இலக்குகள்

மொத்த தனி நபர் உள்நாட்டு உற்பத்தியை 4,000 அமெரிக்க டொலர்களில்
இருந்து 12,000 அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல்.

தற்போது இலங்கையில்
தற்போது இலங்கையில (19 – 23 வருட மாணவர்களுக்கான சதவிகிதம்)
2020 – 2025 இற்கான இலக்கு
(மாணவர்ச் சேர்க்கை)
இலக்கை அடைவதற்கு தடவைகளின் அதிகரிப்பு அல்லது குறைப்பு
அரசாங்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 7% 25,200 16.67% 60,000 தடவைகளால 2.38 அதிகரிப்பு
உள்நாட்டு தனியார் பல்கலைக்கழங்களில் இருந்து பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை (2017) 4.1% 15,000 29.23% 105,228 தடவைகளால 7.1 அதிகரிப்பு
வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை. 4.1% 15,000 4.1% 15,000
தொழில் பயிற்சி நெறியை முடித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை (2017) 22% 79,200 40% 144,000 தடவைகளால 1.8 அதிகரிப்பு
வேலைப் படையணிக்காக பயிற்றப்படாத வேலையாட்களின் பங்களிப்பு (வீட்டு வேலையாள், நாட் கூலி போன்றன) 62.8% 225,600 10% 36,000 மூலம் குறைகிறது 6.28 அதிகரிப்பு
வருடாந்த மாணவர்கள். 360,000 360,000
 • தற்போது உயர் தரம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 218,101 இலிருந்து 300,000 ஆக அதிகரித்தல் மற்றும் அதிகமான மாணவர்கள் STEM பாடங்கள் பயில்வதனை உறுதி செய்தல்.
 • சாதாரண தர பரீட்சைக்கு வருடாந்தம் 360,000 மாணவர்கள் அமர்வதை உறுதி செய்தல்.
 • முழுமையான வசதிகளுடன் கூடிய தேசிய பாடசாலைகளின் தரத்துடன் பொருந்துமாறு மாகாண சபைகளின் கீழ் 771 பாடசாலைகளை உருவாக்குதல்.
 • மாணவரகளின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல்.

செயற் திட்டம்

 1. ஆரம்ப நிலை, பல்கலைக்கழக மற்றும் தொழில்பயிற்சி கல்வி என்பவற்றிற்கு வருடாந்தம் 10% அதிகரிப்புடன் கூடிய ரூ.200 பில்லியன் இனை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்குதல்.
 2. வாரத்தின் ஐந்து நாட்களுக்கும் ஐந்து புதிய வகை பிஸ்கட்டுகளை அறிமுகப்படுத்துதல், அவற்றை காலை உணவை வாங்க முடியாத குழந்தைகளுக்கு துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூப்பனை வழங்குவதன் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.
  இந்த புதிய வகை பிஸ்கட்டுக்களானது சந்தைகளிலும் கிடைக்கக் கூடிய வசதிகளை செய்தல்; துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் ஊடாக இலவச புத்தகங்கள், மற்றும் ஏனைய கொடுப்பனவுகள், பாடசாலை சீருடை, காலுறை மற்றும் பாதணிகள் என்பவற்றின் விநியோகத்தையும் ஆரம்ப நிலை முதல் இரண்டாம் நிலை பாடசாலை மட்டம் வரையில் தொடர்ந்து செய்தல்.
 3. தரமான மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப நிலைப் பாடசாலைகள் அமைப்பதற்கு தனியார் துறைக்கு நிதியளித்தல்.
 4. ஆரம்ப நிலை பாடசாலைகளுக்கான வீடியோ அடிப்படையிலான மற்றும் தேவையான ஏனைய ஆசிரியர்ப் பயிற்சிகளை எளிதாக்குதல்.
 5. முழுமையான வசதிகளுடன் கூடிய தேசிய பாடசாலைகளின் தரத்துடன் பொருந்துமாறு மாகாண சபைகளின் கீழ் 771 பாடசாலைகளை உருவாக்குதல்.
  • 276 பிரதேச சபைகளில் இருந்தும் 2 பாடசாலைகள் (552 பாடசாலைகள் )
  • 41 நகர சபைகளில் இருந்தும் 3 பாடசாலைகள் ( 123 பாடசாலைகள் )
  • 24 மாநகர சபைகளில் இருந்தும் 4 பாடசாலைகள் ( 96 பாடசாலைகள் )

  இந்த 771 பாடசாலைகளில் அதே தேசிய அளவிளான பிரபலமான பாடசாலைப் பெயர்கள் மற்றும் நிர்வாகம் என்பன பின்பற்றப்பட வேண்டும்.

