இலக்குகள்

 • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வருமானத்தை 2025 இல் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தல்.
 • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புக்களை 2025 ஆகும் போது 80,000 ஊழியர்கள் எண்ணிக்கையிலிருந்து 400,000 ஊழியர்களாக அதிகரித்தல்.
 • 2030 இல் வளர்ச்சியடைந்த இலங்கையை ஒரு அறிவுபூர்வமான (Smart)இலங்கையாக மாற்றுதல்.

செயற் திட்டம்

இலங்கை தற்போது வளர்ந்து வரும் சந்தையிலிருந்து வளர்ச்சியடைந்த சந்தைக்கு மாற்றப்படும் கட்டத்தில் உள்ளது மற்றும் அறிவுப்பூர்வமான தீர்வுகள் வளர்ச்சியை நோக்கிய முக்கியமான விடயமாக காணப்படுகிறன. இந்த வளர்ச்சியடைந்த சந்தை என்ற இலக்கை 2030 இற்குள் அடைய வேண்டும், மேலும் வளர்ந்த இலங்கையை மெலும் 3 ஆண்டுகளில் இஸ்மார்ட் இலங்கையாக மாற்ற வெளிவாரி வளங்கள் அவசியமாகும்.

கவனம் செலுத்தப்படும் அம்சங்கள்,

 • இஸ்மார்ட் பாதுகாப்பு
 • இஸ்மார்ட் கல்வி
 • இஸ்மார்ட் சுகாதாரம்
 • இஸ்மார்ட் விவசாயம்
 • இஸ்மார்ட் போக்குவரத்து
 • இஸ்மார்ட் சுற்றுலாத்துறை
 • இஸ்மார்ட் விளையாட்டுக்கள்
 • இஸ்மார்ட் பயன்பாடுகள்
 • இஸ்மார்ட் நிதி
 • இஸ்மார்ட் உட்கட்டமைப்பு

தூர நோக்கு

இலங்கையை உலகின் 10 மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்றாக ஆக்குதல்

குறிக்கோள்

மக்களின் மகிழ்ச்சிக்காக இஸ்மார்ட் சேவைகளை விருத்தி செய்தல்.

தொழில்நுட்பத்தை ஆக்குதல்

AI (செயற்கையான உளவுத்துறை) – அனைத்து பொதுச் சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தளத்தை இயக்குதல்

 1. இஸ்மார்ட் பாதுகாப்பு
  • பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்படும் மக்களுக்கான புதிய எண்முறை பயோமெட்ரிக் அடையாளப்படுத்தல் முறைமையை அமுல்படுத்தல்.
  • முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய CCTV கெமராக்களை அனைத்து பொது மற்றும் தனியார் இடங்களில் நிறுவுதல்.
  • உலக பாதுகாப்பு முகவர்களுடன் குற்றவாளிகளின் தரவுகளை பகிர்ந்து கொள்ளுதல். மேலும், நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவுவது தொடர்பில் கவனமாக செயற்படுவதற்காக முக அடையாளப்படுத்தலை விமான நிலையங்களில் பாவித்தல்.
  • பொலிஸாருக்கு உடனடியாக முகத்தை அடையாளம் காணும் வகையிலான மூக்குக் கண்ணாடிகளை வழங்குதல்.
  • சமூக ஊடக நடவடிக்கைகளை கண்காணிக்கவும், சாத்தியமான குற்றச் செயல்களை கண்காணிக்கவும் தரவு அறிவியலின் பகுப்பாய்வு மூலம் சாத்தியமான குற்றச் செயல்களை அனுமானித்தல்.
 2. இஸ்மார்ட் கல்வி
  • சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கற்றல் கற்பித்தலுக்காக அனைத்து பாடசாலைகளிலும் வீடியோ அடிப்படையிலான வகுப்பறைகள்.
  • அனைத்து புதிய வகுப்பறைகளையும் மாணவர்களுக்கு பரந்த அணுகலை வழங்கக் கூடிய இஸ்மார்ட் வகுப்புறைகளாக உருவாக்குதல்.
  • கிடைக்கக் கூடிய அனைத்து வேலை வாய்ப்புக்களுடனும் ஒரு ஒருங்கிணைந்த ஒன்லைன் தளத்தை உருவாக்குதல், அது மக்களின் திறன்கள், விருப்பத் தேர்வுகள் மற்றும் இருப்பிடங்களுடன் பொருந்த வேண்டும்.
 3. இஸ்மார்ட் சுகாதாரம்
  • ஓன்லைன் மூலமாகவும் தொலைப்பேசி அப் மூலமாகவும் கிடைக்கக் கூடிய “Digital Health Hub” (DHH) இனை அறிமுகப்படுத்துதல். எண்முறை அடையாள அட்டையின் உதவியுடன் DHH இணை அணுகலாம், DHH இன் சேவைகள் பின்வருமாறு,

