலுத்தப்படும்.

  5. மின்குமிழ்களை இறக்குமதி செய்யும் போது VAT மற்றும் PAL வரிகளில் விலக்குகளை வழங்குதல். பாரம்பரிய மற்றும் மின்குமிழ்களுக்கு கூடுதலாக 30% CESS இனை அறிமுகப்படுத்துதல்
  6. குறைந்த பட்ச வலுசக்தி செயற்திறன் தரங்களை ஊக்குவித்தல்.

    விளக்கு வெளிச்சத்தின் திறனை ஊக்குவித்தல்.
    உ.ம்: LED மின் குமிழ்களை அதன் உற்பத்தி விலைக்கு வழங்குவது. வீடுகளுக்கான CEB வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டில் 5.5 மில்லியனாகும். ஆண்டுக்கு குறைந்தது ஒரு வீட்டில் 40 வோல்டேஜ் விளக்கு மாற்றப்படும். ஆகவே 30 வோல்டேஜ் கொண்ட மின் குழிழை ஊக்குவிப்பது 10 வோல்டேஜ் இனை சேமிக்கும். வருடாந்த சேமிப்பு 100 GWh சேமிக்கப்படும்.
    இது ஒரு வருடத்திற்கு 1825 மணித்தியாலங்களாகும்.

  7. பெரிய வணிக கட்டடிடங்களுக்கு அரசாங்கத்தால் வலுசக்தி தணிக்கைகளை இலவசமாக மேற்கொள்ளுதல் மற்றும் முதல் ஆண்டு வலுசக்தி சேமிப்பில் 95% வாடிக்கையாளருக்கு திரும்ப செலுத்தப்படல்.
  8. 500 இற்கு மேல் நுகரும் மின் சக்தியினை நுகரும் வீடுகளில் இஸ்மார்ட் அளப்பான்களை பொறுத்துதல். இந்த திட்டத்தின் நன்மைகளில் பின்வருவன அடங்கும்:
    1. வலுசக்தி பயன்பாடு பற்றிய நிகழ்நேர தகவல்.
    2. மின்சார நுகர்வுக்கு சிறந்த முகாமைத்துவம்.
    3. மீட்டர் வாசிப்பு செலவுகள் தவிர்க்கப்படும்.
    4. மேம்பட்ட பட்டியலிடல் திறன்.
    5. மாதாந்த மின்சார கட்டணத்தில் குறைப்பு.
    6. குறுகிய செயழிலப்பு காலம்.
    7. மொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பைக் கண்காணிக்கும் திறன் (AT& CL).
  9. அனைத்து சமூக ஊடகத் தளங்களிலும் மின்சாரம், நீர் ஆகியவற்றிற்கான வலுசக்தியின் திறனை பயன்படுத்தும் பழக்கத்தை மேம்படுத்த குறுகிய விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கி பகிர்தல்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபணம்.

  1. தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1967 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது (ஹைட்ரோகிராக்கர் இல்லாமல் 53 ஆண்டுகள் பழைமையான தொழில்நுட்பம்) மற்றும் அதன் கொள்திறன் ஒரு நாளைக்கு 40,000 பீப்பாக்கள் ஆகும்.

    தற்போதைய சுத்திகரி;ப்பு நிலையத்திற்கு கூடுதலாக, அதே வளாகத்தில், ஹைட்ரோகிராக்கர் மற்றும் ஒரு நாளைக்கு 100,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்ட ஒரு புதிய ஆலையை உருவாக்குதல், இது 51% உரிமையும் நிர்வாகமும் அரசாங்கத்திடம் காணப்பட வேண்டும்.