  மாணவரகளின் தொகையை 1,500 ஆல் அதிகரிப்பதற்கு போதுமான இட வசதிக் காணப்படும் பாடசாலைகளை தெரிவு செய்து புதிய உட்கட்டமைப்பு வசதிகளை செய்தல்..

  அதன் விளைவாக, இந்த 771 பாடசாலைகளிலும் சராசரியாக 1,500 மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான இட வசதி அதிகரிப்பதுடன் இது 1,156,500 மொத்த மாணவர்த் தொகையாக உயரும்.

 6. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமான பாடசாலைகளின் இருக் கிளைகளை கிடைக்கக் கூடியதாக்குதல்.
  மொத்தமாக 50 பாடசாலைகள் கட்டப்படும், ஒவ்வொரு பாடசாலையும் 6,000 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான இட வசதியை கொண்டிருக்கும், எனவே மொத்த மாணவர் கொள்; திறன் 300,000 ஆல் அதிகரிக்கப்படும்.
 7. வெளிநாட்டிற்கு சேவை செய்யும் தொழில்த் தகைமையுடையோர்களை ஊக்குவிக்கும் முகமாக சர்வதேச பாடசாலைகளை நிறுவுவதனை ஊக்குவிக்கும் பொருட்டு 0% கூட்nணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT என்பவற்றை ஆரம்பித்தல்.
  தற்போது, ஆங்கிலம் பேசக் கூடிய தொழில் தகைமையுடையோர் நமது நாட்டில் ஆங்கில மொழி மூலமான பாடசாலைகளின் குறைபாடு காணப்படுவதால் தனது பிள்ளைகளை ஆங்கிலத்தில் கற்பிக்கும் பொருட்டு வெளிநாடுகளில் சேவை செய்கின்றனர்.
 8. வருடத்தின் மொத்த மாணவர்களில் 50% ஆனோரை பட்டதாரிகளாக்கும் இலக்கை அடைந்து கொள்ளும் பொருட்டு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி மற்றும் 0% VAT போன்ற சலுகைகளை கொடுப்பதன் மூலம் மருத்துவக் கல்லூரிகள் தவிர்ந்த தனியார் பல்கலைக்கழங்களை நிறுவுவதற்கு ஊக்கமளித்தல்.
 9. அனைத்து பாடசாலை செயற் திட்டங்களுக்குமான அறிவுறுத்தல் ஒளி நாடாக்கள் உள்ளடக்கிய கட்டணம் இல்லாத ஒன்லைன் தளத்தை அறிமுகம் செய்தல்.
 10. மாணவர்களது வாழ்வு மற்றும் சமூகத் தொடர்பு திறன்களை கற்பிக்க ஒளி நாடா வகுப்புகனை பயன்படுத்தல்.
 11. உயர் தர மாணவர்களுக்கு தொழில் ஆலோசனைகளை வழங்குதல்.

 12. Snow

  (மூலம் - காவல்த் துறை திணைக்களம்)

  2017 ஆம் ஆண்டில் இலங்கையில் 99,036 குற்றஞ்சாட்டப்படாத கைதிகள் இருந்தனர், இவர்களில் 6.8% ஆனவர்களுக்கு பாடசாலைக் கல்வி கிடைக்கப் பெற்றிருக்கவில்லை, 52.9% ஆனோர் 5 ஆம் தரம் வரையில் மாத்திரமே கல்வி கற்றிருந்தனர் மற்றும் 85.1% ஆனவர்கள் 8 ஆம் தரம் வரையில் மாத்திரம் படித்திருந்தார்கள். எவ்வாறாயினும், உயர் தரத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் உயர் தரத்திற்கு உட்பட்டவர்கள் 3.1% ஆனவர்கள் மாத்திரமேயாகும்.