   • கடந்த 10 ஆண்டுகளுக்கான நோயாளரின் சுகாதார வரலாற்றை அணுகலாம்.
   • அனைத்து வைத்தியசாலைகள், சிறிய வைத்திய நிலையங்கள், இஸ்கேன், வைத்தியர்களின் சந்திப்பிற்கான நேர மற்றும் இடங்களை காண்தல்.
   • திட்டமிடப்பட்ட சந்திப்புக்கள் குறித்த விழிப்பூட்டல்கள்.
  • நோயாளிகளுக்கு வைத்தியசாலையை அடைவதில் இருக்கும் சிக்கல், செலவு செய்வதற்கான தரம், காத்திருப்பு நேரம் மற்றும் கிடைக்கக் கூடிய இடம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வுக் காணும் வகையில் தொலை நோயறிதல் சேவைகளை வழங்குதல்.
  • புற்று நோயின் கட்டத்தை கண்டறிந்து சுகாதார பதிவுகளின் பகுப்பாய்வின் படி சிகிச்சையினை பரிந்துரைத்தல்.
  • டெங்கு அப் இனை பயன்படுத்தி புவியியல் ரீதியாக நோயாளிகள் பரவலை விரைவாகச் சமாளிப்பதற்கு திசையையும் அதிகரிப்பு வீதத்தையும் கணித்தல்.
 4. இஸ்மார்ட் விவசாயம்
  • விவசாயியின் பயிர் விவரக் குறிப்பு மற்றும் கண்காணிப்பு.
  • 7 நாட்கள் வானிலை முன்னறிவிப்பு
  • காலநிலைப் பற்றிய முன்னறிவிப்பு மற்றும் காலநிலை இஸ்மார்ட் பாசன விவசாய நிகழ்ச்சி.
  • உரப்பயன்பாடு பற்றிய பரிந்துரை.
  • பயிர்நிலைக் கண்காணிப்பு
  • புவியியல் அடையாப்படுத்தல் மற்றும் பகுதிகளை அடையாளம் காணுதல்.
  • விவசாயிகளுக்கு பயிர்களின் குறைந்தபட்ச விலைக்கு உத்தரவாதம் அளிக்க பகுதி ஆய்வுகள்.
  • அறுவடைக் கண்காணிப்புக்கள்
  • பூச்சிய அளவிலான நோய் மற்றும் ஆலோசனைகள் (சரியான நேரத்திலான பயிர் ஆலோசனை)
  • நாற்று நிலைத் தொடக்கம் விற்பனை வரையான முடிவுக்கு முடிவை கண்டறிதல்.
  • விவசாயிகளுக்கான பயிர் ஆலோசனை தொலைபேசி அப்லிகேஷன் பயன்பாடு.
  • அறுவடையின் அளவை புரிந்துக் கொள்வதற்கு செயற்கை கோள் படங்கள் மூலம் இலங்கையின் பயிர்களின் முழுமையான வரைப்படத்தை பெறுதல்.
  • விநியோகஸ்தர்கள் மற்றும் வாங்குபவர்களுக்கு இடையில் அல்காரிதம் அடிப்படையிலான பொருத்தப்பாட்டை செய்தல்.
  • நாடு முழுவதும் பயிர் விளைச்சலைக் கணிப்பதன் மூலமும் உகந்த தீர்வுகளை வழங்குவதன் மூலமும் விவசாய விரயத்தைக் குறைத்தல்.
 5. இஸ்மார்ட் போக்குவரத்து
  • பொதுப் போக்குவரத்துக்கு ஒரு தொலைப்பேசி அப் இணைப் பயன்படுத்துதல், இதன் மூலம் பொது மக்கள் பேரூந்துகள் மற்றும் புகையிராங்களின் சரியான நிலை இடைங்களை அறியலாம்..
  • பயணிகளுக்கான காத்திருப்பு நேரத்தைக் குறைக்க முச்சக்கர வண்டிகள் மற்றும் வாகனங்களுக்கு இஸ்மார்ட் நேர மற்றும் வரிசை முகாமைத்துவ முறையை அமுல்படுத்துதல்.
  • கிடைக்கக் கூடிய தரிப்பிடங்களில் குறித்த நிகழ் நேர தகவலுடன் ஒரு ஒன்லைன் தளத்தை வழங்கி ஒன்லைன் கட்டணம் செலுத்துபவருக்கு 10% தள்ளுபடியுடன் தரிப்பு கட்டணங்களை சேகரித்தல்.
  • அல்ட்ரா உயர் விலக்க கெமராக்கள் மற்றும் செயலற்ற நேரத்தைக் குறைக்கும் மற்றும் ஓடுபாதை திறனை அதிகரிக்கும் ஒருங்கிணைந்த தரவுத் தளம் என்பவற்றை பயன்படுத்தி விமான நிலையங்களில் தரையிறங்கும் திறனை அதிகரித்தல்.
  • வீதிக் கண்காணிப்பு மற்றும் போக்குவரத்துப் புகார்களை செய்வதற்கு ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல். வீதி ஒழுங்குகளை மீறியமைக்காக மற்றும் ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்தியதற்காக அரசு வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்கள் மீதும் புகார் பதிவு செய்தல்.
