“வெளிப்படையான மற்றும் தெளிவான பொறுப்புக் கூறக் கூடியதும் மக்களை மையமாகவும் கொண்ட நிதிக் கொள்கைகளை பயன்படுத்துவதனால்; சக்தி வாய்ந்த பொருளாதாரங்கள் செழித்து வளர்கின்றன.”
தம்மிக்க பெரேரா
இலங்கையின் மக்கள் தொகை வளர்ச்சி சராசரியாக ஆண்டுக்கு 190,000 ஆகும். எனவே, தற்போதைய பொருளாதாரத்தை பராமரிக்கும் பொருட்டு, மேலதிகமாக ஆண்டுக்கு 62,400 வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் அவசியமாகும்.
வேலையின்மை விகிதத்தில் ஒவ்வொரு 1% குறைப்பிற்கும் மொத்த தனி நபர் உள்நாட்டு உற்பத்தி 3% அதிகரிக்கும் என்று ஒகுனின் சட்டம் கூறுகிறது.
வேலையின்மையை குறைப்பதற்கு மாவட்ட வாரியாக வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தினை நிறுவி செயற்படுத்துதல். இது மாதந்தோறும் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதுடன் தனியார்த் துறை முதலீடுகளுக்கு அரசு உதவும்.
லாபர் வளைவானது, வரி விதிப்பு விகிதங்களுக்கும் அதன் விளைவான அரசாங்க வருவாயின் அளவிற்கும் இடையிலான உறவை விளக்குகிறது. இது வரி விதிக்கக் கூடிய வருமான நெகிழ்ச்சித் தன்மையின் கருத்தை விளக்குகிறது. உ.ம் வரி விதிப்பு விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வரி விதிக்கக் கூடிய வருமான மாற்றங்கள்.
தற்போது நாட்டில் முதலீடுகள் இல்லாததற்கு ஒரு முக்கிய காரணம் தவறான வரி விகிதங்களாகும், ஏனெனில் நமது தற்போதைய வரி விகிதங்கள் முதலீட்டாளர்கள் எங்கள் போட்டியாளர்களை விட அதிகமாக உள்ளனர், அது நாட்டினுள் முதலீடு செய்யப்படுவதனை ஊக்கப்படுத்தவில்லை.
எனவே, நாட்டிற்கு உயர்ந்த அளவிளான முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருவாய் அதிகரிக்கும் புள்ளியில் வரி விகிதத்தை பராமரித்தல் தேவைப்படுத்தப்படுகிறது.
கிறீன்பீல்ட் மற்றும் பிரவுன்பீல்ட், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகரிக்க வரி மற்றும் சுங்க வரி கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதானது பொருளாதார வளர்ச்சி, மாவட்ட வரியான வேலைவாய்ப்பு அதிகரிப்பு மற்றும் பொருள் மற்றும் சேவை ஏற்றுமதி என்பவற்றிற்கு அவசியமாகும்.
ஆண்டு |
வருமான வரி
(நேரடி வரி) (ரூ.மில்லியன்) |
அரசாங்க மொத்த வருமானம்
(ரூ.மில்லின்) |
% அரசாங்க மொத்த வருமானத்தின் நேரடி வரி வீதம். | % அரசாங்க மொத்த வருமானத்தின் மறைமுக வரி வீதம். | ரூபாய் தேய்மானத்தின் விளைவாக பரிமாற்ற இழப்பு |
வெளிநாட்டு கடன்
(ரூ மில்லியன்) |
||||||
2005 | 52,535 | 379,747 | 13.80% | 86.20% | 117,785 | 956,620 | ||||||
2006 | 79,693 | 477,833 | 16.70% | 83.30% | 108,579 | 1,103,418 | ||||||
2007 | 107,169 | 565,051 | 19.00% | 81.00% | 71,646 | 1,326,487 | ||||||
2008 | 126,541 | 655,260 | 19.30% | 80.70% | 117,785 | 1,448,734 | ||||||
2009 | 139,558 | 699,644 | 19.90% | 80.10% | 23,114 | 1,760,467 | ||||||
2010 | 135,624 | 817,279 | 16.60% | 83.40% | -10,028 | 2,024,583 | ||||||
2011 | 157,310 | 967,862 | 16.30% | 83.70% | 90,335 | 2,329,280 | ||||||
2012 | 172,594 | 1,051,462 | 16.40% | 83.60% | 230,642 | 2,767,299 | ||||||
2013 | 205,666 | 1,137,447 | 18.10% | 81.90% | -15,361 | 2,960,424 | ||||||
2014 | 198,115 | 1,195,206 | 16.60% | 83.40% | -89,335 | 3,113,116 | ||||||
2015 | 262,583 | 1,454,878 | 18.00% | 82.00% | 285,091 | 3,544,031 | ||||||
2016 | 258,857 | 1,686,061 | 15.40% | 84.60% | 186,650 | 4,045,796 | ||||||
2017 | 274,562 | 1,831,531 | 15.00% | 85.00% | 225,223 | 4,718,618 | ||||||
2018 | 310,450 | 1,919,974 | 16.20% | 83.80% | 1,063,218 | 5,959,547 | ||||||
மொத்தம் | 2,481,257 | 2,405,344 |
வருமான வரி |
= |
கூட்டிணைக்கப்பட்ட மற்றும் கூட்டிணைக்கப்படாத வரி |
+ |
நீங்கள் சம்பாதிக்கும் போது செலுத்தும் வரி (PAYE) |
+ |
பொருளாதார |
+ |
வட்டி |
கடந்த 14 ஆண்டுகளில், அரசாங்கத்தின் நேரடி வரி வருவாய் மொத்த அடிப்படையில் ரூ 2,481 பில்லியனாக இருந்த அதே வேளை, மேலதிகமான ரூ 2,405 பில்லியன் ரூபா தேய்மானம் காரணமாக கடந்த வருடம் வெளிநாட்டுக் கடன் ரூ 5,959 பில்லியனாக அதிகரித்தது. எனவே, ரூபாய் தேய்மானமானது 2% - 3% இற்கு அப்பால் தேய்வடைவதை நிறுத்துவதற்கு முதலீடுகளை கொண்டு வருதல் அவசியமாகின்றது, விஷேடமாக வெளிநாட்டு நேரடி முதலீடு மற்றும் நேரடி வரி வருமானத்தை பொருட்படுத்தாத ஏற்றுமதியை அதிகரித்தல் என்பன முக்கியமானவை.
2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn இனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.
2018 ஆம் ஆண்டின் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.1,919 பில்லியனாகும். தவிர்ப்புக்களை கண்காணிக்கும் நோக்கத்திற்காக சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகிய இரண்டிற்கும் ஒரு செயற்கை உளவுத்துறை (AI) அடிப்படையிலான கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்துதல் (சுவிஸர்லாந்தில் ஐடீஆ றுயவளழn அனை அறிமுகப்படுத்திய பின்பு 10% சுங்க வருவாய் அதிகரித்தது) அதன் பிறகு, அரசாங்க வருவாய் 15% அதிகரிக்கப்படுவதுடன் அதன் மூலமான மேலதிக வருமானமாக ரூ.287 பில்லியன் பெறப்பட முடியும்.