  எனவே, ஒவ்வொரு பிள்ளையும் குறைந்தது உயர்தரம் வரையில் கல்வி கற்றால் சிறைச்சாலைகள் மூடப்படலாம்.

 13. துல்லியமான வறுமைக் குறைப்பு திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு செல்லாத 5,000 சிறுவர்களை புவியில் ரீதியாக அடையாளம் கண்டு (Geo-tag) அவர்களின் குடும்பங்களின் வருமானத்தை ஆலோசனை உதவி மூலம் அதிகரித்தல், இதனால் இந்த சிறுவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியும். இதனால் பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களின் எண்ணிக்கையை 5,000 இலிருந்து 0 ஆக குறைக்க முடியும்.
 14. சமூக அபிவிருத்து முயற்சிகளின் அமுலாக்கம் மற்றும் துல்லியமான வறுமை குறைப்பு என்பவற்றின் ஊடாக பாடசாலையிலிருந்து இடையில் விலகுபர்களின் எண்ணிக்கையை 30,000 இலிருந்து 0 ஆக குறைத்தல்.
 15. நாடு முழுவதும் உள்ள 10,194 அரசாங்க பாடசாலைகளிலும் இருந்து உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டிய தேவைபாடுள்ள பாடசாலைகளை தெரிவு செய்தல்.
 16. குறைந்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கொண்ட பாடசாலைகளை இணங்கண்டு உன்னிப்பாக கண்காணித்தல்.
  • 50 இற்கும் குறைவான மாணவர்களுடன் 1,486 பாடசாலைகள்
  • 50 – 100 இற்கும் இடைப்பட்ட மாணவர் எண்ணிக்கையுடன் 1,560 பாடசாலைகள்.
  • 9 ஐ விடவும் குறைவான எண்ணிக்கை கொண்ட ஆசிரியர்களுடன் 3,133 பாடசாலைகள்.
 17. அனைத்து பாடசாலைகளுக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் கழிவறை வசதிகள் காணப்படுவதை உறுதி செய்தல்
 18. தனியார் கல்விக்கு 0% VAT மற்றும் 0% கூட்டிணைக்கப்பட்ட வரியினை அறிமுகப்படுத்துதல்.

  இந்த வரி சலுகையானது அடுத்த 25 வருடங்களுக்கு தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளை கட்டுவதற்கு உத்தரவாதமளிக்கிறது.