  • போக்குவரத்து வாகனங்களின் ஓட்டங்களுக்கு ஏற்ப போக்குவரத்து விளக்குகளை தானியக்கமாக்குவதற்கு இஸ்மார்ட் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துதல்.
  • நேருக்கு நேர் விபத்துக்களின் மிக உயர்ந்த பதிவைக் கொண்ட புவியியல் சார் இடங்களுக்கு ஆலோசனை அறிகுறிகள் மற்றும் அறிவிப்புக்களுடன் கூடிய பொறியியல் தீர்வுகளை வழங்குதல்.
  • கையடக்க முறைமைகள் மூலம் தளத்திலேயே தண்டம் செலுத்துவதற்கான நடைமுறைகள்.
  • வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்பதை கண்காணிக்க விவேகமான போக்குவரத்து ஒளி மற்றும் வீதிக் கமராக்களை அறிமுகப்படுத்துதல்.
  • அனைத்து இலத்திரனியல் போக்குவரத்து அப்லிகேஷன்களையும் ஒரே ஒரு கையடக்கத் தொலைப்பேசி அப் இல் அடக்குதல்.
  • பொது போக்குவரத்து கட்டண வசூலிப்பிற்காக இலத்திரனியல் முறைமையை அறிமுகப்படுத்துதல், இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பான நாள் அல்லது வாரங்களுக்குரிய விசேட அனுமதியை வழங்குதல்.
  • சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஒளிநாடாக்களை உருவாக்கி பதிவேற்றுதல்.
 6. இஸ்மார்ட் சுற்றுலாத் துறை
  • சுற்றுலாப் பயணிகளுக்கான தொடர்புடைய சேவைகளை நிர்வகி;க்க நாடு முழுவதும் அன்றாடம் விடுதி குடியிருப்புக்கள் மற்றும் எதிர்கால முன்பதிவுகளின் தெரிவு நிலைகள் குறித்து ஒரு பகுப்பாய்வு தளத்தை உருவாக்குதல்.
  • அனைத்து சொத்துக்களையும் (தளங்கள், நினைவுச் சின்னங்கள், கோயில்கள் போன்றன) எண்முறையாக்குதல் மற்றும் இவைப் பற்றிய முக்கியமான தகவல்களை சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரே தளத்தின் கீழ் வழங்குதல்.
  • சுற்றுலாத் தளங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு சுற்றுலாவுக்கு மேட்பட்ட யதார்த்தத்தை உருவாக்குதல்.
  • சுற்றுலாப் பயணிகளின் திகதிகள், விருப்பத் தேர்வுகள், அவர்கள் பார்வையிட விரும்பும் இடங்கள் மற்றும் சேவை வழங்குனர்களுடன் இணைவது ஆகியவற்றின் அடிப்படையில் பயணத்திட்டத்தை உருவாக்க ஒரு தளத்தை விருத்தி செய்தல்.
 7. இஸ்மார்ட் விளையாட்டுக்கள
  • அனைத்து விளையாட்டுப் பதிவுகளையும் எண்முறையாக்கி ஒரு தளத்தை அமைப்பதன் மூலம் விளையாட்டு வீரர்களை பாடசாலை மட்டத்திலிருந்தே கவனித்தல்.
  • தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விளையாட்டைக் குறிக்கவும், வீரர்களின் வெற்றிகரமான சேர்க்கைகளை தெரிவு செய்யவும் AI இனை பயன்படுத்துதல்.
  • அதிக செயற் திறன் கொண்ட வீரர்களிடையே இஸ்மார்ட் அணிகலங்களை பாவித்தல் மற்றும் பயிற்சி வகுப்புகளின் போது அவர்களின் முக்கிய புள்ளி விபரங்களை கணித்து எதிர்கால செயற்திறன் தொடர்பில் அனுமானித்தல்.
  • போட்டிகளுக்கான வருகை விகிதத்தை அனுமானிக்க AI இனை பயன்படுத்தல் மற்றும் விளையாட்டில் பண வருமானத்தினை ஈட்டிக் கொள்வதற்கு அனுமதி சீட்டு விலையை மேம்படுத்தல்.
  • பயிற்றுவிப்பாளர்களுக்கு வீடியோ அடிப்படையிலான பயிற்சி மற்றும் கற்கைகளை வழங்குதல்.
 8. இஸ்மார்ட் பயன்பாடுகள
  • குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயன்பாட்டுச் சேவைகளின் பதிவுகளையும் எண்மயமாக்கி, அவற்றை ஒரு தளத்தின் கீழ் தேசிய அடையாள அட்டையுடன் இணைத்தல். இதில் பின்வருவன அடங்கும்:
   • E-அடையாளப்படுத்தல்
   • பாதுகாப்பு
   • E-நு ஆட்சி
   • இணைந்து செயலாற்றும் சேவைகள் (E - காணிப் பதிவு போன்றன)
