இலக்குகள

 • பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 11 முதல் 17 புறப்படும் ஓடுதள இயக்கத்தை அதிகரித்தல்.
 • விமான நிலையங்களின் வலுவான வலையமைப்பை உறுதிப்படுத்த உகந்த கட்டமைப்பை செய்தல்.

 • பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம்.

  1. தாமரை கோபுரத்தின் ஒரு பகுதியை பொதியிறக்கும் சேவைகளுடன் கூடிய ஒரு உப அதிவேக சர்வதேச சோதனை மையமாக மாற்றுதல்.
  2. அனுமதிக்கும் வேகத்தை அதிகரிப்பதற்காக முக மற்றும் கைரேகையுடன் கூடிய தானியங்கி குடிவரவு வாயில்களை அறிமுகப்படுத்துதல்.
  3. BIA இல் பொதிகள் இல்லாத பயணிகளுக்கு நுழைவினை வழங்கும் பொருட்டு kiosks சரிபார்ப்பு நேரத்தை 8 முதல் 20 ஆக அதிகரித்தல்.
  4. உள்நுழைவு பிரிவில் ஏற்படும் நெறிசலை குறைக்கும் பொருட்டு BIA இல் தற்போது காணப்படும 57 உள்நுழைவு பிரிவுகளுக்கு மேலதிகமாக 30 உள்நுழைவு பிரிவுகளை அறிமுகப்படுத்துதல்.
  5. VVIP lounge மற்றும் அதன் நுழைவு வாயில்களை BIA இன் பட்ஜெட் விமான சேவை செயற்பாடுகளுக்கு மாற்றுதல்.
  6. நிகழ்நேர விமான விவரங்கள், முனைய வரைப்படங்கள், வானக விபரங்கள் மற்றும் முன்பதிவுகள், உணவகங்கள் மற்றும் விமான நிலைய விடுதி விபரங்களை கொண்ட BIA அப் பயன்பாட்டை அமுல்ப்படுத்துதல்.
  7. 16 கூடுதல் விமானப் பாலங்களுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) விரிவாக்குதல்.
  8. விமானப் பாலங்கள் இல்லாமல் நுழைவுக் கதவுகள் மற்றும் விமானங்கள் இடையே பயணிக்கும் பேரூந்துகளுக்கு வங்கிகள் போன்ற நிறுவனங்கள் குறைந்த ஓட்டம் கொண்ட பேரூந்துகளை நீண்டக் காலப்பகுதியான 15 வருடங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.
  9. தற்பேதைய ஓடுபாதை இயக்கத்தை 11 முதல் 17 மணித்தியாளமாக அதிகரிப்பதற்கு, பட்ஜெட் காவிகளுக்கு தற்போதைய விமானம் சுற்றி திரும்பும் நேரத்தை 60 நிமிடங்கள் வரைக் குறைத்தல்.
  10. BIA தற்போது அதன் வளாகத்தை சுற்றி ஒரு கண்ணி வேலியை கொண்டுள்ள உலகின் ஒரே நிலையமாகும். மேம்பட்ட பாதுகாப்பிற்காக சென்ஸஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை மற்றும் மின்சார வேலிகளை அமைத்தல்.
  11. சிறப்பு வாகன பதிவுத் தகடுகளுடன் கூடிய வரி இல்லாத வானக அனுமதியினை வாகன உரிமையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் டீஐயு இல் ஒழுங்குப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கு முறையான வாகன சேவைகளை நிறுவுதல் மற்றும் ஒரு நிறுவப்பட்ட வாகன கம்பனிக்கு செயற்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தை ஒதுக்குதல்.
   இரண்டு வகையான வாகனங்களை வைத்திருத்தல், உ. ம், கார், வேன்.
   சிறப்பு பதிவு தகடுகளுடன் கூடிய வரி இல்லாத வாகன அனுமதிகளை 900 வாகனங்களுக்கு வழங்குதல்.
   பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக, வாகன சேவையை முறையாக ஒழுங்குப்படுத்தல்.