 19. கொழும்பில் 6 முக்கிய தாழ்வாரங்களில் பிரபலமான பாடசாலைகளை திறத்தல் - காலி, ஹோமாகம, கடுவலை, நிட்டம்புவ மற்றும் நீர்கொழும்பு. இச் செயற்பாடு வீதிப் போக்குவரத்து நெறிசலைக் குறைப்பதுடன் கொழும்பிற்கு வெளியே பாடசாலைகளின் தரத்தினை உயர்த்துகிறது.
 20. குறைவான செயற்திறன் கொண்ட மாணவர்களுக்கு தரம் ஆறிலிருந்து வேறு பாடத்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இரு தரம் கணித பாடம் கற்பித்தல்.
 21. தரம் ஆறிலிருந்து விஞ்ஞான பாடத்தை ஆங்கிலத்தில் கற்பதற்கான தெரிவினை அறிமுகம் செய்தல்.
 22. தனிப்பட்ட நிதியியல் முகாமைத்துவத்திற்காக தரம் 10 மற்றும் 11 மாணவர்களை வணிக பாடத்தை தெரிவு செய்வதற்கு ஊக்கமிளித்தல்.
 23. ஆங்கிலத்தை “இணைப்பு மொழியாக” இலங்கையில் அடையாளப்படுத்துதல்.
  உ.ம். தமிழ் மொழியை படிக்கும் சிங்கள மாணவர்களுக்கு அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மொழியினை படிக்கும் தெரிவினை வழங்குதல், அதே போல் சிங்கள மொழியை படிக்கும் தமிழ் மாணவர்களுக்கு அந்தக் கால கட்டத்தில் ஆங்கில மொழியினை படிக்கும் தெரிவினை வழங்குதல்.
 24. தரம் 1 தொடக்கம் 13 வரையில் கற்பிக்கப்பட்ட அனைத்துப் பாடங்களுக்கும் ஆசிரியர் பயிற்சி மற்றும் கற்றல் ஒளி நாடாக்கள் கிடைக்க கூடியதாக இருப்பதனை உறுதி செய்தல்.
 25. வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றாற் போல் மாணவர்களை விஞ்ஞானம், கணிதம், வணிகம், உயிரியல் மற்றும் பொறியியல் பிரிவுகளை தெரிவு செய்ய ஊக்கமளித்தல்.
 26. பாடசாலைகளின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கூடங்களின் கொள்த்திறனை அதிகரிக்கும் போதே, தரம் 12 மற்றும் 13 இற்கான மாணவர்ச் சேர்க்கையை 210,000 இலிருந்து 300,000 ஆக அதிகரித்தல்.
 27. மாவட்ட அளவிலான பாடசாலைக் கல்வி முறையின் தரத்தை கண்காணிக்க ஒரு தளத்தை உருவாக்குதல்.
  தளமானது பாடசாலை தொடர்பான பொதுவான தரவுகளை உள்ளடக்க வேண்டும் (நகர மற்றும் கிராமபுற பாடசாலைகளின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை) மற்றும் செயற் திறமான திரை காணப்படல் (இடை விலகல் விகிதம்,செயற்படக் கூடிய கழிவறைகளுடனான பாடசாலைகள், குடிநீர் வசதிகளுடனான பாடசாலைகள் போன்றன).
 28. அரசாங்க,தனியார், சர்வதேச மற்றும் ஏனைய பாடசாலைகள் மற்றும் ஆரம்ப நிலைப் பாடசாலைகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு குழுவை அமைத்தல்.
 29. கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தினை ஒருங்கிணைத்தல், கணினிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் பாடசாலைகளில் இணைய இணைப்பை உறுதி செய்தல்.
 30. ஒன்லைன் தளத்தினூடாக தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கக் கூடியதாக இருப்பதனை உறுதி செய்தல்.
 31. தகவல் தொழில்நுட்பத்தை கற்பிக்கும் முறைகள் தொடர்பான அறிவுறுத்தல் ஒளிநாடாக்களை ஆசிரியர்கள் மத்தியில் பகிர்தல்.
 32. ஆசிரியர்கள் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிறாமப்புற பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் நேரடியான வகுப்புக்களை வீடியோ தொடர்பாடலை பயன்படுத்தி கற்பித்தல்.
 33. ஆசிரியர்கள் தங்களது தகுதிக்கு பொருத்தமான வெற்றிடங்களை கொண்ட பாடசாலைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள ஒன்லைன் விண்ணப்ப முறைமையினை விருத்தி செய்தல்.
 34. ஆசிரியப் பயிற்சிக்கான சான்றிதழுடன் கூடிய நிகழ்ச்சி திட்டத்தை நிறுவுதல்.
 35. ஒவ்வொரு பாடசாலையிலும் தரம் 6 முதல் 13 வரையான மாணவர் வெற்றிடங்களை ஒன்லைன் தளம் புதுபிக்கும்.
 36. மாவட்ட, தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலிருந்தான விளையாட்டு பற்றிய பதிவுகளுடனான வளைத்தளத்தை உருவாக்கி ஒவ்வொரு மாவட்ட மாணவர் விளையாட்டு வீரர்களின் தற்போதைய நிலையை புதுபித்தல்.
 37. பயிற்ச்சி; ஒளிநாடாக்களுடன் கூடிய ஒன்லைன் பயிற்சித் தளத்தை நிறுவுவதன் மூலம், மாணவர்கள் விளையாட்டுக்கு தேவையான பயிற்சிகளை பெற்று சர்வதேச மட்டங்களை அடைவதற்கு அவர்களின் செயற் திறனை மேம்படுத்துதல்.
 38. தற்போது காணப்படுகின்ற பாடசாலை கிரிகட் மைதானங்களை அபிவிருத்தி செய்தல்.
 39. பாடசாலையிலோ அல்லது ஒன்லைன் மூலமாகவோ சாதாரண தர மாணவர்களுக்கான கட்டாயமான மேலதிக கணித வகுப்புக்களை வழங்குதல்.
 40. ஆறுப் பாடங்களில் தேர்ச்சிப் பெற்ற ஆனால் கணிதத்தில் தேர்ச்சிப் பொறாத மாணவர்களுக்கு உயர் தரம் படிக்கும் போதே மேலதிகமாக கணித வகுப்புகளில் கலந்து கொண்டு கணித பாட பரீட்சையினை எழுதி சித்தியடைய வாய்ப்பளித்தல்.