   • நடமாடும் சேவைகள் (சாதுர்யமான போக்குவரத்து முறைமைகள், நடமாடும் தரிப்பிடம், எல்லை வரிசை முகாமைத்துவம் போன்றன)
   • சுகாதாரம்
   • E- கல்வி
   • வியாபாரம் மற்றும் நிதி (E – வரி, E-வியாபார பதிவு போன்றன)
  • IoT சென்ஸார்களைப் பயன்படுத்தி பயன்பாடுகள் உற்பத்தியில் ஈடுபடும் இயந்திரங்களின் முறிவை முன்னறிவிப்பதன் மூலம் தடுத்து பராமரித்தல்.
  • வலைத்தளத்தின் மூலம் அனைத்து பயன்பாடுகளுக்கும் அல்லது வழங்கப்பட்ட சேவைகளுக்கும் ஒன்லைன் கட்டணங்களை அனுமதித்தல். இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் எண்முறை பண செலுத்துகையை ஒருங்கிணைப்பதன் மூலம் செயற்படுத்தப்படலாம்.
 9. இஸ்மார்ட் நிதி
  • AI ஐப் பயன்படுத்தி வரி செலுத்துதல்கள் மற்றும் பரிவர்தணைகளை கண்காணித்தல் மற்றும் ஏதேனும் முரண்பாடுகள் ஏற்பட்டால் எச்சரிக்கைகளை தானியங்குப்படுத்துதல்.
  • அனைத்து அரசு வங்கி செயல்முறைகளையும் காகிதமில்லா வங்கி முறைமையாக்கல், ஒன்லைனில் FD க்கள் திறத்தல் போன்றன.
  • கட்டண நுழைவாயில்களுக்கான தடைகளை நீக்குதல், கொடுப்பனவுகளுக்கான பரிவர்தணை செலவுகளைக் குறைத்தல் மற்றும் கையடக்கத் தொலைப்பேசி பணப் பைகளை பிரபலப்படுத்துதல்.
  • அனைத்து பொது சேவைகள் , வருமான வரி நிரப்புகை போன்ற அம்சங்களுக்கு ஒன்லைன் பண செலுத்துகை முறையை இயலச் செய்தல்.
 10. இஸ்மார்ட் உட்கட்டமைப்பு
  • உள்நாட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்கும், சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் கிராமப் புறங்களில் அதிவேக இணைய இணைப்பைக் கொண்டு வருவதற்கான பைபர் ஆப்டிக் கேபிளினை நிறுவுவதற்கான திட்டத்தை ஆரம்பித்தல்.
   இது தொலை-வைத்தியம், தொலை-கல்வி, E-சுகாதாரம், E -பொழுதுபோக்கு போன்ற அரசு சேவைகளை செயற்படுத்த உதவும்
  • சொத்து உரிமைகளை அறிவதற்கு அனைத்து சொத்து பதிவுகளையும் ஒவ்வொரு பரிவர்தணையையும் எண்மயமாக்கல் Blockchain பயன்படுத்தல்
  • வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் FDIக்கள் என்பன தகவல் தொடர்பாடல் ஆரம்பிப்புக்கள் மற்றும் வெளிவாரி வளங்களில் கவனம் செலுத்தி சிறந்த நிறுவனங்களை ஈர்க்க சிறந்த வர்த்தக கட்டமைப்பில் சுதந்திர வர்த்தக வலயங்களில் இஸ்மார்ட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்தல்.
  • கழிவு நீர் மற்றும் வடிகால் முகாமைத்துவ முறைமையை அறிமுகப்படுத்துதல்.
  • தனியார் துறைக்கான இலக்குகள்.
   • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வருமானத்தை 2025 இல் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக 4 மடங்கு அதிகரித்தல்.
   • தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புக்களை 2025 ஆகும் போது 80,000 ஊழியர்கள் எண்ணிக்கையிலிருந்து 400,000 ஊழியர்களாக 5 மடங்காக அதிகரித்தல்.
   • மேலதிக 320,000 ஊழியர்களை தங்க வைப்பதற்காக 30.2 மில்லியன் சதுர அடியில் அலுவலக கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைத்தல்.
   • டீழுஐ ஊடான அலுவலக கட்டிடங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு அடுத்த 25 வருடங்களுக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரியினை உத்தரவாதப்படுத்துதல்.
   • 2030 இற்கான இலக்கு 800,000 ஊழியர்களுடன் 10 அமெரிக்க டொலர்களாகும்.

