இலக்குகள்

  • கொள்கை, சட்டம் மற்றும் சேவைகள் மூலம் நீதிக்கான அணுகள், சட்டத்தின் ஆட்சி, பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
  • புத்திசாலித்தனமான பாதுகாப்பு
  • சிறைச்சாலை புனர்வாழ்வு
  • ஊழல் குறைப்பு.

  • செயற் திட்டம்

    பொலிஸ் திணைக்களம்

    புத்திசாலித்தனமான பாதுகாப்பு

    1. பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்படும் மக்களுக்கான புதிய எண்முறை பயோமெட்ரிக் அடையாளப்படுத்தல் முறைமையை அமுல்படுத்தல்.
    2. முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய CCTV கெமராக்களை அனைத்து பொது மற்றும் தனியார் இடங்களில் நிறுவுதல்.
    3. உலக பாதுகாப்பு முகவர்களுடன் குற்றவாளிகளின் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல். மேலும், நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவுவது தொடர்பில் கவனமாக செயற்படுவதற்காக முக அடையாளப்படுத்தலை விமான நிலையங்களில் பாவித்தல்.
    4. பொலிஸாருக்கு உடனடியாக முகத்தை அடையாளம் காணும் வகையிலான மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல்.
    5. சமூக ஊடக நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சாத்தியமான குற்றச் செயல்களை கண்காணிக்கவும் தரவு அறிவியலின் பகுப்பாய்வு மூலம் சாத்தியமான குற்றச் செயல்களை அனுமானித்தல்.
    1. அனைத்து பொலிஸ் சேவைகளையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்குதல் உ.ம். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்வதற்கான பொலிஸ் சான்றிதழ் கொழும்பில் மாத்திரமே வழங்கப்படுகிறது.
    2. இனை அறிமுகப்படுத்துதல “Home Police” programme.

      முன்மொழியப்பட்ட “Home Police Programme” ஆனது பொலிஸ் அதிகாரிகளை அவர்களது சொந்த பிராந்தியங்களுக்குள் பணியாற்ற அனுமதிப்பதன் மூலம் திறமான தகவல் தொடர்பாடலுக்கு உதவுகிறது (உ.ம். யாழ்ப்பாணத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரியை யாழப்பான பொலிஸ் நிலையத்தில் பணிக்கமர்த்தல் ). இது மொழி ரீதியான சுமையை குறைப்பதுடன் வாசலுக்கு வாசல் திறமான பொலிஸ் சேவையினை வழங்க உதவுகிறது. இத்திட்டமானது 4,960 பெண் பொலிஸ் அதிகாரிகளை நியமிப்பதுடன் (ஒரு நிலையத்திற்கு 10 அதிகாரிகள் வீதம் நாடு முழுதும் காணப்படும் 496 பொலிஸ் நிலையங்கள்) ஒரு நிலையத்திற்கு 5 மோட்டார் சைக்கிள் வீதம் வழங்கப்படும்.

      வருடம் தோறும் 1,700 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதுடன் அவர்கள் ஒன்லைன் மூலமாக பயிற்றப்பட்டு உள்ளுர் வன்முறைகளான சிறுவர் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை மற்றும் பாடசாலைப் பாதுகாப்பு போன்ற சேவைகளை செய்வதற்காக அணைத்துக் கொள்ளப்பட முடியும் மற்றும் இச் செயற்பாடானது அன்றாட புகார்களை 3,000 இலிருந்து 2,000 ஆக குறைக்கலாம்.

