இலக்குகள்

 • வருடத்திற்கு 4.2 பில்லியன் தேங்காய் உற்பத்தி என்ற இலக்கினை அடைவதற்கு, தற்போது காணப்படும் 3 பில்லியன் தேங்காய் உற்பத்தியை 40மூ ஆல் அதிகரித்தல்.
Snow

செயற்திட்டம்

 1. தென்னை அபிவிருத்தி துறையின் அறிவினை ஒன்றிணைத்தல், தற்போதைய உலகில் மற்றும் உள்நாட்டில் காணப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து அறிவுபூர்வமான மீட்டல் நிகழ்வுகளை நடாத்துதல்.
 2. தென்னை ஆராய்ச்சி சபை, தென்னை பயிர்ச் செய்கை சபை மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை என்பன ஒன்றிணைந்து தெங்கு துறையினை விருத்தி செய்யும் பொருட்டு ஒரு அங்கமாக செயற்படுதல்.
 3. பிராந்திய அலுவலகங்களை தென்னை பயிரிடப்பட்டுள்ள பிரதேசங்களை அண்டி அமைத்தல். இல்லாவிடின், இந்த தென்னந்தோட்டங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு பிராந்திய அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்ஃஅண்டிய பிரதேசங்களுக்கு அவற்றை மாற்றுதல்.
 4. தென்னை பயிரிடும் நிலத்தினை 20மூ ஆல் அதிகரித்தல், அவ்வாறு அதிகரித்தலின் காரணமாக மேலதிகமாக 200,000 ஏக்கர் நிலத்தினை தென்னை வளர்வதற்காக ஒதுக்க முடியும்.
 5. தென்னந்தோட்டத்திற்கு தற்போது பயன்படுத்தப்படும் மொத்த நிலப்பரப்பு ஒரு மில்லியன் தொண்ணூற்றி ஐந்தாயிரம் (1,095,000) ஏக்கர் ஆகும். தென்னை பயிர்ச் செய்கைக்காக நிலப் பரப்பினை அதிகரிக்கும் பொருட்டு 14,022 கிராம அலுவலர் பிரிவுகளுடன், விவசாய மேம்பாட்டு அதிகாரிகளும் இணைந்து ஒரு ஏக்கருக்கு 50 மரங்களை ஏக்கருக்கு 60 மரங்களாக அதிகரிக்கக் கூடிய நிலங்களை இணங்காண்பதற்கான திட்டத்தை தொடங்குதல்.
 6. விவசாய அபிவருத்தி அலுவலர்களை பயிற்றுவிக்கும் பொருட்டு ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பின்வரும் தலைப்புக்களில் ஒளி நாடாக்களை உருவாக்குதல்.
  • தற்போது காணப்படும் தென்னந்தோட்டங்களில் காணப்பம் வெற்றிடங்களை எவ்வாறு அடையாளங் காணுதல். (சிறு உடைமையாளர்கள் )
  • தென்னை பயிரிடுவதற்கு பயன்படுத்தக் கூடிய ஏனைய சிறிய நிலங்களை அடையாளங் காணுதல்.
  • பயிரிடுதல் பழக்கங்கள்.
  • நீர் முகாமைத்துவம்
  • ஊட்டச் சத்து முகாமைத்துவம்
  • பூச்சி மற்றும் நோய் முகாமைத்துவம்.
  • தென்னைக்கான பண்ணை செயற்படுத்தல்கள் (உபகரணங்கள்)
  • அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள்.
  • தென்னை முறைமைகள்.
  • தென்னைக்கான திட்டங்கள் மற்றும் சேவைகள்
  • தென்னைக்கான சந்தைப்படுத்தல் உத்திகள்.
  • விவசாயி மற்றும் அலுவலர் உறவினை எவ்வாறு பேணுதல்.
 7. 2020 ஆம் ஆண்டின் தென்னை நாற்றுகளின் உற்பத்தி 2 மில்லியன் மட்டுமேயாகும். 2021 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நாற்றுகளை ஆண்டுக்கு 4 மில்லியனாக உயர்த்துவதாகும். வரவிருக்கும் எதிர்காலத்தில் 10 ஆண்டுகளுக்கு அதே எண்ணிக்கையிலான 4 மில்லியன் நாற்றுக்கள் உற்பத்தி தொடர்ந்தால், ஒரு தசாப்தத்திற்குள் 40 மில்லியன் மரங்கள் பயிரிடப்படும்.
 8. இலங்கையில் அதிக அறுவடை தரும் தேங்காய் வகைகளின் நாற்று பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 100 ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட நிலப்பரப்புள்ள மக்களுக்கு எந்தவொரு கலப்பின தேங்காய் வகையிலிருந்தும் 6,400 நாற்றுகளை வழங்குவதன் மூலம் 10 பெரிய அளவிலான தனியார் துறை தேங்காய் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்கு ஊக்குவித்தல்.