  படிமுறைகளை இயலச் செய்தல்.

  • இணைய பாவிப்பு (Internet data) தொடர்பான அனைத்து வரிகளையும் நீக்குதல்.
  • மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பெற்றோர் கட்டுப்பாடுகளுடன் குழந்தைக்கு பாவிக்க கூடிய இணையத் திரையை அறிமுகப்படுத்துதல். இது போன்ற சேவைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்,
   • கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல்
   • மொழித் திறன்களை மேம்படுத்தல்.
   • சிக்கல் தீர்க்கும் தன்மையை மேம்படுத்துதல்.
   • உயர்தரமான உள்ளடக்கத்தை அணுகுதல்.
  • கணிதம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை ஆரம்ப கல்வி நிலையில் இருந்தே ஆரம்பித்தல்.
  • அனைத்து பாடசாலை பாடங்களுக்குமான ஒளிநாடாக்களுடன் இணைய கட்டணம் இல்லாத ஒன்லைன் தளத்தை அறிமுகப்படுத்துதல்.
  • IT மற்றும் AI கற்கைகளை தரம் 9 இல் அறிமுகப்படுத்துதல்.
  • தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் IT மற்றும் AI கற்கைகளை டிப்ளோமா மற்றும் சான்றிதழ் தரத்திலான கற்கைகளாக வழங்குதல் (எதிர்காலத்தில் 40மூ ஆன மாணவர்கள் தொழில்பயிற்சி நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.)
  • அனைத்து பல்கலைக்கழங்களிலும் IT மற்றும் AI இற்கான இளமானி, முதுமானி கலாநிதி பட்டங்களை வழங்குதல் (எதிர்காலத்தில் 50% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களாக இருப்பார்கள்)
   • உலகளவில் முன்னணி தரத்தில் காணப்படும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து அனைத்து அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலும் உயர் தர கேள்வியுடன் கூடிய கற்கைகளை விருத்தி செய்தல்.
   • ORCAD, ../SIlab, MATLAB, AUTOCAD, போன்ற திறந்த உருவகப்படுத்தல் தொகுப்புக்களை ஏற்று வரிசைப்படுத்தல்.
  • Ease of Doing Business index தரப்படுத்தலில் இலங்கையை 100 இலிருந்து 50 ஆம் நிலைக்கு கொண்டு வருதல்.
  • அடுத்த 25 வருடங்களுக்கு தகவல் சேவை நடவடிக்கைகள் மற்றும் உட்கட்டமைப்புக்களுக்கு 0% கூட்டிணைக்கப்பட்ட வரி, 0% VAT மற்றும் 0% பங்குலாப வரி என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்.