  அவர்களின் சாதாரண தரத்தின் கணிதப் பாட தேர்ச்சியின் அடிப்படையில், உயர் தர இறுதிப் பரீட்சைக்கு அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

 41. மாணவர்களின் வருகை, செயற்திறன் மற்றும் நடத்தை என்பவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்கள் பாடசாலையை விட்டு இடையில் வெளியேறும் அபாயத்தை அணுமானித்தல்.
 42. வாராந்த கலை மற்றும் கைவினை நிகழ்ச்சிகள், விளையாட்டு, வாசிப்பு மற்றும் கதை சொல்லுதல் போன்ற மாணவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் செயற்பாடுகளுக்காக பாடசாலை நேர அட்டவனையில் ஒரு பாட நேரத்தை ஒதுக்குதல்,
 43. பாடசாலையை விட்டு இடையில் மாணவர்கள் விலகுவதற்கு காரணமாக அமையும் கடினமான பாடம் என கொள்;ளக் கூடிய பாடங்களுக்கு பாடசாலை முடிந்த பின்னர் மேலதிக வகுப்புக்களை வழங்குதல்.
 44. பாடசாலையை விட்டு இடையில் மாணவர்கள் விலகக் கூடியவர்கள் என கருதப்படக் கூடிய மாணவர்களளுக்கு உதவித் தொகை மற்றும் புலமைப் பரிசில் போன்ற அமைப்பில் நிதியினை ஒதுக்குதல்.
 45. பாடசாலை நூலக வசதிகளை மேம்படுத்துதல்.
 46. இலவச அணுகலுடன் கூடிய ஒன்லைன் நூலகங்களை அறிமுகம் செய்தல்.
 47. ஆரம்ப நிலை மற்றும் இரண்டாம் நிலை பாடசாலைகளில் திட்ட அடிப்படையிலான STREAM பாடத்திட்டத்தினை அறிமுகம் செய்தல் (விஞ்ஞானம், தொழில்நுட்பம், வாசிப்பு, பொறியியல், கலை மற்றும் கணிதம்)

  ஒவ்வொரு பாடத்திலும் கணிதம், விஞ்ஞானம், வாசிப்பு மற்றும் பொறியியல் ஆகியவை குழுக்களில் கற்க வேண்டிய மாணவர்களுடன் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