  இந்த திட்டத்தின் வெற்றியாக 3 மில்லியன் கலப்பின தேங்காய் நாற்றுகள் கிடைப்பதற்கு காரணமான அமையும்.

  இந்த 10 தேங்காய் நாற்று பண்ணைகளும் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் நாற்றுகளை பகிர்ந்துக் கொள்வதன் மூலம் தென்னைக் கைத்தொழிலை விருத்தி செய்வதற்கு பங்களிப்புச் செய்யும்.

  • அறுவடை பழக்கங்கள்.
  • நீர் முகாமைத்துவ நுட்பங்கள்
  • ஊட்டச் சத்து முகாமைத்துவ நுட்பங்கள்
  • பூச்சி மற்றும் நோய் முகாமைத்துவ நுட்பங்கள்.
  • பண்ணை நடைமுறைப்படுத்தல் (உபகரணங்கள் ) தகவல்.
  • அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய நுட்பங்கள்.
  • தேங்காய் பதப்படுத்தும் முறைகள்.
  • திட்டங்கள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்கள்.
  • புதிய விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தல் உதவி மற்றும் நாற்று வாங்குபவர்களை இணைத்தல்.

  • தற்போது வாங்குவதற்கு நடைமுறையில் இருக்கும் வகைகளான கப்றுவானா, கப்சுவாயா மற்றும் கப்செதா ஆகிய 3 வகைகளில் ஏதேனும் 10 மரங்களை வாங்குவதற்கு அனுமதியை தேவைப்படுத்துகிறது. அனுமதி பெற்றுக் கொள்வதற்கான ஒப்புதல் வழங்கும் நடைமுறைக்கு 365 நாட்கள் எடுக்கின்றன, இது பயனுள்ள பயிர்ச் செய்கையாளருக்கு தொந்தரவாகும்.
 9. நுவரெவியாவின் ஏனைய பிரதேசங்களைத் தவிர வலப்பன, கொத்மல மற்றும் ஹங்குரான்கெத உள்ளடங்களாக இலங்கையின் அனைத்து பிரதேசங்களையும் தென்னை வளர்க்கவும் பயர்ச்செய்யவும் பயன்படுத்த முடியும்.
 10. ஓவ்வொரு கிராமத்திலும் உரங்கள் தொடர்ந்து கிடைத்தல்.
 11. யூடியூப் இல் இலவசமாக பார்வையிட்டு கற்றுக் கொள்ளக் கூடிய வகையில் தென்னை பயிர்ச் செய்கைக்கு தேவையான நீர் முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஒளிநாடாக்களை விவசாயிகளுக்காக பதிவேற்றுதல்.
 12. இந்தியாவின் தழிழ் நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் தென்னை நிபுணர் முறைமையால் உருவாக்கப்பட்ட அப்லிகேஷனை ஒத்த ஒன்றை அறிமுகம் செய்தல்.
  • தென்னைக்கான பயிர்ச் செய்கை பழக்கங்கள்.
  • தென்னைக்கான நீர் முகாமைத்துவம்
  • தென்னைக்கான ஊட்டச் சத்து முகாமைத்துவம்.
  • தென்னைக்கான பூச்சி மற்றும் நோய் முகமைத்துவம்
  • தென்னைக்கான பண்ணை நடைமுறைகள் (உபகரணங்கள்)
  • தென்னைக்கான அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்திய நுட்பங்கள்.
  • தென்னை பதனம் செய்தல்.
  • தென்னைக்கான திட்டங்கள் மற்றும் சேவைகள்
  • தென்னைக்கான சந்தைப்படுத்தல் மற்றும் நிறுவனங்கள்.
 13. புதிய தொழில்நுட்பங்கள், நில விரிவாக்கம், நாற்று நாற்றங்கால் மேம்பாடுகள் மற்றும் வேறு ஏதேனும் புதிய திட்ட முயற்சிகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் காணும் பகுதிகளை அடையாளம் காண இந்தியா மற்றும் இந்தோனெஷியாவின் தென்னை அபிவிருத்தி சபையுடன் ஒப்பீட்டு ஆய்வை மேற்கொள்ளுதல்.
 14. கட்டையான தண்டு மற்றும் உயரத்தில் மெதுவாக வளரக் கூடிய வகையை சார்ந்த தென்னையை அறிமுகம் செய்தல்.
 15. ஒரே தேங்காய் நீர் சுவையினைக் கொண்ட இள நீர்; வகையை அறிமுகம் செய்தல்.
 16. ஏற்றுமதி நோக்கங்களுக்காக, தாய்லாந்தில் காணப்படும் இனிப்பு இள நீரினை போலவே, சுவையைக் கொண்ட இனிப்பு இள நீர்களை அறிமுகப்படுத்துதல்.
 17. திறமையான பயிர் முகாமை