  உட்கட்டமைப்பு

  1. இத்மலான, பலாலி மற்றும் மத்தள விமான நிலையங்களை சர்வதேச பஜ்ஜெட் விமான சேவைக்காக விருத்தி செய்தல்.
  2. மற்றும் ரத்மலானை பட்ஜெட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்களை அறிமுகப்படுத்துதல,
   • புலாலி
   • திருகோணமலை
   • மட்டக்களப்பு
   • கொக்கல
   • மத்தள
   • திகன, கண்டி
  3. தற்போதைய இரத்மலானை விமான நிலைய முனையத்தை ஒரு வருடத்திற்குள் கட்டப்பட்ட ஒரு பெரிய இரும்பு கட்டிடமாக மாற்றுதல், இது பயணிகள் கையாளுதலுக்கு மேம்பட்ட தளவமைப்பை வழங்கும்.
  4. இரத்மலானை விமான நிலையத்தின் தற்போதைய ஓடுபாதையை 1773 மீட்டரில் இருந்து 2400 மீட்டராக கிழக்கு பக்கமாக நீடித்தல். இது D வகை விமானங்களை தரையிறக்க உதவும். அதாவது, 120 இருக்கை திறன் கொண்ட விமானங்கள் ஆகும். இரத்மலானை விமான நிலையத்தை ஒத்த ஓடுபாதை நீளம் கொண்ட சர்வதேச விமான நிலையங்கள் பின்வருமாறு.
   • லண்டன் நகர சர்வதேச விமான நிலையம் - ஐக்கிய இராச்சியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
   • அன்டவேர்ப் சர்வதேச விமான நிலையம் - பெல்ஜியம் - ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
   • பொகோஸ் டெல் டொரொ கொலொன் சர்வதேச விமான நிலையம் - பணாமா – ஓடுபாதை நீளம் 1500 மீட்டர்.
  5. மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை மீளாரம்பித்தல்.
  6. உள்நாட்டு விமான நடவடிக்கைகளுக்காக கொக்கல, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் விமான நிலையங்களை உருவாக்குதல் மற்றும் கண்டியின் திகனவில் உள்நாட்டு விமானங்களுக்கு புதிய விமான நிலையத்தை அமைத்தல்.
  7. கண்டி, திகன விமான நிலையத்தை 3 வருடங்களுக்குள் உள்நாட்டு பட்ஜெட் விமான நிலையமாக கட்டுதல்.
  8. இலங்கையினுள் பயணிப்பதற்காக 50 இருக்கைகளைக் கொண்ட விமான சேவையை நடைமுறைப்படுத்தல்.
  9. நாட்டில் 55,335 பட்ஜெட் அறைகள் இருப்பதால், குறைந்த கட்டண காவிப் பயணிகளுக்கு தங்குவதற்கு இலங்கைக்குள் அதிகமான பட்ஜெட் விமானங்களை (குறைந்த கட்டண காவிகளை) ஈர்த்தல்.
  10. பொதி சுமக்கும் விமானங்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, கொக்கல மற்றும் திகன(கண்டி) இலிருந்து சர்வதேசத்திற்கு பறக்கக் கூடிய வசதிகளை செய்தல்.
  11. பட்ஜெட் விமான நிறுவனங்களில் பொருட்களை கையாளும் ஏகபோகத்தை அகற்றி, பட்ஜெட் விமான நிறுவனங்கள் தங்கள் சொந்த பொதிகளைக் கையாள அனுமதித்தல்.
  12. எரிபொருள் தரையிறக்கம், தரிப்பிடம்,விமான நிலைய வரி, விமான பாலம் மற்றும் பொருட்களை கையாளும் கட்டணங்களை மலேசியாவுடன் பொருத்துதல்.
  13. ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக அனைத்து பொதி சுமக்கும் விமானங்களுக்கும் இலவச தரையிறக்கம் மற்றும் தரிப்பிட வசதிகளை வழங்குதல்.
  14. அனைத்து விமானச் சேவைக் கட்டணங்களையும் அதி உச்ச நேரம் அதி உச்ச நேரமின்மை என பிரித்து அதி உச்ச நேரம் இல்லாத போது குறைந்த கட்டணத்தை வசூலித்தல்.
  15. இலங்கைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டுவரும் ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி போன்ற முதல் 20 ஐரோப்பிய பிரதேசங்களுக்கு நேரடி விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.
  16. விமான நிலையங்களில் உள்நாட்டு விமானங்களையும் அவற்றின் அட்டவணைகளையும் அந்தந்த சர்வதேச இணைப்பு விமானங்களுடன் ஒத்திசைய செய்தல்.
  17. முதல் தர மற்றும் வியாபார வகுப்பு பயணிகள், ஏஐP க்களுக்கும் விஷேடமான அதிவேக குடிவரவு சேவையினை வழங்குதல்.

2030 இல் இலங்கை – ஒரு வளர்ச்சியடைந்த நாடு | தம்மிக்க பெரேரா
24 செப்டெம்பர் 2019