 48. கட்டாய சுகாதார பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் விசேடமாக, இளம் பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் சரியான மாதவிடாய் சுகாதாரம் பற்றி கற்பிக்கப்படல்.
 49. அவசர கால சுகாதார பொருட்கள் மற்றும் நப்கின்களை அகற்றக் கூடிய சரியான கழிவறை வசதி கிடைக்கக் கூடியதாக இருப்பதனை உறுதி செய்தல்.
 50. மாதவிடாய் காலங்களிலான மனப் பாதிப்பை குறைப்பதற்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களது கல்வி நிலை மேம்படுத்தப்பட வேண்டும்.
 51. அனைத்து ஆசிரியர்களுக்கும் போதுமான முதலுதவி பயிற்சி இருப்பதையும் முதலுதவி பயிற்சி பாடசாலை கல்வித் திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதையும் உறுதி செய்தல்.
 52. பெண்கள் பாடசாலைகளை நிறுவுவதற்கும் புதுபிப்பதற்கும் முன்னுரிமை வழங்குதல். மேலதிகமாக கல்வியை ஊக்குவிப்பதற்கு சிறுமிகளுக்கு உதவித் தொகையை வழங்குதல்.
 53. புவியியல் மற்றும் விஞ்ஞான பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்று சூழல் நட்பு, கழிவுகளை குறைத்தல் மற்றும் மீள்சுழற்சி என்பவற்றை கொண்ட கட்டாய சுற்று சூழல் கல்வியை அறிமுகப்படுத்துதல்.
 54. வெளிநாடுகளில் வசிக்கும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் இலங்கைக்கு வருகைத் தரும் போது உள்நாட்டு பாடசாலைகளுக்கு வருவதற்கும் உள்நாட்டு பரீட்சைக்கு தோற்றுவதற்கும் அனுமதியளித்தல்.
 55. நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும், வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அறிவு மற்றும் புரிதலை வலுப்படுத்துவதற்குமாக, ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை கற்றல் மாணவர்களுக்கு பாடத்திடடங்களை அறிமுகப்படுத்துதல்.
 56. சாதாரண தரத்திற்கு மேலாக கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் இருப்பதனை உறுதி செய்தல்.
 57. விஞ்ஞான பிரிவு காணப்படும் பாடசாலைகளை 1,029 இலிருந்து 2,029 ஆக அதிகரிக்கும் பொருட்டு 1,000 பாடசாலைகளை அதிகரித்தல்.
 58. நமது கல்வி முறைமையின் தரத்தினை மதிப்பீடு செய்யும் பொருட்டு சர்வதேச மாணவர் மதிப்பீட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கெடுத்தல் (PISA)
 59. 15 வருடங்கள் பழைமையான பாடசாலை பேரூந்து மற்றும் வான்களை கொண்டிருக்கும் உரிமையாளர்களுக்கு வாகனம் வாங்குவதற்கு வரி சலுகையுடன் கூடிய அனுமதியை வழங்குதல்.
 60. பாடசாலையை அடைவதற்கு பிரதான வீதிக்கு வருவதற்கு 2 கிலோ மீற்றரை விட அதிகமான தூரத்தை நடந்தே கடக்கும் மாணவர்களுக்காக கிராமங்களுக்கு 2,000 சிறிய ரக பேரூந்துக்களை வழங்குதல்.
 61. சாதாரண தர பரீட்சை பெறுபேற்றிற்காக காத்திருக்கும் காலத்தை 2 மாதங்களாக குறைத்தல்.

  சாதாரண தர பரீட்சைப் பெறுபேற்றிற்காக காத்திருக்கும் மாணவர்களுக்கான முன் உயர் தர வகுப்புக்களை அறிமுகம் செய்தல்.

  இலங்கையில் தற்போதைய பரீட்சை பெறுபேறு காத்திருப்புக் காலம் 4 மாதங்கள் ஆகும். அதற்கு மேலதிகமாக 2 மாதங்கள் பபடசாலையில் உயர் தர வகுப்புகள் ஆரம்பிக்கும் வரை காத்திருக்க வேண்டும். எனவே, மாணவர்களது 6 மாத காலப் பகுதி எந்த வித பயனும் இன்றி கழிந்து போகின்றன.

 62. உயர்தர பரீட்சை பெறுபேற்றிற்காக காத்திருக்கும் காலத்தை 2 மாதங்களாக குறைத்தல்.

  இலங்கையில் தற்போதைய பரீட்சை பெறுபேறு காத்திருப்புக் காலம் 4 மாதங்கள் ஆகும்.

 63. உயர் தரத்திற்கு பின்பு பல்கலைக்கழகம் செல்வதற்கான காத்திருப்புக் காலத்தினை 6 மாதங்களாக்குதல்.

  இலங்கையில் தற்போதைய காத்திருப்புக் காலமானது பெறுபேற்றிற்காக காத்திருக்கும் 4 மாதங்கள் உள்ளடங்ளாக 17 மாதங்கள் ஆகும்.