      “Home Police Programme” ஆனது, மையப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

    3. நிகழ் நேர தகவல் பரிமாற்றம் மூலம் விசாரணைகளை துரிதப்படுத்துதல். சந்தேக நபரின் இலத்திரனியல் படம், நிகழ்நேர பகர்வுடன் கூடிய நடமாடும் எண்முறை வழக்கு கோப்பு, எண்முறை சான்றுகள் பிடிப்பு, நடமாடும் அடையாள அட்டை சரிபார்ப்பு, காவலில் உள்ள பல் வகை தேடல் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமான கூட்டத்தை அடிப்படையாக கொண்ட விசாரணை ஆகியவற்றை உள்ளடக்கிய மின்னணு சாட்சி அறிக்கை மூலம் இவை நடாத்தப்படும்.
    4. செயற் திறனை அதிகரிப்பதற்காக டிக்கெட்டுக்களை விரைவுப்படுத்துவது போன்ற எண்முறை மற்றும் நேர் சீரான செயற்பாடு.
    5. செயல் திறன் மிக்க பொலிஸ் செயற்பாட்டை ஆராய்தல் - சாத்தியமான குற்றச் சம்பவத்தை முன்கூட்டியே அடைவதற்கு கோரிக்கை முன்கணிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல். வரிசைப்படுத்தப்பட்ட முடிவுகளை இயக்குவதற்கு எதிர்கால அபாயங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட உளவுத் துறை பகுப்பாய்வுகளை மாதிரியாக் கொள்ள முன் கணிப்பு பொலிஸ் பகுப்பாய்வுகளைப் பயன்படுத்துதல்.
    6. கையில் வைத்திருக்கும் இலத்திரனியல் உபகரணம் அல்லது நடமாடும் கொடுப்பனவு முறைமை மூலம் தளத்திலேயே கண்டம் கட்டும் செயன் முறையை அறிமுகம் செய்தல்.
    7. பொலிஸ் விசாரணையின் கண்டுபிடிப்புக்களுக்கு உதவும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மரபணு பரிசோதனை மற்றும் போதைப் பொருள் பரிசோதனை ஆய்வுக் கூடங்களை கட்டுதல்.
    8. தானியங்கு பயோமெட்ரிக் அடையாள அமைப்புக்கள், தடவியல் பகுப்பாய்வு மற்றும் வழக்கு முகாமைத்துவ அமைப்புக்கள் போன்ற அனைத்து சட்ட அமுலாக்க பிரிவுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த தளமாக E-police application பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல்.
    9. போலிஸ் உத்தியோகத்தர்களுக்கான ஒன்லைன் பயிற்சி ஒளிநாடாக்களை அறிமுகம் செய்தல்.
    10. வஸ்து துஷ்பிரயோகம் மற்றும் மனநல சேவைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் அதிகாரபூர்வ யூடியூப் ஒளியலையை நிறுவுதல்.
    11. மருத்துவ உதவி வழங்கும் போது ஓபியாய்டு பயன்பாட்டுக் கோளாறுகளுக்கு பயனுள்ள, சான்றுகள் அடிப்படையிலான பராமரிப்பை வழங்க சுகாதாரப் பயிற்சியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு இலவச அப்லிகேஷனை உருவாக்குதல்
    12. போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மதுசார மற்றும் புனர்வாழ்வு என்பவை கட்டிளமைப் பருவத்தினர் மத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பைப பற்றி பெற்றோரினை குறி வைத்து ஒன்லைன் சஞ்சிகைகளை பிரசுரித்தல்;
      • அடிமைப்படுதல் மற்றும் இந்த நாட்பட்ட நோயிலிருந்து வெளிவரும் வழிவகை.
      • போதைப்பொருள் அடிமைப்படுதலின் மறைமுக அறிகுறிகள்.
      • மறுவாழ்வுக்கு செல்லுதல் மற்றும் அது ஒவ்வொரு நாளும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு எவ்வாறு வழிவகுக்கிறது.
      • ஏன் Fentanyl ஆனது இலங்கையை அச்சுறுத்துகிறது. குநவெயலெட
      • அடிமைப்படுதல் மற்றும் மனநல சுகாதாரத்தை புறக்கணித்தல் என்பது ஏன் பெரிய தவறாக கொள்ளப்படுகின்றன?
      • கட்டிளமையும் கஞ்சாவும்
    13. சிறைச்சாலை புனர்வாழ்வு

      ஒழுக்கமான குடிமக்கள்.