  • ஏற்கனவே ரம்புட்டான், மஞ்சள், மிளகு, வெண்ணிலா, வாழைப்பழம், அன்னாசி, காட்டு அனோதா போன்ற பயிர்கள் பயிரிடப்பட்ட ஒரு மில்லியன் தொண்ணூற்றியைந்து ஆயிரம் நிலங்களை கண்டுபிடித்து சிறந்த அறுவடையை பெறுவதற்கு விவசாயிகளுக்கு உதவுதல்.
  • ரம்புட்டான், மஞ்சள், மிளகு, வெண்ணிலா, வாழைப்பழம், அன்னாசி, காட்டு அனோதா போன்ற பயிர்கள் பயிரிடப்படாத ஒரு மில்லியன் தொண்ணூற்றியைந்து ஆயிரம் நிலங்களை கண்டுபிடித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க மேற்கண்ட பயிர்களை பயிரிடுவதற்கு அறிமுகப்படுத்தல்.
 18. தேங்காய் பருப்பு, நார், சிரட்டை, முடிக்கப்பட்ட பொருட்கள், தேங்காய் ஏக்கல்ஸ் மற்றும் கைவினைப் பொருட்கள் போன்றன 2020 இல் 665 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே சமயம் தேயிலை ஏற்றுமதியானது 1,240 மில்லியனும் இறப்பர் 816 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
 19. இலங்கையின் மொத்த வீட்டு தேவை 5.7 மில்லியன்களாகும். அதில் 36மூ(2 மில்லியன்) வீட்டு பாவணையில் கலப்பான்கள் இருக்கின்றன. 50மூ ஆனோர் மாத்திரமே (1 மில்லியன் ) தேங்காய் பாலினை பிரித்தெடுக்க கலப்பானை பயன்படுத்துகின்றனர். தேங்காய்ப் பாலைப் பிரித்தெடுக்க கலப்பானை பயன்படுத்தாத மீதி 1 மில்லியன் மக்களை அறிவுறுத்தும் வகையில் எவ்வாறு கலப்பானை பயன்படுத்தி தேங்காய்ப் பாலைப் பிரித்தெடுக்க முடியும் என்பது பற்றிய ஒளி நாடாக்களை உருவாக்கலாம்.
 20. வீட்டு சமையலுக்கு தேங்காய் எண்ணெய் பாவிப்பதை குறைக்கும் பொருட்டு தேங்காய் எண்ணெய் பாவிக்காது பொறித்தெடுக்க கூடிய ஏயர் பிரையர்களை அறிமுகம் செய்தல்.
 21. நடப்பட்ட மொத்த ஏக்கர் தென்னைகளில் 5மூ இற்கு (50,000 ஏக்கர்) மானியங்களை வழங்குவதற்கான உத்தி. தற்போது 3,000 ஏக்கர் மட்டுமே மானியத்தால் பயனடைகிறது. இது தென்னையின் கீழ் உள்ள நிலங்களின் பரப்பளவில் 0.3மூ ஆகும்.
 22. தேங்காய் எண்ணெய்யை சில்லறையாக விற்பனை செய்வதை ஊக்குவிக்கவும், பெரும்பாலான சில்லறையாக தேங்காய் எண்ணெய் விற்கும் விற்பனையாளர்களால் விற்கப்படும் தேங்காய் எண்ணெயின் அளவை அதிகரிக்கும் ஒரு வழியாக பாம் ஒயிலை கலத்தல். ஏனென்றால் சுத்தமான தேங்காய் எண்ணெயை வாங்குதல் மிகவும் விலைமதிப்பானதாகும். 1 தொன் சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய 3 ஏக்கர் தேன்னை பயிர்ச்செய்கை செய்ய வேண்டும். மறுபுறம், 1 தொன் பாம் ஒயில் உற்பத்தி செய்ய 1 ஏக்கர் பாம் ஒயில் பயிர்ச் செய்கை செய்ய வேண்டும்.
  இதன் விளைவாக, தேங்காய் உற்பத்தியுடன் தொடர்புடைய செலவுகள் பாம் ஒயில் உற்பத்தியை விட 50மூ அதிகமாகும்.
  இலங்கையில் 200,000 தொன் தேங்காய் எண்ணெய் பெறுவதன் மூலம் 200,000 தொன் பாம் ஒயிலை இறக்குமதி செய்ய 1.7 பில்லியன் கூடுதல் தேங்காய்கள் தேவைப்படுகின்றன (ஒரு தொன் தேங்காய் எண்ணெய்க்கு 8,500 தேங்காய்கள் தேவை.)
  தற்போதைய நடைமுறையில் தேங்காய் எண்ணெயை சில்லறையாக விற்பனை செய்யும் இடத்தில், நுகர்வோர் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அயோடின் அளவை சரிபார்க்கலம்.
  • தேங்காய் எண்ணெயின் அயோடின் அளவு 8-12 வரை இருக்கும்.
  • பாம் ஒயிலின் அயோடின் அளவு 56-60 வரையிருக்கும்.
  • தேங்காய் எண்ணெயை பாம் ஒயிலுடன் கலக்கும் போது, அயோடின் அளவு 25-30 வரை அதிகரிக்கும்.