   (ஏதேனும் வகையான BPO,KPO,தொகுப்பிற்கான உட்கட்டமைப்பு கூறு, தரவு செயலாக்க சேவைகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள், வலைத்தளங்கள், செய்தி பிரதிநிதிகள் மற்றும் செய்தி முகவர்களின் நடவடிக்கைகள், ஊடகத்திற்கான படம் மற்றும் அங்கங்கள், கணினி அடிப்படையிலான தொலைப்பேசி தகவல் சேவைகள், ஒப்பந்த அல்லது கட்டண அடிப்படையிலான தகவல் தேடுகை சேவைகள் மற்றும் செய்தி துண்டாடல் சேவைகள், பத்திரிக்கை துண்டாடல் சேவைகள் மற்றும் ஏனைய எண்முறை சேவைகள்)

  • அடுத்த 10 வருடங்களுக்கு கணினி இறக்குமதி மற்றும் ஏனைய வன்பொருள் அங்கங்களுக்கு 0% சுங்க வரி, 0% PAL என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்.
  • IBM இ INTEL மற்றும் MICROSOFT போன்ற முன்னணி 100 பல்தேசிய தகவல் தொழில்நுட்ப கம்பனிகளை தங்களது உலக விநியோக மையங்களை இலங்கையில் நிறுவுமாறு அழைத்தல்.
  • அடுத்த 25 வருடங்களுக்கு இலங்கையில் குடியேறிய கம்பனிகளின் தலைமையகத்தை நிறுவுவதற்கு 0மூ கூட்டிணைக்கப்பட்ட வரி, 0% VAT மற்றும் 0% பங்குலாப வரி என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்.
  • உலகளாவிய ரீதியில் இலங்கை கம்பனிகளின் உலக விநியோக மையங்களை நிறுவுதல்.
  • கம்பனியின் ஆரம்பக் கட்டங்களில், அவற்றை ஆதரிக்க பல்வேறு ஆரம்ப கட்டத்தில் உள்ள நிறுவனங்களுக்கு மானிய விலையில் கிளவுட் உட்கட்டமைப்பை வழங்குதல்.
  • கிடைக்கக் கூடிய அனைத்து வேலைவாய்ப்புக்களுடனும், ஒரு ஒருங்கிணைந்த ஒன்லைன் தளத்தை உருவாக்குதல், இவை மக்களின் திறன்கள், விருப்பத்தேர்வுகள் மற்றும் இருப்பிடங்களுடன் பொருந்த வேண்டும்.