      Snow

      (மூலம் - காவல்த் துறை திணைக்களம்)

      2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 99,036 குற்றஞ்சாட்டப்படாத கைதிகள் இருந்தனர், இவர்களில் 6.8% ஆனவர்களுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்கப் பெற்றிருக்கவில்லை, 52.9% ஆனோர் 5 ஆம் தரம் வரையில் மாத்திரமே கல்வி கற்றிருந்தனர் மற்றும் 85.1% ஆனவர்கள் 8 ஆம் தரம் வரையில் மாத்திரம் படித்திருந்தார்கள். எவ்வாறாயினும், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் உயர் தரத்திற்கு உட்பட்டவர்கள் 3.1% ஆனவர்கள் மாத்திரமேயாகும்.

      எனவே, ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது உயர்தரம் வரையில் கல்வி கற்றால் சிறைச்சாலைகள் மூடப்படலாம்.

  1. கைது செய்யப்பட்ட இடத்தில் குற்றவாளிகளின் விவரங்களை பதிவு செய்ய ப்ரோண்டோ போன்ற பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல். இந்த தகவல் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் அணுகக் கூடிய ஒன்லைன் தரவுத் தளத்தில் சேமிக்கப்படும். பொலிஸ் உள்ளடங்களாக பயனாளிகள் மற்றும் பயன்களை தனது கட்டை விரல் அடையாளத்தைப் பதிவதன் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும், களத்தில் இருக்கும் போது தேசிய பொலிஸ் தரவுத் தளத்தை உடனடியாக அணுகும் திறன் மற்றும் செயற் திறனை அதிகரித்தல், மற்றும் செயற் திறனை அதிகரிப்பதற்காக டிக்கெட்டுக்களை விரைவுப்படுத்துவது போன்ற எண்முறை மற்றும் நேர் சீரான செயற்பாடு.
  2. சிறைச்சாலைகளுக்கு கடன் நிவாரணத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல், அங்கு கைதிகளை அபராதம் மற்றும் நீதிமன்றக் கட்டணங்களில் இருந்து நிவாரணம் பெறும் பொருட்டு சமூக ரீதியிலான சேவைகளில் ஈடுபடலாம்.
  3. படித்துப் பகுப்பாய்வு செய்யப்பட்ட விஞ்ஞானம், இலக்கியம், மதம் மற்றும் வரலாறு குறித்த முன் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் சிறைத் தண்டணையை நான்கு நாட்களாக குறைத்தல

நீதி அமைச்சகம்

  1. பின்வருவனவற்றை செயற்படுத்துவதன் மூலம் ஊழலைக் குறைத்தல்:;
    • ஒவ்வொரு அமைச்சிற்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான விசாரணைக்கான ஆணைக்குழுவில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்படல் வேண்டும்.
    • கணக்காய்வு ஆணைக்குழுவில் இருந்தும் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு உறுப்பினரை நியமித்தல்.
    • அனைத்து கொள்முதல் செயல்முறைகளுக்கும் மின்-கொள்முதல் முறைமையை செயற்படுத்துதல்.
    • அரசியல் நிதியை நிர்வகிப்பதில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் பரப்புரைகளை ஊக்கப்படுத்துதல்.
    • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சரியான சொத்து பிரகடன முறைமையை அறிமுகம் செய்தல்.
    • ஊ. அரசு, சட்ட அமைப்புக்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOEs) சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்கள் ஃ ஒப்பந்தங்களில் அரசாங்க நலன்களைப் பாதுகாப்பதற்காக திட்ட கொள்முதல், நிறுவனங்களில் நிலையான உட்பிரிவுகளை அறிமுகப்படுத்துதல்.
    • In the case of any breach of contract(s), the Government can at any given time, terminate or/and file a civil suit against the party who breaches the contract.
  2. நீதிமன்றங்களின் உட்கட்டமைப்பை விருத்தி செய்தல், அங்கு அடிப்படை வசதிகள், இருக்கை மற்றும் விளக்குகள் இருப்பதை உறுதி செய்தல்.
  3. நீதிமன்ற அறைகள், ஒலி உபகரணங்கள், மல்டிமீடியா உபகரணங்கள் அத்தியவசிய மென் பொருட்கள் மற்றும் வேகமான இணைய இணைப்பு ஆகியவற்றுடனான கணினி வழங்கல் மற்றும் மாற்றல்.
  4. நீதிமன்றத்தின் திறனான செயற்பாட்டை உறுதி செய்யும் பொருட்டு தேவையான அளவு பயிற்றப்பட்ட நீதி சாரா உத்தியோகத்தர்களை நியமித்தல்.
  5. மொழிப்பெயர்ப்பு ஆவணம், இஸ்டெனோகிரபி மற்றும் கணினி முறைமை முகாமைத்துவம் போன்ற நீதிமன்ற சேவைகளை வழங்க பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு நிறுவனத்தை நிறுவுதல்.
  6. எண்முறை நீதிமன்ற முறைமையை அறிமுகப்படுத்துதல்.
  7. பாலியல் வன்புணர்வு வழக்குகளில் விரைவான நீதிமன்றத்தை அறிமுகப்படுத்தல்.

    நீதிமன்றங்களானது பாலியல் வன்புனர்வு வழக்குகளை தினமும் விசாரணை செய்வதோடு 4 மாத காலப்பகுதிக்குள் குறித்த வழக்கு விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

    இது நிறைவேற்றப்படும்;

    • பாலியல் வன்புனர்வு வழக்குகளை விசாரிக்க அரப்பணிப்பான ஆளணியை கொண்டிருத்தல்.
    • ஒவ்வொரு மாவட்டமும் தடவியல் சான்றுகளை பரிசீலிக்க சிறந்த ஆய்வு கூடத்தைக் கொண்டிருத்தல்.
    • அனைத்து பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலைகளுக்கும் பாலியல் வன்புனர்வு வழக்கினை விசாரிக்கும் பொருட்டு விசேட தடவியல் உபகரணத்தை வழங்குதல்.
  8. பின்வருவனவற்றை இயலச் செய்யும் ஒன்லைன் தரவுத் தளத்தை உருவாக்குதல்;
    • சமர்ப்பிக்கப்பட்ட சட்ட வரைபை மக்கள் வாசிப்பதற்கு வழங்குதல். அதன் பாராளுமன்ற செயன் முறையின் போது, சட்ட மூலத்தை சமர்ப்பித்தவர் யார், அதன் தற்போதைய நிலவரம் மற்றும் மாற்றங்கள் போன்ற விபரங்களை தரக் கூடியதாக இருக்க வேண்டும்.
    • சபை அமர்வுகளை குடிமக்கள் நேரடியாக பார்வையிடல்.
    • நகர சட்டங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை ஒன்லைனில் வழங்குதல்.

    இது ஊழலைக் குறைப்பதுடன், குடிமக்களை சட்டவாக்க விடயங்களில் பங்கேற்பதை ஊக்கப்படுத்துகிறது.

  9. பொலிஸ் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட ஒன்லைன் வீடியோ தொடர்பாடல் வசதிகளுடனான போதைப் பொருள் நீதிமன்றத்தை அறிமுகம் செய்தல், அதன் மூலம் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களை கைது செய்யும் போது சிறைக்கு அனுப்புவதற்கு பதிலாக நேரடியாக மறு வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள்.

    போதைப் பொருள் வைத்திருத்தல் அல்லது விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களுக்கு தற்போதைய சட்டங்களே பேணப்படல்.

    அவர்கள் தடுத்து வைக்கப்பட்ட மீதமான சமூகத்தில் சேவை செய்த பிறகு, குற்றவாளிகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் இலத்திரனியல் கண்காணிப்புடன் வீட்டில் தங்குவது, பகலில் வேலை செய்வது /படிப்பது மற்றும் இரவில் மேற்பார்வை மையங்களில் தங்குவது அல்லது கட்டமைக்கப்பட்ட திட்டத்துடன் பாதியளவில் வீட்டில் தங்குதல்.